Home » Articles » ஓ அன்றில் பறவைகளே!

 
ஓ அன்றில் பறவைகளே!


கந்தசாமி இல.செ
Author:

நினைத்தபடி எல்லாம் நடந்துவிட்டால்? மனித இனம் எப்போதோ அழிந்திருக்கும்.அதனால்தான் ஒன்றை நினைத்தால் வேறொன்றாக நடக்கிறது. பல சமயங்களில் எதுவுமே நடக்காமலும் போய்விடுகின்றது. சில சமயங்களில் விபரீதமாகவும் நடந்துவிடுகிறது.

திருச்சிலிருந்து வந்தபின் எங்கள் தோட்டத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. நிலத்தை உழுது போடுவதும், தோட்டத்தைச் சுற்றி வேலி அடைபதும், இருக்கின்ற கொஞ்சம் தண்ணீருக்கு ஏற்ப காய்கறிச் செடிகள் பயிரிடுதுமாக எனது முழு நேரத்தையும் செலவிட்டேன். எந்த வேலை செய்தாலும் தங்கத்தின் நினைவு பின்னணியாக இருந்து வந்தது.

ஒருநாள் அவர்கள் ஊரில் வாரந்தோறும் நடைபெறும் சந்தைக்கு தோட்டத்துக் காய்கறிகளை விற்கச் சென்றேன். விற்பனைக்கு இட ஏற்பாடு செய்துவிட்டு, தங்கத்தைப் பார்க்கச் சென்றேன். தங்கம் தனியாகத்தான் இருந்தாள். என்னைப் பார்த்ததும் ‘ஓ’ வென்று அழத் தொடங்கினாள்.

‘நாம் மலைக்கோட்டையில் ஏறியது, பஸ்ஸில் உட்கார்ந்து வந்தது பற்றி யாரோ அப்பாவுக்கு சொல்லிவிட்டார்கள். நான் இரண்டு முறை உங்களைப் பார்க்கப் புறப்பட்டபோதும், அப்பா வீட்டைவிட்டு இனி எங்கும் போக்க்கூடாது என்று தடுத்துவிட்டார். நீங்களாவது வந்திருக்கக் கூடாதா?’ அவள் அழுகை மேலிட்டது.

அவள் கண்ணீரைத் துடைக்க அருகில் சென்றேன். என் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். நான் என் நிலையை விளக்கினேன்.

‘அடுத்த ஆண்டு படிப்பதற்குப் போதிய பண வசதியில்லை. அதற்காக தோடத்தது வேலைகளைக் கவனிப்பதில் ஈடுபட்டிருந்தேன். இன்று சந்தைக்கு காயகறிகள் கொண்டு வந்திருந்தேன். அம்மாவை விறகச் சொல்லிவிட்டு உன்னைப் பார்க்க வந்தேன். இனி நான் வருவதையும் உங்கள் வீட்டில் விரும்ப மாட்டார்களே’ என்றேன்.

அவளுக்கு என்னை விட்டுப் பிரிய மனம் இல்லை. “தங்கம் யாராவது வரப்போகிறார்கள் என்றேன்.

“வரட்டும் நம்மைப்பற்றித் தெரிந்துகொள்ளட்டும்” என்றாள்.

“வேண்டாம்; நீ மேலும் தொல்லைக்கு ஆளாக நேரிடும்” என்றேன்.

“சரி, ஏதாவது சாப்பிடுங்கள்” என்று இரண்டு வாழைப்பழம் கொண்டு வந்தாள், ஒன்றைச்சாப்பிட்டுவிட்டு, ‘நீ ஒன்றைச் சாப்பிடு” என்றேன்.

“ஆளுக்குப் பாதி” என்றாள்.

“நீ முதலில் எடுத்துக்கொள்” என்று நீட்டினேன்.

“இல்லை. நீங்கள்தான் முதலில்” என்றாள். இருவரும் உண்டு மகிழ்ந்தோம். அதற்குள் பண்ணையத்து ஆள் வரே நான் விரைவாக விடைபெற்று வரவேண்டியதாகிவிட்டது.

அவள் அன்று கொடுக்க நீளமான கடித்த்தை இன்னும் என்னுள் போற்றி வருகிறேன்.

வீடு வந்ததும், அந்தக் கடிதத்தை எத்தனை முறை படித்தேன்.

“அன்புள்ள…

அப்பா என்னை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முயலுகிறார்கள். நீங்களும் எப்படியாது என்னோடு மருத்துக் கல்லூரியில் சேர்ந்து விடுங்கள். இல்லாவிட்டால் நம்மைச் சுலபமாகப் பிரித்துவிடுவார்கள். நீங்கள் இல்லாமல் நான் இல்லை. என்ன செய்வீர்களோ, என்னை உங்களுடையவளாக ஆக்கிக்கொள்ளுங்கள்.

அண்மையில் எங்களூரில் ஒருதிருமணம் நடந்தது. பெண்ணும் மாப்பிள்ளையும் ஊர்வலமாகப் போனார்கள். ஆனால் எனக்கு அது எப்படி இருந்தது தெரியுமா? நீங்களும், நானும்… அவசரப்படாதே என்கிறீர்களா ஆமாம். உங்களுக்கு எதிலும் பொறுமைதான். இல்லாவிட்டால் அன்று பஸ்ஸில் அணைத்து மகிழும் வாய்ப்பை நழுவ விட்டிருப்பீர்களா? உங்கள் மேல் எனக்கு அளவு கடந்த கோபம் தான்.

நான் படுக்கையில் இருந்தேன். நீங்கள் ஒரு நாள் என் கனவில் வந்தீர்கள். என் அருகில் அமர்ந்தீர்கள். அப்புறம் எழத மாட்டேன்.

இப்படிப் பலப்பல எழுதியிருந்தாள். கற்பனையால் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பது நன்றாக விளங்கியது.

அன்று இரவு பட்ட அவமானம்… அதற்குப் பிறகு எவ்வளவோ நடந்த முடிந்து விட்டது.

தங்கத்தை சென்னை மருத்துக் கல்லூரியில் சேர்த்து இருந்தார்கள் என்னுடைய வசதியின்மை அந்த ஆண்டு என்னைத் தோட்டத்திலேயே நிறுத்திவிட்டது. ஓராண்டு முயன்று உழைத்த பிறகு அடுத்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்து படிக்க எண்ணி இருந்தேன்.

தங்கத்தின் தந்தை சொன்ன சொற்கள் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தன. “அந்தஸ்து – பணம்” இவற்றை எல்லாம் கடந்தத அன்பு என்பத அவர் அறியமாட்டார்.

அவள் ஒரு பைத்தியம். என்னை அளவு கடந்து காதலித்தாள். அவசரம்கூடப் பட்டாள். நானும் அவசரப்பட்டிருந்தால் அவள் வாழ்வில் நீங்காத கறை ஏற்படு இருந்திருக்கும்.

நல்ல வேளை, சில நேரங்களில் ஏற்படுகின்ற தடைகள் அப்போதைக்கு துன்பம் தருவதாக இருந்தாலும் பிறகு எவ்வளவோ நன்மையாக அமைந்துவிடுகின்றன.

இன்று இவற்றையெல்லாம் எண்ணும்போது, சில நேரங்களில் எந்தவித விருப்பு வெறுப்பின்றி, சலனமுமின்றி மூன்றாமவர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளைப்போல் தோன்றுகின்றன.

எப்போதோ படித்த பழைய பாடலில் ஒரு தலைவன் தான் காதலித்த காதலியை கைப்பிடிக்க முடியாமல் போனதை உணர்ச்சியோடு வடித்திருந்தான்.

“ஏ நெஞ்சே! காதலி நல்லவள் என்பதை அறந்தால் மட்டும் போதாது; அவள் நீ எட்டுதற்கரிய உயரத்தில் வல்லவளாகவும் இருக்கிறாள்! என்பதை நீ எப்போதாவது உணர்ந்தது உண்டா?” என்ற வினாவும்.

அந்தப் ஆடலை இந்த இருபது ஆண்டுகளில் எத்தனைமுறை எண்ணிப் பார்த்திருப்பேன். என் இதயப் புண்ணுக்கும் இனிய மருந்தாக அல்லவா இருந்தது அந்தப்பாடல்.

என் துன்பத்தை நான் பொறுத்துக்கொள்ள முடியும். என்ற ஆற்றல் எனக்கு இருந்தது! ஆனால் அவளால் என்னைப் பிரந்து வாழமுடியுமா? என்றுதான் நான் எண்ணினேன்.

நடந்ததோ எதிர்மாறாகப் போய்விட்டது.

தொடரும்….

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment