Home » Articles » இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?

 
இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?


கந்தசாமி இல.செ
Author:

இன்றோடு இந்த ஆண்டு முடிகின்றது. நாளை புத்தாண்டு தொடங்குகிறது. இந்த ஆண்டிலும் ஏன் இத்தனை ஆண்டுகளாகவும் நாம் சாதித்து என்ன என்று ஒவ்வொருவரும் எண்ணிப் பார்ப்பதும், இதுவரை நேர்ந்துள்ள குறைகளைக் களைந்து நிறைகளைப் பெருக்கிக் கொள்வதும், வருங்காலத்திற்கான திட்டங்களை வகுத்துக் கொள்வதும் நம் கடமையாகும்.

நம்மை நோக்கி நாமே

“நீங்கள் இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்! உங்கள் சாதனைகள் என்ன?” என்று மற்றவகளைப்பார்த்துக் கேட்டே பழக்கப்பட்ட நாம், இப்போது அதே கேள்வியை நம்மைப் பார்த்து நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. காரணம் எல்லாருக்கும் தங்களைத் தவிர மற்றவரகள் மீதே குறை சொல்லுவதால் இந்தக கேள்வி நம் மீதே திருப்பிவிடப்படுகிறது.

இந்த்தக கேள்வி எல்லோரும் தங்களைப்பார்த்துத தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வியாகும். இதற்கு எந்த அளவு விடை கிடைக்கின்றது என்பதையும், அதற்குரிய தீர்ப்பு என்ன என்பதையும் அவரவர்கள் மனசாட்சிகளையே நீதபதிகளாக அமர்த்தி தீர்ப்புச் சொல்ல வைக்க வேண்டும்.

அலுவலர்கள்

நீங்கள் அலுவலராக இருந்தால் கடமைகளை தாமதிக்காமல், வேண்டியவர் வேண்டாதவர் என்று வேறுபாடு காட்டாமல் சோம்பல் கொள்ளாமல் உரிய நேரத்தில் செய்திருந்தால், உரிய முடிவு எடுத்திருந்தால், எவ்வளவு பணிகள் ஒழுங்காக நடந்து முடிந்திருக்கும். ஆனால் மக்கள் எந்த அளவு நன்மை அடைந்து இருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்யத் தவறியதால், பொறுப்பைபத் தட்டிக் கழித்ததால் ஏற்பட்ட இழப்புக்களையும் எண்ணிப் பார்த்த இனியேனும் விரைந்து, நேரிய முறையில் செயல்படத் தொடங்க வேண்டும்.

நீங்கள் தொழிலாளராக இருந்தால் நாம் உழைத்தது எவ்வளவு, பெற்றது எவ்வளவு நாம் இன்னும் இனியும் என்ன செய்ய வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தொழிலாளர்கள் மட்டுமின்றி தொழிலை நிர்வகிக்கின்ற நிறுவனங்களும் இதனை கணித்துப்பார்த்துக் கடமையாற்ற வேண்டும்.

பெற்றோர்கள்

இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து விட்டோம். இதுவரை நாம் சாதித்தது என்ன என்று பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளத் தவறினால், அவர்களது பிள்ளைகளே அந்தக் கேள்வியைக் கேட்கத் தயாராக இருக்கிறார்கள்.

அதனால் பெற்றோர்கள் பொருளாதார வகையில், பிள்ளைகளுக்குக் கல்வி – தொழில் பழக்கிய வகையில் – குடும்பத்தைப் பொறுப்பாக நடத்திய வகையில் – உறவு முறைகளைச் சீராக வைத்துக் கொண்ட வகையில், பணியாற்றும் இடத்தில் நாம் நடந்து கொண்டதில் நல்ல குடிமகனாக வாழ்ந்ததில் நாம் சாதித்து என்ன? சாதிக்கத் தவறியது என்ன என்பதைக் கணக்கிட்டே பார்க்க வேண்டும்.

மகனும் மகளும்

பதினைந்தையும் இருபதையும் இருபத்தி ஐந்தையும் கடந்த பிள்ளைகள் படிப்பவர்களாய் இருப்பின், நாம்நாள் தோறும் புதிதாக்க் கற்றுக் கொண்டது என்ன? ஆண்டுதோறும் எந்த அளவில் அறிவில், பண்பில், தன்னம்பிக்கையில், பொறுப் புணர்ச்சியில் வளர்ந்துள்ளோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

வேலைக்குப் போவோர்

பணியில் இருப்போரானால் ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் இளமையில் நேரமும் சிரம்மும் பார்க்காமல் கூடுதலாகப்பணிபுரிந்து எந்த அளவு நல்லபெயை ஈட்டிக் கொண்டுள்ளோம் என்று பார்க்க வேண்டும். இப்பெயர் வருங்கால வளர்ச்சிக்குநாம் செய்யும் முதலீடு ஆகும்.

கணக்குப் பார்ப்போம்

இவ்வாறு ஒவ்வொரு குடும்பத்தினரும், ஒவ்வொரு தனிமனிதனும், வங்கியில் அன்றாம் கணக்குப்பார்ப்பது போல், செய்ததும், செய்யாததும் இது இது எனக் குறித்து, முடிந்ததற்கு வருந்தாமல் இனி வருங்காலத்திலாவது இத்தகைய வருத்தம் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற போக்கில் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

திட்டமிடுவோம்

இத்தகைய முறையான வாழ்விற்கு ஆண்டின் தொடக்கத்திலேயே திட்டமிட வேண்டும். இந்த ஆண்டில் இன்னின்ன செயலகளச் செய்வோம். அதற்கான வழிமுறைகள் இன்ன இன்ன? அதற்கான முதலீடு இவ்வளவு. அதற்காகும் காலம் இத்தனை மாதங்கள் என்று திட்டங்கள் தீட்டிச் செயல்படவேண்டும்.

சென்ற ஆண்டில் முடியாதவை, முயன்றும் முடிக்க முடியாதவை இவை இவை. அதற்குரிய காரணங்கள் என்ன என்பன போன்றவற்றையும் எண்ணிப் பார்த்து இதுவரை நீங்கள் சாதித்து என்ன என்று ஒரு பட்டியல் போட்டுப் பாருங்கள் நீங்கள் சாதனையாளரா அல்லது சாதாரண மனிதரா? என்பது விளங்கும். இன்று முதலாவது, இந்த ஆண்டிலாவது புதிய வாழ்வைத் தொடங்குவோம்.


Share
 

1 Comment

  1. BHARATHI says:

    நல்ல செய்தி

Post a Comment


 

 


January 2002

பெற்றோர் பக்கம்
ஓ அன்றில் பறவைகளே!
மனம் விரும்பும் பணம்
கேள்வி பதில்
பொதுவாச்சொல்றேன்
மனதி சக்தி மகத்தான சக்தி
வணக்கம் தலைவரே!
பிரச்சனைகளை சமாளிக்கும் பார்முலா
கேள்வி பதில்
இலட்சியம் வெற்றிக்கு அடிப்படை
வாசகர் கடிதம்
இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?
உறவுகள் உணர்வுகள்…
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கை நானும்
முயற்சி சிறகுகளை