Home » Articles » நல்ல நண்பன் வாழ்வின் துணைவன்

 
நல்ல நண்பன் வாழ்வின் துணைவன்


மெர்வின்
Author:

அமெரிக்க, மனோத்ததுவ டாக்டர் எர்லின் இருபது ஆண்டுகாலாமாக குழந்தைகளின் மனநிலையை ஆராய்ச்சி செய்து ஒரு தெளிவான முடிவினைக் கூறினார்.

“பெற்றோர்களால் குழந்தையின் உடலை வளர்க்க முடியம். ஆசிரியர் அறிவைத்தூண்டிவிட இயலும். ஆனால் ஒரு குழந்தை திடமான உள்ளமும், தன்னம்பிக்கையும் பெற்று – உலகத்தில் தன் வளர்ச்சிக்குத் தடைபோடும் சக்திகளைத் தகர்த்துத் தூளாக்கும் துணிவு பெறுவது அவர்களின் நண்பர்களின் துணையைக் கொண்டுதான்” என்று.

வசீகரமான சூழ்நிலையில் கவலையே இல்லாமல் ஆனால் நண்பர்கள் என்ற தொடர்பற்று வளர்ந்த ஒரு குழந்தையையும்;

கவனிப்பாரற்று தொல்லைகளையும், துயரங்களையும் சந்தித்து, அதனால் மனமொத்த நண்பர்களுக்கு மத்தியில் வளர்ந்த ஒரு குழந்தையையும்;

ஆராய்ச்சி செய்தபொழுது அதிக வேற்றுமைகளைக் காண முடிந்தது.

நண்பர்கள் தொடர்புடன் வாழ்ந்த குழந்தைக்கு தன்னம்பிக்கையும், துணிவும் திருத்தமாகச் செயலாற்றும் பண்பும் இருந்தது.

இந்தக் குழந்தையின் திறமையின் மூன்றில் ஒருபங்கு கூட நண்பர்கள் தொடர்பற்று வாழ்ந்த குழந்தையிடம் அமைந்திருக்கவில்லை.

தவிர்க்க இயலாத நெருக்கடிகள் ஏற்படும்பொழுது குழந்தைகள் தங்கள் நண்பர்களுக்கு உதவி செய்கின்றன.

ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றிய ஆலோசனைகளைக் கூறி அபிப்ராயங்களைப் பரிமாறிக் கொள்ளவதும், ஒத்தாசை செய்வதும் இயல்பாக இருக்கின்றன.

ஒரே ஒரு நண்பனை மட்டும் பெற்ற குழந்தையை விட பல நண்பர்களின் தொடர்பு கொண்ட குழந்தை அறிவு முதிர்ச்சிபெற்று விளங்குகிறது. அதன் நடவடிக்கைகளில் புத்திசாலித்தனம் கலந்து மிளிர்கிறது.

தனிமையில் வளரும் குழந்தை அனுபவத்தை மட்டுமே நம்ப வேண்டியிருக்கிறது. பல நண்பர்களுடன் பழகிய குழந்தை ஆராய்ச்சி மனப்பான்மையைப் பெருக்கி, தீமையை முன்னமாக உணர்ந்து கொள்கிறது.

நட்பு, இளம் உள்ளத்திலேயே இந்தவிதமான ஆழ்ந்து இருக்கின்றபோது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்துவரும் நட்பின் பிணைப்பு எவ்வளவு தூரம் மென்மை உடையதாக இருக்க வேண்டும்?

இதன் காரணமாகத்தான் ஒரு அறிஞர் கூறுகிறார் “மனிதன் சமுதாயப் பிராணி, அவன் தனித்து வாழ முடியாது” என்று.

தனியாக இருக்கும் மனிதன் சமுதாயத்திற்குள் வரமுடியாது. காட்டில் தனியாக ஒரு மனிதனை வைத்துவிட்டால் அவன் விரைவிலேயே இறந்துவிடுவான் அல்லது பைத்தியம் பிடித்து விலங்குகளைப் போல் அலைந்து திரிவான். அவனும் வனவிலங்குகளில் ஒருவனாக மாறிவிடுவான்!

இது விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் கண்டுபிடித்த உண்மை!

ஆனால் இதற்கு அப்பாற்பட்டவர்கள் ஞானிகளும், முனிவர்களும்!

அவர்கள் மனதை அடக்கி ஐம்புலன்களை ஒடுக்கி தியானத்தில் ஆழ்ந்துவிட்டபடியானால் தவசீலர்களாக மாற முடிந்தது.

இதை எல்லோராலும் கடைபிடிக்க முடியாது. சாதாரண மனிதனாக வாழும் நமக்கு கட்டாயம் நண்பர்கள் வேண்டும்.

எப்படி ஆணுக்குத் துணையாக பெண் இருக்க வேண்டுமோ அதேபோல்தான் மனிதனுக்கு இணையாக மற்றொரு மனிதன் அவசியம் வேண்டும்.

மனிதன் தனியாக இருப்பதைக் கண்டு, அவனக்குத் துணையாக கடவுள் பெண்ணைப் படைத்தார் என்று பைபிள் கூறுகிறது.

நாம் சமுதாயத்தில் நல்லபடியாகவும் மகிழ்ச்சி நிரம்பியவர்களாகவும் வாழவேண்டுமானால் நமக்கு நிச்சயம் நண்பர்கள் வேண்டும்!

நல்ல நண்பன் நம்முடன் வாழ்நாள் வரைக்கும் தொடர்ந்து வருவான். நம்முடனே தொடர்ந்து இருப்பான்.

“நண்பன் இதயத்தின் ஒலியாக இருக்கிறான்” என்கிறார் எமர்சன்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2001

நம்பிக்கையும் நானும்
மனசு விட்டுப் பேசுங்க!
வணக்கம் தலைவரே
மனித சக்தி மகத்தான சக்தி
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
உள்ளத்தோடு உள்ளம்
சிரிப்போம் சிறப்போம்
வெற்றியின் மனமே
வாசகர் கடிதம்
உன் வாழ்வு மலரும்!
வாடிக்கையாளரே மன்னர்
உறவுகள் உணர்வுகள்…
உற்சாக நீரூற்று
நல்ல நண்பன் வாழ்வின் துணைவன்
நிறுவனர் பக்கம்
தொழில் முனைவோர்க்குத் தேவையான குணநலன்கள்