Home » Articles » மணம் விரும்பும் பணம்

 
மணம் விரும்பும் பணம்


ஜெயசித்ரா குமரேசன்
Author:

நேரமும் பணமும் ஒன்றாக எப்படிக் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொண்டீர்கள்.

இப்போது MLM -ல் வெற்றி பெறுபவர்களுக்கு எப்படி மாதம் ரூ. 50,000/- ஒரு லட்சம் என வருமானம் ஓரிரு லட்சம் என வருமானம் ஓரிரு வருடங்களில் கிடைக்கிறது? தொடர்ந்து வழங்க நிறுவனத்தால் முடியுமா? மற்ற எத்தனையோ வியாபாரங்களில் மிகப் பெரிய முதலீடு செய்து படாதபாடுபட்டாலும் இது ப போன்ற வருமானம் வருவதில்லையே? என்று உங்கள் மனதில் தோன்றுவது நியாயமான சந்தேகங்களே!

தெளிவுபடுத்தும் பணியில் ஒரு சிறிய முயற்சியே இத்தொடர்…

இந்த மல்டி லெவல் மார்க்கெட்டிங் வியாபாரத்தையும், நடைமுறையில் உள்ள மற்ற வகை வியாபாரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். நீங்கள் தெளிவுடன் புரிந்து கொள்வதற்காக.

நடைமுறை வியாபாரத்திற்கு அதிக முதலீடு, முன் அனுபவம், அதிக நேரம், வேலைகு ஆட்கள், சம்பளம், அலுவலக வாடகை, தொலைபேசி, மின்சாரம் போன்ற செலவுகள் உண்டு. மேலும், பலர் ஒரே தொழிலை மேற்கொண்டால் போட்டிகள் தோன்றி வருமானங்கள் குறைந்து பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

MLM வியாபாரத்திற்கு

மேற்கூறிய எதுவுமே தேவையில்லை. தினசரி ஓரிரு மணி நேர உழைப்பு மட்டும் போதுமானது. கிடைக்கக் கூடிய நன்மைகளோ ஏராளம். அவற்றில் முக்கியமானவை பாதுகாப்புடன் கூடிய பரம்பரை வருமானம், சுயமுன்னேற்றம், ஏராளமான நண்பர்கள், அங்கீகாரம், மேலும், குழு அமைப்பு முறையில் போட்டிகள் இல்லை என்ற சூழ்நிலை.

முதல் வகை நடைமுறை வியாபாரத்தைக் கவனியுங்கள்.

தயாரிப்பவர்களைவிடவும், உபயோகிப்பவர்களை விடவும் இலாபம் அடைபவர்கள் இடையில் உள்ளவர்கள்தானே! கடந்த மூன்று நூற்றாண்டுகளாக இந்தியாவில் இந்த முறை வியாபாரம்தான் நடந்து வருகிறது. இதனால் பல கோடி மக்களின் பணம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கே போகிறது. சிலர் மட்டுமே பணக்காரர்களாகவும் பலர் ஏழைகளாகவும் இருப்பது இதனால்தான்.

மேலம், விளம்பரத்திற்கு என நாளொன்றுக்கு நமது நாட்டில் செலவிடும் தொகை எவ்வளவு தெரியுமா? மிகவும் குறைவுதான் ரூ. 700 கோடி ரூபாய். ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் தினசரி ரூ. 7/- நமக்குத் தெரியாமலேயே எடுக்கப்படுகிறது.

விளம்பரங்களில் வரும் ஸ்டார்களுக்கு நாம் அனைவமே ரசிகர்கள்தான். அவர்கள் செய்யும் வேலைகளுக்கு உரிய தொகை நேரடியாக்க் கிடைக்கிறது. அது மட்டுமன்றி நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் விலை ஏற்றப்ப்ட்டு அதுவும் அவர்களுக்கு செல்கிறது.

சிந்தித்துப் பாருங்கள்! விஷயம் மிகவும் சீரியஸானது என்பது உங்குக்கே தெரியும்!

இந்த வியாபாரத்திட்டத்தில் சில பணக்கார்ர்களன் கட்டுப்பாட்டில் பல்லாயிரக்கணக்கான திறமைசாலிகள் பம்பரமாக சுழன்று உழைத்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களு திறமையும் உழைப்பும் அவர்களது வாழ்க்கை நடத்த பயன்படுமே தவிர வாழ்க்கைத் தரத்தை (Life Style) மாற்றி அமைக்கப் பயன்படாது.

