Home » Articles » பொதுவாச் சொல்றேன்

 
பொதுவாச் சொல்றேன்


புருஷோத்தமன்
Author:

கண்ணதாசன் கவிதைகள் புத்தகத்தைப் புரட்டிகிட்டிருந்தேன். அதிலே ஒரு வரி “சுருக்கு”ன்னு தைச்சது. “கத்தியால் தலையையும் சீவலாம். மரத்திலே கலை வண்ணம் செய்து விடலாம். கனல் கொண்டுநாட்தையே எரிக்கலாம். விளக்கிலே கருவாக ஒளிர விடலாம்” அப்படீன்னு.

நான் பொதுவாச் சொல்றேன். கருவியிலே குத்தமிலை. கையாளும் முறையில்தான் எல்லாம் இருக்கு. வாழ்க்கை சுலபமா இருக்கு. வாழ்கை சுலபமா இருக்கறதுக்காக “பணம்”ணு ஒரு கருவி உருவாச்சு. இப்ப பணம தேட எப்படியும் போகலாம்னு ஆனதும், பணத்தாலேயே வாழ்க்கை சிக்கலாயிடுச்சு.

உலக நடப்பைத் தெரிஞ்ச்சுக்கறதுக்காக டீ.வி. வந்துச்சு. அது பொழுதுபோக்கு சாதனமா ஆனதும், டீ.வி.யே பெரிய போதையாயிடுச்சு.

அறிவியல் வளர்ச்சியோட அற்புதமான வரம்னு இன்டர் நெட்டைச் சொன்னாங்க. இப்ப இன்டர்நெட்டிலே என்னென்ன அக்கிரமெல்லாம் பண்ணலாம்னு வெட்ட வெளிச்சயமாயிடுச்சு.

நான்பொதுவாச் சொல்றேன், விஞ்ஞானம் வளர வளர மனிதனுடைய வசதிகள் மாதிரியே வக்கரம் வளர்றதும், அதனால் பல அப்பாவிகள் பாதிக்கப்படறதும், அடிக்கடி நடக்குது. அப்படீன்னா என்ன அர்த்தம்? அறிவியல் வளர்ச்சி வேற அறிவு வளர்ச்சி வேற அப்படீன்னு அர்த்தம்.

அடுத்தவனுக்கு வர்ற துன்பத்தை, தன்னுடைய துன்பமா நினைக்கத் தோணாத போது, அந்த அறிவுக்குப் பயனே இல்லை. அப்படீங்கிறார் திருவள்ளுவர். சீட்டு நித நிறுவனம் தொடங்கி டேட்டா புராஸ்ஸிங்வரை எல்லாமே அச்சத்துக்குரியதா ஆனது எதனால?

நான் பொதுவாச்சொல்றேன். ஆசை இருப்பது வளர்ச்சிக்குக் கை கொடுக்கும். ஆனா, பேராசை பெரு நஷ்டம்., அப்படீங்கறதுதான் இந்தக் குறுக்கு வழகள் வழியா நாம் கத்துக்கற பாடம். எற்றிக்கான ஒரே குறுக்கு வழி உழைப்புதான். அப்படீன்னு சொல்லுவாங்க. இதை அடிக்கடி மறந்துடதுதான் ஆபத்துகளுக்கு அடிபப்டைக் காரணம்.

பணத்தாசையே இல்லாம சாமியாராப் போக வேண்டாம். அதுக்காக பணத்தாசையால மிருகமாகவும் மாற வேண்டாம். பணம், அறிவியல், தகவல் தொடர்பு எல்லாமே வாழ்க்கை வசதிக்கான கருவிகள் தானே தவிர, அதுவே வாழ்க்கையா ஆயிடாது.

நான் பொதுவாச் சொல்றேன். இதையெல்லாம் கட்டுப்படுத்தறது அரசியல் சட்டத்தாலே மட்டும் சாத்தியமாகாது. அறிவுப்பூர்வமான அணுகுமுறை வழியாத்தான் சரி செய்ய முடியும். அழிவுகளிலிருந்து காப்பாற்ற அறிவு பயன்படாத போது படித்த பாமரர்கள்னு தானே பேரு.

ஆராயத் தூண்டுவதே ஆறாவது அறிவு
கூடாத ஆசைகள் கொண்டுவரும் அழிவு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2002

உள்ளத்தோடு உள்ளம்
பொக்கிஷம் ஏது?
தோல்வி உங்களைத் துரத்துகிறதா?
பொதுவாச் சொல்றேன்
ஓ அன்றில் பறவைகளே!
உறவுகள் உணர்வுகள்
வாசகர் கடிதம்
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவதெப்படி?
மனித சக்தி மகத்தான சக்தி
கேள்வி பதில்
மனம் விரும்பும் பணம்
தொழில்முறை பரிமாற்றம்
நம்பிக்கையும் நானும்
வெற்றியின் மனமே