Home » Articles » வெற்றியின் மனமே….

 
வெற்றியின் மனமே….


இராமநாதன் கோ
Author:

செல்வந்தராகச் சிறந்த வழி?

நீங்களும் செல்வந்தர்தான் என்பதை கடந்த கட்டுரையில் பார்த்தோம்.

வருமானத்தில் பத்து முதல் இருபது சதம் சேமிப்பிற்கு போக மீதமுள்ள எண்பது முதல் தொண்ணூறு சதம் வருமானத்தை எப்படிக் கையாள்வது?

சிலருக்கு மாத்த்தின் முதல், தேதி பிறந்தாலே எதை எப்படி செலவு செய்வது? என்ற குழப்பம் உண்டாகிவிடும்.

ஒரு இண்டர்நெட் நகைச்சுவை.

தங்களது ஒரே வாரிசு என்னவாக வரப்போகிறான் என்பதை அறிய பெரும் ஆர்வம் அந்தப் பெற்றோருக்கு.

கணவனும் மனைவியுமாக கலந்து பேசி ஒரு திட்டம் வகுத்தார்கள்.

டேபிள் மீது ஒரு பையில் புத்தகம். ஒரு பணப்பெட்டி, ஒரு பாட்டில் விஸ்கி என்று வைத்துவிட்டு அவன் எதை எடுக்கிறான் என்பதை மறைந்திருந்து பார்ப்பதுதான் திட்டம்.

பைபிளை எடுத்தால் பாதிரியார் ஆவான்.

பணப்பெட்டியை எடுத்தால் வியாபாரி ஆவான்.

விஸ்கி பாட்டிலை எடுத்தால் குடிகாரன் ஆவான் என்று அவர்களுக்குள் முடிவும் செய்து விட்டார்கள்.

பையன் வந்தான்.

டேபிளை பார்த்தான். அதன்மீது இருந்தவற்றையும் பார்த்தான்.

சுற்றும்முற்றும் ஒரு பார்வையை வீசிவிட்டு முதலில் பணப்பெட்டியை எடுத்தான்.

பெற்றோருக்கு ஆனந்தம்.

அடுத்து அவன் பைபிளையும் எடுத்தான். பெற்றோருக்கு திகைப்பு.

பிறகு. விஸ்கி பாட்டிலையும் எடுத்துக்கொள்ள, மனைவியின் காதில் கவலையோடு கிசுகிசுத்தார். கணவர் – “நாம் போட்ட கணக்கே தப்பு. அவன் அரசியல்வாதியாகப் போகிறான்”.

இதைப்போல பலர் தன் வருமானத்தைப் பற்றி போட்ட கணக்கு தவறாகப் போய்விடுவதை அவ்வப்போது பார்க்கலாம்.

அதன் முக்கியக் காரணம், பணத்தை எப்படி எதற்கு எந்த அளவு செலவு செய்ய வேண்டுமென தெரியாத்துதான்.

இனி பணத்தை எப்படி செலவு செய்வது? என்பதைப் பார்ப்போம்.

நமது செலவு முறைகளை மூன்றாகப் பிரிக்கலாம்.

முதலாவது, அத்தியாவசியமான செலவு. இது தவிர்க்கவே முடியாதது. வரி கட்டுதல், அன்றாட உணவிற்கு செலவிடுதல் போன்றன. இதைச் செய்யாவிடில் பல பாதிப்புகளை சந்திக்க வேண்டி வரும்.

இரண்டாவது, அவசியமான செலவு, சொந்த வீடு கட்டுதல், குழந்தைகளின் படிப்பிற்கான செலவு போன்றன. இவை அவசியமானதுதான் என்றாலும், தொகையின் அளவில் மாற்றிக்கொள்ள கூடியதுதான்.

மூன்றாவது, அவசியமில்லாத செலவு, அன்பளிப்பு, பிறருக்காக பயணம் செய்தல், காபி, டீ, பார்ட்டி, கணக்கே தெரியாமல் செலவு செய்தல், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதற்காக செய்தல், கைஇல் பணமே இல்லாத போதும சம்பிரதாயத்திற்காக கடன் வாங்கி செய்தல் போன்ற இத்யாதிகள் இந்த பட்டியலாகும்.

சிலருக்கு இது எப்படி அவசியமில்லாத செலவாகும்? என்ற கேள்வி எழலாம். பதிலுக்கு வருமுன் சீனக்கதை ஒன்றை பார்ப்போம்.

நீதிபதி ஒருவர், தன் ஆசனத்தில் அமரும்போது துண்டு போல அணிந்து கொள்கிற சீருடையான பட்டையான துணியை தைப்பதற்காக டெய்லரிடம் சென்றார்.

“எந்த வகை நீதிபதி நீங்கள் என்பதை முதலில் சொல்லுங்க.” என்றார் டெய்லர்.

நீதிபதிக்குப் புரியவில்லை.

“அதாவது இப்போதுதான் நீதிபதியாகி முதன்முதலாக பதவிக்குப் போகிறவரா? அல்லது நீண்டநாட்களாக அதே பதவியில் இருப்பவரா? எந்த வகையைச் சேர்ந்தவர் நீங்கள்?” என்றார் டெய்லர்.

“அதெல்லாம் உனக்கெதற்கு எல்லா நீதிபதிகளுக்கும் ஒரே மாதிரி சீருடைதானே” என்றார்.

டெய்லர் சொன்னார் “நீங்க சொல்றது சரிதான். ஆனால் அதுல கொஞ்சம் வித்தியாசமும் இருக்குது. நீங்க இப்பதான்புதிசா நீதிதியா போறீங்கன்னா, நீண்ட நேரம் கோர்ட்டுல நிப்பீங்க. அதுக்கு அந்த சீருடையல முன்புறமும் பின்புறமும் சம்மா தொங்கறமாதிரி இருக்கணும்.

நீங்க பதவி உயர்வு பெற்று உயர்ந்த பதவிக்கு போறீங்கன்னா, கர்வமும் கூடவே அதிகாரமும் அதிகமா இருக்கும். அப்போ தலையையும் நெஞ்சையும் நிமித்திதான் பேசுவீங்க. அப்போ முன்புறத்தில் அந்த பட்டையை நீளமா வைக்கணும்.

அதுவே நீண்டநாளா அதே பதவியில இருப்பவரா இருந்தா தலையை சற்று தாழ்த்தி அமருவீங்க; ஏன்னா, நமக்கு மேலே கடவுள்னு ஒருத்தன் இருக்கான்னு மனசுல எப்பவுமே பணிவு இருக்கும். அப்போ அவங்களுக்கு பின்புறத்திலே அந்த சீருடையை நீளமா வைக்கணும். அதுக்காகத்தான் கேக்கறேன்” என்றார் டெய்லர்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட நீதிபதி சொன்னார் “ரெண்டு புறமும் சம்மா இருக்குற மாதியே தைச்சுடு”.

கதையில வருவதுபோல மூன்று வகையான செலவுகளாக பிரித்திருந்தாலும் ஒருவருக்கு அவசியமில்லாததாக தெரிகிற செலவு மற்றவருக்கு அவசியமானதாகத் தெரியலாம்.

இது அவரவர் பணபலத்தையும், மன நிறைவையும் பொறுத்தது; அதற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.

ஆனாலம் அடிப்படையாக வரவு ஒருபுறமென்றால் செலவு மறுபுறம்.

அதில் முக்கியமாக வரவுக்கு மீறிச் செலவிடுவதைத் தவிர்ப்பதே முக்கிய அம்சம்.

இனி ஒரு முக்கியக் கேள்வி.

ஏன் வயதான காலத்தில் பலர் ஏழையாகிவிடுகிறார்கள்? இதற்கு பதிலாகத்தான் பார்க்கின்சன் – விதி கூறப்படுகிறது.

மனிதர்களின் இயல்பு என்னவென்றால் எவ்வளவு பணத்தை சம்பாதித்தாலம் அத்தனையையும் செலவு செய்தல், அதற்கு மேலும் செலவு செய்ய திட்டமிடுதலே ஆகும். இந்த இயல்பை முறியடிக்க வேண்டியதுதான் மிக – மிக அவசியம்.

தங்களுடைய ஆரம்ப கால வருமானத்தை விட பன்மடங்கு அதிகமாக சம்பாதித்தாலும் , தற்போதைய தேவைக்கு போதவில்லையே எனபதுவே பலருடைய பிரச்சனையாகும்.

இதனால்தான் பலர் பணத்தேவைகளால் கடனாளியாகிறார்கள்ந வாழ்க்கையில் விரக்தி அடைகிறார்கள்.

இதை மாற்றுவது எப்படி?

கையிலுள்ள பணத்தில் எல்லாவற்றையும் செலவிடும் பழக்கத்தை மாற்றி அதை சேமிப்பாக்கும் பழக்கத்தை உருவாக்கிட வேண்டும். இதற்கு மன உறுதி வேண்டும்.

வருமானம் அதிகமாக இருக்கின்ற காலத்தில், அதிகமாக செலவு செய்கிற இயல்பே உண்டாகும். அதை மாற்ற எவ்வளவு அதிகமான அளவு சம்பாதிக்கிறமோ அதை கணக்கிட்டு அதில் பாதியையாவது முதலீடு செய்யும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். மீதமுள்ள பாதியை மட்டும் அதிகப்படியான செலவுகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.

அவசியமில்லாத நியாயமில்லாத செலவு எதுவாக இருந்தாலும் அதை உடனே நிறுத்தி விட வேண்டும்.

பணமுடக்கம் உள்ளவர்கள் மற்றும் இதுவரை செலவுகளை கட்டுப்பாட்டில் வைக்க முடியாதவர்கள் இனிமேல் குறைந்த பட்சமாக செலவுகளை பட்டியலிட்டு குறைந்த பட்சமாக பத்து சதம் செலவீனங்களை குறைக்க வேண்டும்.

நீங்கள் இதுவரை செல்வந்தராகவில்லையா?

இனி யோசனை என்ன? உங்கள் செலவில் பத்து சதத்தை குறையுங்கள்.

நீங்கள் செல்வந்தராக சிறந்த வழி இதுதான்.

தொடரும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2001

மனித சக்தி மகத்தான சக்தி
உன்னால் முடியும் தம்பி
சிந்தனைத்துளி
பொதுவாச் சொல்றேன்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்.
விழுந்தாலும் எழுவேன்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே….
பெற்றோர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
தன்னம்பிக்கை பாதையில் நட!
மனசு விட்டுப் பேசுங்க!
நிறுவனர் பக்கம்
சிரிப்போம் சிறப்போம்
வாழ்க்கை
விட்டு விடுதலையாவோம்
உறவுகள் உணர்வுகள்….