என்ன ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைதானே?

சரி, நாமும் இவ்வகை வியாபாரம் ஏதாவது ஒன்றில் ஈடுபடலாம் என்றால் முடிகிற காரியமா? சில்லறை வியாபாராத்திற்கே சில லட்சங்கள் தேவைப்படுகிற சூழ்நிலையில், மொத்த வியாபாரம் எல்லாம் எட்டாக்கனிதான். கவலைப்பட வேண்டாம். தலைவித்தான் என தலையைத் தாழ்த்திக்கொள்ள இது இறைவன் வகுத்த திட்டமில்லை.

தான் ஓய்வெடுக்கும் நேரத்திலும் சந்திரன் மூலமாக இருளைப் போக்க ஒளிவசும் சூரியனைப்போல, இதோ உங்களுக்காக உதித்துவிட்டது மல்டி லெவல் மார்க்கெட்டிங் வியாபாரம்.

பலரை பணக்காரர்களாக புறப்பட்டிருக்கு MLM வியாபாரம் என்னவென்று பார்க்கலாமா?

“பர்கர்” “பிஸா” போன்ற மேலை நாட்டுச் சிற்றுண்டிகளை தாயாரிப்பதில் Rqykkrock முடிசூடா மன்னர். திடீரென ஒரு சிந்தனை அவருக்குத் தோன்றியது. தனக்குத் தெரிந்த வியாபார யுத்தியினை ஓய்வு நேரங்களில் ஏன் பிறருகும் கற்பித்து, அதன்மூலம் அவர்களுக்கும், தனக்கும் வருமானம் வருமாறு செய்யக்கூடாது என்று எண்ணினார்.

அதாவது, அரச பரம்பரை, புத்தகம் எழுதும் எழுத்தாளர்கள், இசை அமைப்பாளரக் போன்றவர்களுக்கு ஒரு முறை செய்த வேலைக்கு காலமெல்லாம் வருமானம் (Royalty) ராயல்டி / பரம்பரை வருமானம் கிடைக்கிறதல்லவா? அதுபோல வர வேண்டும் என்ற தனது கனவிற்கு செயல்வடிவம் தந்தார்.

சுவையாக தயாரித்தல், விற்பனை செய்தல், மக்களை கவருதல், போன்ற தொழில் நுணுக்கங்களை ஒரே ஒரு நிபந்தனையுடன் கற்பித்தார். தனது சொந்த வியாபாரத்தை கவனித்துக் கொண்டே தினசரி ஒரு நபருக்கு கற்பித்தார்.

இன்று 20,000 -த்தற்கும்அதிகமான அளவில் பல நாடுகளில் மிகப் பிரபலமாக செயல்படுத்துவரும் அதிவிரைவு சிற்றுண்டி நிலையம் (Fast Food) உருவாகியது இப்படித்தான். Raykrock இப்போது உயிருடன் இல்லை. அவரது சந்ததிகள் தோரயமாக ஒரு கடையின் மூலம் Raykrok நிபந்தனைப்படி கிடைக்கும் தொகை ரூ. 20,00,000 (இருபது லட்ச) ரூபாய்கள்.

நிபந்தனை என்ன தெரியுமா? Raykrock ஆலோசனைப்படி தொழில் முறையைப் பின்பற்ற வேண்டும். கிடைக்கும் லாபத்தில் 2% அவருக்கு வழங்கிட வேண்டும்.

பாருங்கள் எவ்வளவு எளிமை! ஆச்சரியம்! இதனைத்தான் Bata, Arun, Subiksha, NIIT, APTECH போன்ற நமக்குத் தெரிந்த நிறுவனங்களும் பின்பற்றி வருகின்றனர். இந்த்த திட்டத்தின் பெயர் Franchise Marketing என்பதாகும்.

மார்க்கெட்டிங்கில் இது ஒரு வகை. இதில் ஒருவர் தனது தொழில் அனுபவத்தை ஒரு தொகைக்கு விற்பனை செய்கிறார். இதை விடவும் சிறப்பான மார்கெட்டிங் திட்டம் தான் MLM வியாபாரம்.

