Home » Articles » தொழில் முனைவோர்க்குத் தேவையான குணநலன்கள்

 
தொழில் முனைவோர்க்குத் தேவையான குணநலன்கள்


admin
Author:

தொழில் முனைவோர் கீழ்க்கண்ட குணநலன்களைப் பெற்றிருத்தல் அவசியம். தாங்கள் ஒரு தொழிலை நிறுவி வெற்றி பெறச்செய்யும் சாதனையில் ஈடுபட்டிருகிறோம என்ற எண்ணம் மனதின் அடிதளத்தில் இருக்க வேண்டும்.

சிறு தொழிலைத் தொடங்கி நடத்தும்போது தங்களுக்கன்று பொருள் ஈட்டுவதுடன் வேறு பலருக்கும் வேலை வாய்ப்புக் கொடுத்து உதவ முடியும். இது தவிர தொழில் மூலம் இயற்கையின் வளங்களை நுகர்வோர்க்கு வாழ்க்கை வசதிகளாக மாற்றி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொறுப்பையும் ஏற்கின்றனர்.

சிறு தொழிலில் ஈடுபட விரும்புவோர் மற்றவர்களை விடச் சிறப்பான சில குணநன்களைப் பெற்றிருத்தல் அவசியம்.

1. தொழில் தாகம்

தொழிலைத் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்ற தனியாத தாகம் வேண்டும்.

2. சிரித்த முகம்

நகல்வல்லர் அல்லரார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்(று) இருள்.

(திருக்குறள் 999)

பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற்காலத்திலும் இருளில் கிடப்பதாகும்.

எல்லாத் தொழிலிலும் பொதுமக்களுக்குடன் நெருங்கிப்பழகும் அவசியம் ஏற்படும். ஆகவே, தொழில் முனைவோர் பொது மக்களிடம் சிரித்துப் பழகுகின்ற பழக்கத்தையும், குணத்தையும் பெற்றிருத்தல் வேண்டும். குறிப்பாக ஏற்கனவே தொழில் ஈடுபட்டுள்ளவர்களுடன் விரும்பிப் பழக வேண்டும்.

3. மனதில் உறுதி இருக்க வேண்டும்

முன் வைத்த கால் பின்வைக்காதே என்பதை மனதில் கொள்ள வண்டும். தொழிலின் தொடக்க காலத்தில் பல தனைகளை எதிர்கொள்ள நேரிடும். அச்சமயங்களில் மனம் தளராத உறுதி கொள்ள வேண்டும்.

4. முயன்றால் முடியும்

தொடங்கும் தொழில் வெற்றி அளிக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். நம்பினோர் கெடுவதில்லை. மனமுண்டானால் வழி உண்டாகும். போன்ற பழமொழிகளை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.

5 எதையும் தாங்கும் இதயம்

தொழிலில் வெற்றியும் தோல்வியும் இயற்கை. தோல்வியைக்கண்டு துவளாத மனம் வேண்டும். எதையும் தாங்கும் இதயம் தொழில் துறையின் வெற்றிக்குத் தேவையான ஒன்று.

6. தலைமைப் பண்பு

எந்தத் தொழில் அமைப்பானாலும் அதன் தலைமை நிர்வாக, முக்கியமானவர். நமக்கு பொருள் விற்பவர்கள் ஆகிய பலர் கூட்டாக ஈடுபடுகின்றனர். அவர்களுக்குத் தலைமை தாங்கி வழி நடத்திச் செல்கின்ற அறிவும் திறனும் வேண்டும். புகை வண்டியின் வேகம் அதன் இன்ஜினின் வேகத்தைப் பொறுத்தது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

7. காரியத்தில் கண்

தொழில் தொடங்கி நடத்தும்போது சிறு தொழிலாகப் பதிவு செய்தல், பஞ்சாயத்து, நகராட்சி போன்றவற்றின் அனுமதி பெறுதல், வங்கிக்கடன் பெறுதல், மின் இணைப்புப் பெறுதல், விற்பனை வரி பதிவு செய்தல், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறுதல் போன்ற பல அரசு அனுமதிகளைப் பெற, வேண்டியவற்றை தாமதமின்றிச் செய்ய வேண்டும். இம்முயற்சியில் பல நேரங்களில் சத்திய சோதனை வரும். வரும்போது நேர்மைக்காகப் போராட வேண்டும் என்பதைக்கொஞ்சம் ஒதுக்கி வத்து விட்டுக்காரியத்தில் கண்ணாயிருக்க வேண்டும்.

8. பொறுப்பேற்றல்

தொழில் நடத்தும்போது பல பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டி வரும். தரமான பொருள்களைக் குறைந்த விலையில் உற்பத்தி செய்தல், ஊழியருக்கு நியாயமான ஊதியம் வழங்குதல், அரசு விதிகளை நிறைவேற்றுதல், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துதல், வரி செலுத்துதல் போன்ற பல பொறுப்புகளை விரும்பி நிறைவேற்ற வேண்டும்.

9. உலையா உழைப்பு

தொழில் முனவோர் காலநேரம் பாராது கடினமாக உழைக்க வேண்டும். காரியம் கை கூடும் வரை மெய்வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது உழைத்திட வேண்டும்.

10. முடிவெடுத்தல்

தொழில் உலகம் கடல் போல் பரந்துபட்ட ஒன்று. இதில் நாள்தோறும், கணந்தோறும் பல மாற்றங்கள் நடைபெறுகின்றன. அவற்றின் தாக்கங்களினால் தங்கள் தொழிலுக்கு ஏற்படும் விளைவுகளையும், அதைச் சமாளப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

11. விழிப்புணர்வு

தொழில் உலகம் கடல் போல் பரந்துபட்ட ஒன்று. இதில் நாள்தோறும் , கணந்தோறும் பல மாற்றங்கள் நடைபெறுகின்றன. அவற்றின் தாக்கங்களினால் தங்கள் தொழிலுக்கு ஏற்படும் விளைவுகளையும், அதைச் சமாளிப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

12. தொலைநோக்கு

தாங்கள் ஈடுபட்டுள்ள தொழிலின் எதிர்கால வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தொலைநோக்குப் பார்வை அவசியம். அதற்கேற்பச் செயல்பட வேண்டும்.

13. நன்மதிப்பு

தொழிலில் வெற்றிபெற நன்மதிப்பு (Goodwill) பெரிதும் உதவுகிறது. நற்பணிகளுக்கு நன்கொடை கொடுத்தல், கல்வி மருத்துவ நிறுவனங்கள் நடத்துதல், ஆக்கப்பணிகளுக்குத் துணை நிற்றல், எளிமையாக, நேர்மையாக வாழ்தல், போன்றவற்றால் இந்த நன்மதிப்பைப்பெற முடியும்.

14. திசை திரும்பாமை

எடுத்த தொழிலில் கவனமாக இருக்கவேண்டும். வெற்றி பெறும் வரை வேறு திசையில், தவறான பாதைகளில் கவனம் செலுத்தக் கூடாது. வெற்றியினால் கர்வமும், திசை திருப்பமும் புகாவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு தொழிலில் கவனம் கொள்வது வெற்றிக்கு வழி வகுக்கும்.

K.K. ராமசாமி அவர்கள் எழுதிய தொழிலில் நிச்சயம் வெற்றி பெற… என்ற நூலிலிருந்து

இந்நூல் தன்னம்பிக்கை அலுலகத்திலும் கிடைக்கும்.


Share
 

11 Comments

 1. BOOPATHI RAMESH says:

  Thank uuuuuu sir

 2. BOOPATHI RAMESH says:

  தங்க யு சார்

 3. m.saravanan says:

  நல்ல விஷயம் நன்றி…

 4. amutha surabi says:

  thank u very much very use ful tips sir

 5. Abiman says:

  மிக பயனுள்ள உமது இச்சேவைக்கு மிக்க நன்றி! தொடர்க…

 6. punie says:

  கருத்துகளுக்கு நன்றி 🙂

 7. jeiganesh says:

  100% truth bz this is valluvan vakku – thanks to remember

  jeiganesh mdu

 8. chinnathambi says:

  நன்றி

 9. prabhu says:

  tanking you sir

 10. KARUNAKARAN,METTUPALAYAM says:

  ARTICLES SUPER

 11. KARUNAKARAN,METTUPALAYAM says:

  THANKS BOSS

Post a Comment


 

 


December 2001

நம்பிக்கையும் நானும்
மனசு விட்டுப் பேசுங்க!
வணக்கம் தலைவரே
மனித சக்தி மகத்தான சக்தி
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
உள்ளத்தோடு உள்ளம்
சிரிப்போம் சிறப்போம்
வெற்றியின் மனமே
வாசகர் கடிதம்
உன் வாழ்வு மலரும்!
வாடிக்கையாளரே மன்னர்
உறவுகள் உணர்வுகள்…
உற்சாக நீரூற்று
நல்ல நண்பன் வாழ்வின் துணைவன்
நிறுவனர் பக்கம்
தொழில் முனைவோர்க்குத் தேவையான குணநலன்கள்