Home » Articles » சத்குரு பதில்கள்

 
சத்குரு பதில்கள்


ஜக்கி வாசுதேவ்
Author:

ஒருவர் தன் பெயரை எண் கணித முறைப்படி மாற்றி வைத்துக் கொண்டால் அதனால் நல்ல பலன்கள் கிடைக்குமா?

எண் கணிதப்படி பெயரை மாற்றிக் கொண்டால் பயன் உண்டா என்று கேட்கிறீர்கள்.

முதலில் இந்த எண்களை உருவாக்கியவர் யார்? அவை இயற்கையிலேயே இருந்தனவா? நம்முடைய வசதிக்காக நம் விரல்களைக் கொண்டு எண்ணுவதற்கு வாய்ப்பாகத்தான் எண்களை உருவாக்கிறோம். பத்து விரல்கள் என்கிற அடிப்படையில்தான் பத்துவரை எண்களை வரையறுக்கப்பட்டன. நமக்கு பதினான்கு விரல்கள் இருந்திருந்தால் 8,9,10 தாம், தூம் என்று எண்ணிக் கொண்டிருந்திருப்போம்.

நம் வசதிக்கா எண்களை இப்படி உருவாக்கினோம். நம் வசதிக்காக நாம் உருவாக்கிய எண்கள் நம்மீதே ஆளுமை செலுத்தலாமா?

இதற்கு ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன். ஆறேழு வருடங்களுக்கு முன்பு நான் ஒரு மாருதி கார் ஓட்டிக் கொண்டிருந்தேன். பிறகு அதை விற்க முடிவு செய்தேன். எனக்குத் தெரிந்த ஒருவர் அதனை வாங்க முன்வந்தார். நான் அவரிடம் அந்தக் கார் மிக அதிகமான அளு பயன்படுத்தப்பட்டுவிட்டதால் அதை நன்றாகப் பார்த்துவிட்டு விருப்பம் இருந்தால் வாங்கிக்கொள்ளலாம். என்று சொன்னேன். அதற்கு அவர் இல்லையில்லை! எதையும் பார்க்க வேண்டாம். அதை நீங்கள் விற்றால் நான் தான் வாங்க வேண்டுமென்று நீங்கள் அதை வாங்கியபோதே முடிவு செய்து விட்டேன் என்றார்.

ஏன் என்று கேட்டதற்கு உங்கள் காருக்கு அருமையான எண் அமைந்திருக்கிறது என்றார். இத்தனை நாள் இந்தக் காரை ஓட்டியிருக்கிறேன். அதன் அருமையான எண் பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை. கார் எண்ணெல்லாம் இருக்கட்டும். முதலில் ஓட்டிப் பாருங்கள். வாங்கும் முன்பே பிடித்திருக்கிறதா என்று பாருங்கள் என்று வற்புறுத்தினேன்.

அவர், அதையெல்லாம் வேண்டாம் இந்த எண் அமைந்ததே போதும் என்று சொல்லிவிட்டார். எப்படி இப்படி ஒரு மனிதர் இருக்க முடியும் என்று ஆச்சரியமாக இருந்தது.

அவர் என்னிடம் அந்தக் காரின் எண் 333 என்றும், அவரது பிறந்தநாள் 3வது மாதம் 3வது தேதி என்பதால், அன்று காலை 11 1/4 மணி அளவில் காரை எடுத்துச் செல்வதாக கூறினார். நான் அப்போதைய நிலவரத்தில் அந்தக் கார் என்ன விலைக்குப் போகும் என்று அவரையே விசாரிது அதற்கேற்ப ஒரு தொகையைக் கொடுக்குமாறு சொல்லிவிட்டேன்.

அவர் இருக்கும் நிலைபார்த்து அவரை அப்படியே விட்டுவிடக்கூடாது என்று எனக்குத் தோன்றியது. எனவே, அவரிடம், பதிவு எண்தான் வெளியில் உள்ளது. ஆனால் காரின் உண்மையான எண், என்ஜினிலும், சேசிஸ்ஸிலும் இருக்கும். பதவு எண்ணை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். என்ஜின் மற்றும் சேசிஸ் எண்களைத்தான் பார்க்க வேண்டும் என்று சொன்னேன்.

இப்போது அவர் மிகவும் குழுப்பமடைந்துவிட்டார். தனது எண் கணித குருவிம் கேட்கச் சென்றார். அவரோ அந்த எண் எல்லாம் தேவையில்லை. எது பார்வைக்குத் தெரியுமோ அது மட்டுமே தேவை. எனவே அவர் என்னிடம் இருந்து காரை வாங்கிக்கொண்டார்.

அவர் அந்தக் காரை 1 லட்ச ரூபாய்க்கு வாங்குவதாகச் சொல்லியிருந்தார். நானும் சம்மதித்திருந்தேன். அவர் பணத்தைக்கொண்டு வந்தபோது 999 ரூபாய் தரவேண்டும் என்பதற்காக ஒரு ரூபாய் குறைத்துக் கொண்டு வந்திருந்தார். நானும் ஒப்புக்கொண்டேன்.

அவருக்கு 1 ரூபாய் குறைத்துக் தர சங்கடமாக இருந்தது. எனவே அந்த 1 ரூபாய்க்கு பதிலாக பரிய பரிசுப்பொருளையும் சேர்த்துக் கொண்டு வந்திருந்தார். நான் அவரடம் நீங்கள் எதுவேண்டுமானாலும் செய்யுங்கள. இந்தக் காரை நீங்கள் மகிழ்ச்சியோடு கொண்டு சென்றால் எனக்கும் மகிழ்ச்சிதான் என்று சொல்லிவிட்டேன்.

பிறகு நீங்கள் அவர் காரை ஓட்டிக்கொண்டு போகும்போது, பின்னால் சாய்ந்து கொள்ளும் வசதி உள்ள அவரின் இருக்கை திடீரென்று பின்னே நகர்ந்துவிட்டது. அவர் மிகவும் பயந்துவிட்டார். ஏதோ தீயசக்தி அவரைப் பின்னாலிருந்து இழுத்து விட்டதாக எண்ணிக்கொண்டார்.

ஒருமுறை நான் அவரது இல்லத்திற்குபோக நேர்ந்தபோது கார் எப்படியிருக்கிறது என்று கேட்டேன். மிகவும் தயங்கித் தயங்கி அந்தக் கொடிய நிகழ்ச்சி நடந்ததால் காரை விற்றுவிட்டேன் என்றார். இருக்கையின் பிடிமானம் எங்காவது அறுந்து பின்னோக்கி நகர்ந்திருக்கக்கூடும் என்பது கூட அவருக்குப் புரியவில்லை.

நீங்கள் எப்போதும் அச்சத்திலேயே வாழ்வதால் தான், ஜோதிடமும், எண் கணிதமும் உங்கள் வாழ்க்கையில் ஆட்சி செலுத்துகிறது. நீங்கள் அன்பிலோ,ஆனந்தத்திலோ வாழ்வதில்லை. அச்சத்திலேயே வாழ்கிறீர்கள்.

உங்கள் உள்நிலை மீது, உங்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. நாம் உருவாக்கிய எண்களும், சில ஜடப்பொருட்களும் உங்களுக்கு மிகவும் முக்கியமாகிவிட்டன. அவையே உங்கள் மீது ஆட்சி செலுத்துகின்றன. இவை அனைத்துக்கும் மேலான சக்தி உங்களுக்குள்ளேயே இருக்கிறது. ஆனால், அதன்மேல் உங்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. 1,2,3,4 இப்போது உங்களுக்கு முக்கியமாகிவிட்டது.

 

6 Comments

 1. Vasan.n says:

  Thanks sathguru

 2. senthil kumar says:

  What a explanation guruji. I really impressed with guruji’s explanation. This is actually to be followed by every indivitual. Concentration on every work is very important than numbers and astrology.

 3. HARIKARAN says:

  Any Explanation given by Sathguru is a universal truth. If u remove all your assumptions and listen guruji, definitely we will be very clear in our life.

  Hari

 4. SIVASENTHIL says:

  தேங்க்ஸ்

 5. soundhar says:

  Sadhguru’s each and every words are our vethas…

 6. m.boobaan says:

  gud messege

Post a Comment


 

 


May 2002

கேள்வி – பதில்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
“சிந்தனைச்சிற்பி” சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
"சிந்தனைச்சிற்பி" சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
ஓ அன்றில் பறவைகளே!
பொதுவாச் சொல்றேன்
கொட்டிக்கிடக்கிறதா வேலை வாய்ப்பு?
பெற்றோர் பக்கம்
வாழ்க்கை வாழ்வதற்கே!
சாதிக்கச் செயல்புரி
சத்குரு பதில்கள்
சிந்தனைத்துளி
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்…..
நம்பிக்கையும் நானும்
உறவுகள் உணர்வுகள்
மணம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்