எப்படி?

Franchise Marketing ற்கு பெரிய மூதலீடு தேவைப்படும். மேலும் Franchise Marketing – ல் Franchise ஆக செயல்படுவபர் அவரது தொழில் திறமையை, அனுபவத்தை விற்பனை செய்து பல மடங்கில் பணம் ஈட்ட வழியில்லை. இவ்வகை வியாபாரத்தை விட மிகச் சிறப்பானதுதான் Multi Level Markieting (பல்நிலை வர்த்தகம்) Network Marketing (வலைபின்னல் வர்த்தகம்) என்பது.

இந்த முறையில் பொருளை உற்பத்தி செய்பவர்கள் நேரடியாக உபயோகிப்பாளர்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.

உதாரணமா, செல்வமதி என்ற நுகர்வோர் அவருக்குத் தேவைப்படும் பொருள்களை வாங்கிப் பயன்படுத்தி, அதன் தரம், சிக்கனம், எளிதில் பிறருகும் விற்கலாம் என உணருகிறார். உடனே, உற்றார், உறவினர், நண்பர்களுகு அறிமுகம் செய்கிறார்.

நுகர்வோராகத் தொடங்கி அவரே விநியோகஸ்தராகிறார். ஒரு தனி மனிதர் பகுதி நேரத்தில் எவ்வளவு பொருள்களை விற்பனை செய்ய முடியம்? எனவே, ஒவ்வொரு விநியோகஸ்தரும் தனக்கு அடுத்த நிலை விநியோகஸ்தர்களை உருவாக்கி தயார் செய்கிறார்கள்.

ஒவ்வொருவரும் சிறிய அளவில் உபயோகித்தும், விற்பனை செய்தும், செயல்பட தொடங்கும்போது மலையளவு பொருட்களும் விற்று விடுகிறது. ஆமாம், 100% வேலையை ஒரு நபர் செய்வது, கடினம். 1% வேலையை 100 நபர்கள் இணைந்து செய்வது மிக மிக எளிதுதானே!

ஆகவே, இப்பொருட்களை வாங்கி உபயோகிக்கும் பிறரையும் விநியோகஸ்தராக மாற்றி தனக்குத் தெரிந்த வியாபார நுணுகங்களை அவர்களுக்கும் கற்பித்து அவர்களையும் சிறப்பாக செயல்பட வைக்கிறார்.

மாதம் ஒருவரை இது போல உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா? கவனியுங்கள் வெள்ளம்போல் பெருகும் மனித சக்தியை!

செல்வமதி மாதம் ஒருவர் வீதம் 12 நபர்களையும், அவரது குழுவினரும் அவரைப்போல மாதம் ஒருவரையும் அறிமுகம் செய்து பயிற்சி அளித்தால் ஒரு ஆண்டு செல்வமதியின் குழுவில் 2048 விற்பனையாளர்கள் இணைந்து செயல்டுவது என்பது நடைபெறக்கூடிய சாத்தியமான உண்மைதானே! திட்டம் மிகச்சிறப்பானதுதான். சந்தேகமில்லை!

பலருக்கும் சந்தேகம் என்னவென்றால் நம்மால் முடியுமோ? என்ற எண்ணம்தான். விடாமுயற்சி + பயிற்சி + தொடர்ச்சியின் மூலம் அனைவராலும் நிச்சயமாக வெற்றிபெற முடியும்.

சரி, இதன் மூலம் செல்வமதிக்கு எப்படி வருமானம் வருகிறது என்பதைப்பார்ப்போம்.

தான் வாங்கி விற்பனை செய்த பொருள்கள், உபயோகித்த பொருள்களின் மதிப்பிற்கேற்ற தொகையில் ஒரு குறிப்பட்ட சதவிகிதம் வருமானமாகவும், எவ்வளவு பேருக்கு இந்த வியாபார திட்டத்தை எடுத்துக்கூறி, புரிய வைத்து, அவர்கள் வெற்றி பெற உதவுகிறாரோ அதற்குத் தகுந்தாற்போல அதற்குரிய ஊக்கத்தொக வருமானமாகவும் வழங்கப்படுகிறது.

