Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

உலகப் பொருளாதாரம் தொடங்கி உள்ளூர் பொருளாதாரம் வரை எல்லாமே நடுக்கத்திலிருக்கிற நேரமிது. அரசுப் பணிகூட அவ்வளவு சிறப்பில்லையோ என்னும் வண்ணம், வளர்ச்சிகளை வாய்ப்புகள் வறட்சி நிலை காணுகிற சூழல்.

இந்த நிலையின் உண்மையை நினைவில் கொள்வதும், அபாயகரமான சூழலை ஆற்றலால் வெல்வதும், ஒவ்வொருவருக்கும் உரிய கடமை. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது பழமொழி, “வாய் என்ற சொல்லுக்கும் வழி என்னும் பொருளுண்டு.

எத்தனை குறுகலாய் வாழ்க்கை சுருங்கினாலும், அதனை விரிவு செய்யும் அறிவு ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது. நீச்சல் தெரியாமல் நதியில் விழுந்தவர்கள் கூட கையை காலை உதைத்து எப்படியோ கரை சேர்ந்து விட முழு முயற்சி மேற்கொள்வது போல, நெருக்கடியான நேரங்களில் கூடுதல் தெளிவோடும், கூடுதல் துணிவோடும் நாம் கரையேற வேண்டும். கண்டு கொண்டிருக்கிற கனவுகள் நிறைவேற வேண்டும்.

அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்வோம்.

நிச்சயம் வெல்வோம்.

வாழ்த்துக்களுடன்,
ஆசிரியர் குழு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2002

உள்ளத்தோடு உள்ளம்
பொக்கிஷம் ஏது?
தோல்வி உங்களைத் துரத்துகிறதா?
பொதுவாச் சொல்றேன்
ஓ அன்றில் பறவைகளே!
உறவுகள் உணர்வுகள்
வாசகர் கடிதம்
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவதெப்படி?
மனித சக்தி மகத்தான சக்தி
கேள்வி பதில்
மனம் விரும்பும் பணம்
தொழில்முறை பரிமாற்றம்
நம்பிக்கையும் நானும்
வெற்றியின் மனமே