Home » Articles » கேள்வி – பதில்

 
கேள்வி – பதில்


admin
Author:

மனசுவிட்டுப் பேசுங்க

பிறர் செய்கிற தவறுகளை மறக்க என்னால் முடியவில்லை. நான் சிறு பிள்ளையா இருந்தபோது மத்தவங்க செய்த தவறுகளெல்லாம் இப்போது நடந்தது போல மனதிறகுள் ஓடுது. அதை நினைக்கும்போதெல்லாம் மனம் கொதிக்கின்றது. என்ன செய்யலாம்.?
(எஸ். ராமசாமி, பாவனி)

ஒரு சின்னக்கதை.

– இரண்டு துறவிகள் ஒரு ஆற்றைக் கடந்துகிட்டிருந்தாங்க.

– வழியில் ஒரு விபச்சாரி. ஆற்றிலோ வெள்ளம கரை புரண்டோடுது.

– விபச்சாரிக்கு ஆற்றைக் கடக்க ரொம்ப பயம். அந்த துறவிங்ககிட்ட உதவி கேட்டான்.

– ஒரு துறவி அவளைத் தொட்டு உதவுவது பாவம் என்று சொல்லி மறுத்து விட்டார்.

அடுத்த துறவி அவளைத்தூக்கி தோளில் வெச்சுகிட்டு ஆற்றைக் கடந்து கரையில் இறக்கிவிட்டார்.

இதைப் பார்த்த முதல் துறவிக்கு ரொம்ப கோபம்.

அடுத்த துறவியை திட்டிகிட்டே வந்தாரு. அதுமட்டுமல்ல; இரண்டு நாள் கழிச்சு குருவை ரெண்டுபேரும் சந்திச்சப்போ “குருவே, அந்த ஆத்தைக் கடக்கும்பது, ஒரு விபச்சாரியைத் தொட்டு தூக்கிட்டான். இது ரொம்ப ரொம்ப கேவலமானது. அதிலிருந்து என் மனசு ரொம்ப படபடக்குது. இத்தனை நாளா அதனால் தூங்கக்கூட இல்லை” என்றார்.

குரு நடந்ததை முழுவதும் கேட்டார். முடிவாக சொன்னார். “அவனோ அந்த விபச்சாரியை ஆற்றைக் கடக்கும் வரையில் தான் தூக்கியிருக்கான். அத்தோடு அவளையும் இறக்கிவிட்டுட்டான். ஆனா, நீயோ, இன்னும் அவளை மனசுல தூக்கிட்டு இருக்கே; உங்கிட்டே களங்கம் இருக்கு” அப்படீன்னாரு.

அதைப்போல எது தேவையில்லாததோ, எது நல்லதில்லையோ அதை அவ்வப்போது மறக்க கத்துக்கணும்.

இல்லைன்னா, மனசு ரொம்ப பாரமாத்தான் இருக்கும். அதனால், மத்தவங்க செய்யற தப்புக்கு தண்டனையை நாம சுமக்கிற மாதிரி ஆகிடும். மனசும் நாளாக நாளாக டென்ஷனாகிடும்.

இதைத்தான் மறப்போம்; மன்னிப்போம் என்று சொல்றாங்க.

ஜான் கென்னடி, இதை கொஞ்சம் வித்தியாசமா சொன்னாரு, உனக்கு தீங்கு செய்தவர்களை மன்னித்துவிடு. அவர்களுடைய பெயரை மட்டும் மறந்து விடாதே!!

இது எதுக்குன்னா, அடுத்த முறை அது போன்ற ஆளுகிட்ட ஏமாறாம எச்சரிக்கையா இருக்கறதுக்கு, அவன் பெயரை மட்டும் ஞாபகம் வைக்கணும். அதனால், நாம் டென்ஷனாகி பாதிப்படையாம இருக்க மன்னித்து விடனும். அதனால் மனப்பாரம் குறையும். அடுத்தது நடந்துவிட்ட தறுகளயே நினைத்து மனதிற்குள் வாழ்பவன் கடந்த காலத்திலேயே வாழ்கிற மனிதனாவான்.

அதனால் நிகழ்காலம் வீணாகிறது.

அதைத் தொடர்ந்து எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிடும்.

ஆகவே, கடந்த காலத்தை மறந்து நிகழ்காலத்தை மகிழ்ச்சியாக்குங்கள். எதிர்காலம் வளமாகும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2002

கேள்வி – பதில்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
“சிந்தனைச்சிற்பி” சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
"சிந்தனைச்சிற்பி" சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
ஓ அன்றில் பறவைகளே!
பொதுவாச் சொல்றேன்
கொட்டிக்கிடக்கிறதா வேலை வாய்ப்பு?
பெற்றோர் பக்கம்
வாழ்க்கை வாழ்வதற்கே!
சாதிக்கச் செயல்புரி
சத்குரு பதில்கள்
சிந்தனைத்துளி
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்…..
நம்பிக்கையும் நானும்
உறவுகள் உணர்வுகள்
மணம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்