அவரவர் திறமைக் கேற்ப, உழைப்பிற்கேற்ப ஒரு விநியோகஸ்தர் பல்லாயிரக்கணக்கில் ஊக்கத்தொகை பெறலாம்.

சரி, எப்படி இவ்வளவு ஊக்கத்தொகை நிறுவனத்தால் வழங்கமுடிகிறது?

இதற்கு விளக்கம் உங்களுக்கே தெரியும். விளம்பரச் செலவு, இடைத்தரகர்கள் செலவு என்று வீணாவதை யெல்லாம் விநியோகஸ்தருக்கே (70%) வழங்கமுடிகிறது. நுகர்வோருக்கும் இலாபகரமானதே.

எந்த ஒரு நுகர்வோரும் விலையை கவனித்துதான் பொருள்களை முதன்முறை வாங்கி பயன்படுத்தப்படுத்த தொடங்குவர். இந்த வியாபார முறை திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்படும் அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் விலை அதிகம் என்பது போல தோன்றும். ஆனால் மிகவும் சிக்கனமானது என்பதே இரகசியமான உண்மையாகும்.

சர்க்கரை இனிக்கிறது என்பது அவரவர் நாவில் வைத்து சுவைத்துப் பார்த்து உணருவதைப் போல, இதைப் பயன்படுத்தினால் மட்டுமே தெரியும்.

இதற்கு உதாரணமாக நாம் அனைவரும் குளிர்பான்களை விரும்பி அருந்துகிறோமல்லவா, அதனை ஒப்பிட்டுப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.

குளிர்பானம் குளிர்பான பவுடர்

ரூ10/- 500 ML பாட்டில் ரூ. 40/- 1 Box

மேலோட்டமாகப் பார்த்தால் குளிர் பானப்பவுடர் விலை அதிகம் எனத்தோன்றும். ஆனால் குறைந்தது 10 குளிர்பானப்பாட்டில் அளவுக்கு பயன்படும்பொழுது பாதிப்பணம் மிச்சமாவது புரியும். புரிந்த பின்னர் நாம் ஒத்துக்கொண்டு ஏற்றுக் கொள்கிறோம்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்ட இந்தவகை விற்பனை முறை, இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகத்தான் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதிலும் பல்வேறு நிறுவனங்கள் தோல்வியையும், சில நிறுவனங்கள் மிகப் பெரிய வெற்றியையும் அடைந்துள்ளன.

மக்கள் தொகை மிகுந்தம், வேலை வாய்ப்பு குறைந்தும் உள்ள இன்றைய கால கட்டத்தில் குறைந்தமுதலீட்டில் இழப்பு நேருமோ என்ற அச்சமின்றி, முன் அனுபவம், இன்றி, கூட்டு முயற்சியின் மூலம் இந்த புதிய வர்த்தக முறையில் உழைப்பிற்கேற்ற கணிசமான வருமானம் ஈட்ட முடியும்.

தன்னம்பிக்கையுடன் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும் என்றே கூறலாம்.

சாதாரண மனிதனும் சாதனையாளராகலாம். இந்த வகை புதிய வியாபாரத்தின் மூலம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

இதில் மிகவும் கவனிக்க வேண்டியது என்னவெனில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறுவனம், நீங்கள் எந்த குழுவில் யாரிடம் இணையப்போகிறீர்கள், இவற்றில் அமைப்பைப் பொறுத்தே உங்கள் உழைப்பிற்கு வெற்றி கிடைக்கும்.

ஆகவே, அவசரப்படாமல், நிதானத்துடன், நமக்குப் புதிதாக உள்ள இந்த சிறந்த ஆலோசகரிடமோ கலந்து பேசி புரிந்து கொண்டு செயல்பட வேண்டியது மிக மிக அவசியமாகும்.

தொடர்ந்து உங்களது கருத்துக்களையும் எதிர்பார்ப்புகளையும், இத்தொடரின் பயன்களையும் அறிந்துகொள்ளும் ஆவலுடன்

எம். ஜெயச்சித்ரா குமரேசன்,
செல்வமதி புத்தக நிலையம்,
மேட்டூர் ரோடு, ஈரோடு.
போன்: 0424 -267089

எப்படிச் செய்ய வேண்டும் MLM வியாபாரம்?

அடுத்த இதழில்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment