Home » Articles » வாசகர் கடிதம்

 
வாசகர் கடிதம்


admin
Author:

ஒருவனுக்கு எது இல்லை என்றாலும், தன்னம்பிக்கை இருந்தாலே, வெற்றி பெறுவான் என்பதை உணர்த்தியது விமலா ரமணி அவர்களின் பேட்டி தொழில் முனைவோர்க்குத் தேவையான 15 குணநலன்களை வெளியிட்டமைக்கு நன்றி.

கே. பிரஷ்னேவ்
நாகபட்டினம்

“வாடிக்கையாளர்களே மன்னர்” டிப்ஸ் மிக அருமை. செல்வந்தரின் முக்கிய சோத்திரம் கட்டுரைத்தொடர் நன்றாக உள்ளது. தொடர்ந்து நல்ல நல்ல கட்டுரைகளை வழங்கி வரும் இதழுக்கு பாராட்டுக்கள்.

R. செந்தில்குமார்
கோவை – 1

தொழில் முனைவோர்க்குத் தேவையான சிறப்பான குணநலன்களை – பதினைந்து சிறு பிரிஉகளாகரத்தினச் சுருக்கமான “நறுக்கென்றும சொன்னதற்கு நன்றி.

செல்லக்குட்டி,
துப்பாக்கித் தொழிற்சாலை

விமலா ரமணி அவர்களின் பேட்டியில் எழுத்தாளர் அனைவரும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்டியிருக்கிறார். எல்லா எழுத்தாளர்களும் இதை கடைப்பிடித்தால் நாடும் நலம் பெறும்.

இராம நாகப்பன்.
மதுரை

“சட்டங்கள்” ஆரம்பமாகட்டும் என்று தலையங்கத்தில் தொடங்கி, அகங்காரம் குறித்த விழிப்புணர்வு, விழுந்தாலும் தாழாமல் இருக்கும் தலைமைப்பண்பில் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கே எழுந்திருக்க அறிவுரை கூறி, நல்ல நண்பர்களை அறிமுகப்படுத்திய இதழுக்கு நன்றி.

R. சந்திரன் ஜானகி, வெள்ளக்கோவில்

“மனசுவிட்டுப் பேசுங்க” பகுதி ஊக்கம் தருவதாக உள்ளது. “நல்ல நண்பன் வாழ்வல் துணைவன்” மெர்வின் அவர்களின் கட்டுரை பாராட்டுக் குரியது.

கி. சீனிவாசன் திருவையாறு.

“வெற்றிக்குரிய முதல் படியை அறிமுகம் செய்த நிறுவனர் பக்கக்” கட்டுரை அருமை. ஜக்கி அவர்களின் தொடர் அருமையாக உள்ளது. “உறவுகள் உணர்வுகள்” பாராட்டப்பட வேண்டிய தொடர்.

பா. வசந்தன், கோபி.

“உறவுகள் உணர்வுகள் பாசாமான தொடர் “பாட்டியின் முந்தானையை போர்த்திக் கொண்டு அந்த கதகதப்பில் தூங்கிய நாட்களை மறக்க முடியாமல்” என்ற வரிகள் மனிதர்கள் கடந்து வந்த பாதை நமக்கு இப்போது என்ன வயதானாலும் நம்மை 5 வயதுக்கு அழைத்துச் சென்று விட்ட தங்கை செலின் எழுதும் தொடர் தொடரட்டும்.

M.S.பக்கிரிசாமி, மயிலாடுதுறை


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2002

பெற்றோர் பக்கம்
ஓ அன்றில் பறவைகளே!
மனம் விரும்பும் பணம்
கேள்வி பதில்
பொதுவாச்சொல்றேன்
மனதி சக்தி மகத்தான சக்தி
வணக்கம் தலைவரே!
பிரச்சனைகளை சமாளிக்கும் பார்முலா
கேள்வி பதில்
இலட்சியம் வெற்றிக்கு அடிப்படை
வாசகர் கடிதம்
இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?
உறவுகள் உணர்வுகள்…
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கை நானும்
முயற்சி சிறகுகளை