Home » Articles » விழுந்தாலும் எழுவேன்

 
விழுந்தாலும் எழுவேன்


கோகுலன்
Author:

தினமும்
அனுபவங்களில் அலுப்போடு
அடிசாய்ந்து படுத்தாலும்
கனவுகளின் துணையோடுதான்
கண்விழித்து எழுகின்றேன்
முயல்கின்ற போதெல்லாம்
முள்முறிந்த கடிகாரமாய்
முடங்கல்களின் முறியடிப்பு
தடங்கல்களை தூண்டுகின்ற
முனைப்புகளின் போது
முன்னேற்ற முகவரிகள்
நிலைக்கண்ணாடியின்
நிதர்சனங்களால் எதிரொலிப்பு
தோல்விகளின்
தாக்கங்களின் போதெல்லாம்
வேகதின் வேர்கள்
ம்பிக்கை நீர் உறுஞ்சிவிட்ட
புத்துணர்ச்சியோடு மீண்டும்
தளராதபடிக்கு எனக்குள்
தன்னம்பிக்கை அவ்வப்போது
தனல் துண்டுகளாய்
எனவே நான்
விழுந்தாலும் எழுவேன்
தன்னம்பிக்கையின் துணையோடு
– கோவை கோகுலன்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2001

மனித சக்தி மகத்தான சக்தி
உன்னால் முடியும் தம்பி
சிந்தனைத்துளி
பொதுவாச் சொல்றேன்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்.
விழுந்தாலும் எழுவேன்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே….
பெற்றோர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
தன்னம்பிக்கை பாதையில் நட!
மனசு விட்டுப் பேசுங்க!
நிறுவனர் பக்கம்
சிரிப்போம் சிறப்போம்
வாழ்க்கை
விட்டு விடுதலையாவோம்
உறவுகள் உணர்வுகள்….