Home » Articles » நிறுவனர் பக்கம்

 
நிறுவனர் பக்கம்


கந்தசாமி இல.செ
Author:

உங்கள் முன்னோடிகளை கண்டுபிடியுங்கள்

எந்த வழி நல்ல வழியோ, எந்த வழி சரியான வழியோ, எந்த வழி முன்னேற்றத்திற்குரிய வழியோ அந்த வழியில் செல்லுங்கள். மனம் போன போக்கெல்லாம் போகாதீர்கள் என்பது நமது முன்னோர்கள் நமக்குக்காட்டிய வழியாகும். முன்னேறியவர்கள் சென்ற வழியும் அதுவேயாகும்.

அதனால், ஒரே குறிக்கோளில் நின்று, அதில் நாம் விரும்பும் உயர்ச்சிகளை – வளர்ச்சிகளை – விரிவா மனத்திரையில் – அல்லது எழுத்து வடிவில் வரைபடமாகிக் கொண்டு நாம் செயலில் இறங்கவேண்டும்.

முன்னோடிகளைப் பின்பற்றுவது?

நாம் உயர விரும்பும் துறையில், நமக்குமுன் நாம் விரும்பகின்ற அளவுக்கு உயர் நிலையை அடைந்தவர் யார்? என்று காணவேண்டும். இதற்குப் பிறரை நாம் பின்பற்றுகிறோம் அல்லது பிரதிபலிக்கிறோம் அல்லது பார்த்துச்செய்கிறோம் (Copping) என்று பொருள் அல்ல.

நமக்கு என்று முன் உதாரணமாகச் சிலரைக் குறித்துக்கொள்வதுநமது எல்லையத் தெளிவுபடுத்திக் கொள்ள வசதியாக இருக்கும். அவ்வளவுதான். இதனால் அரவர்களின் தனித் தன்மை இழப்போ, குறைபாடோ நேராது. இம்முறை நம் கண்ணுக்கு முன்னான உதாரணம் அவ்வளவே.

எந்தத் துறையில்?

எழுத்துத் துறையா? அறிஞர் பெர்னாட்ஷா தொடங்கி டாக்டர் மு.வ. வரை உங்களுகுப் பிடித்தமான ஒருவரை முன்னோடியாக் கொள்ளுங்கள்.

அறிவியல் துறையா? ஜன்ஸ்டின் முதல் புதியகண்டு பிடிப்புகள் செய்த நீங்கள் விரும்பும் துறை அறிஞர் ஒருவரை முன்னோடியாகக் கொள்ளுங்கள்.

நிர்வாகத் துறையா? அடிமைத்தனத்தை ஒழித்து நாட்டை சீரியமுறையில் நிர்வாகம் செய்த ஆப்ரகாம் லிங்கன் முதல் இன்றைய சில மாநிலத் தலைமைச் செயலாளர்கள் வரை அவர்களின் வாழ்க்கையைப் புரட்டுங்கள்.

விளையாட்டு வீர்ராக ஆக வேண்டுமா? பயிற்சி ஒன்றே மூலதனமாக விளங்கும் இத்துறைய் ஒலிம்பிக் வீர்ர்களின் நடைமுறைகளைப்படித்துப் பயன்படுத்துங்கள். பி.டி. உஷாவை உங்கள் கண்முன் நிறுத்துங்கள்.

பரிசுகள் பெற வேண்டுமா?அயராது உழையுங்கள். மேடம் கியூரி முதல் அன்னை தெரசா வரை நோபல் பரிசு பெற்றவர்களை எண்ணிப் பாருங்கள் உன்னதமான படைப்புகளை, பயன்மிக்க கண்டுபிடிப்புகளை, ஒப்பற்ற சமூகத் தொண்டினை உங்களால் செய்ய முடியும்.

உயர்ந்து விளங்க வேண்டுமா? ஆல்பர்ட் சுவைச்சர் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். சிறந்த பொறியியல் வல்லுநரான விசுவேசுரய்யாவின் ஈடுபாட்டை மேற்கொள்ளுங்கள்

சிறந்த வழக்குரைஞரான நீதிபதி சர்.டி. முத்துசாமியின் வாழ்க்கை வரலாறு நமக்குத்துணபுரியும். ஐ.ஏ.எஸ்ஸில் தேர்ச்சி பெற வேண்டுமா? தேர்ச்சி பெற்றவர்கள், பொது அறிவை, பேச்சுத்திறனை, எழுத்தாற்றலை எவ்வாறு வளர்த்துக் கொண்டார்கள் என்று கண்டுபிடியுங்கள்.

தெரிந்ததா? தேவையானதா?

மிகுந்த மதிப்பெண்கள் வாங்கி மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற தொழில் கல்வி பயில வேண்டுமா? தேர்வு எழுதுகின்ற முறையை நன்கு கற்றுக்கொள்ளுங்கள்.

நன்றாகப் படித்த மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதற்கும், குறைவாகப் படித்த மாணவர்கள் மிகுந்த மதிப்பெண்கள் பெறுவதற்கும் தேர்வு எழுதும் முறைதான் காரணம்.

பதில் சொல்லத் தெரியலாம். சரியாக, விரைவாக, பிழையின்றி எழுத்த் தெரியாவிட்டால் என்ன பயன்? குறிப்பிட்ட மூன்று மணி நேரத்தல், இந்தக் கேள்விகளுக்கு இவ்வளவுதான் நேரம் ஒதுக்க முடியும் எனப் பகுத்துக் கொண்டு, தெரிந்ததெல்லாம் எழுதாமல், தேவையானதை மட்டும் எழுத வேண்டும்.

உரிய நேரத்தில் எழுத வேண்டிய கேள்விகளுக்கு, மதிப்பெண்களுக்குரிய அளவான பதில்கள் எழுதப்பட வேண்டும். கையெழுத்தில் அழகும் தெளிவும் மதிப்பெண்களைக் கூடுதலாக்கும்.

மிக உயர்ந்த மதிப்பெண்கள் பெற விரும்புகின்றவர்கள் கேள்விகளுக்கு உரிய பதிலைமுன்னரே எழுதிப பார்க்கும்பயிற்சியை மேற்கொண்டே ஆக வேண்டும்.

எவ்வளவு படித்திருந்தாலும் எழுதிப் பார்க்க வேண்டும். எழுதிப் பார்க்காமல் சிலர் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்கள் எழுதிப் பார்த்திருந்தால் அவர்களே வியக்கும் வண்ணம் அவர்களது வெற்றி மிகச்சிறப்புடையதாக அமைந்திருக்கும்.

அதேபோல் இதுவா? அதுவா? என்று விடை இருக்கும் கேள்விகளுக்குரிய விடையைத் தெளிவுபடத் திட்டவட்டமாக அறிந்திருக்க வேண்டும். ஏராளமான செய்திகளைத் தெரிந்து வைத்திருந்தால் மட்டும் போதாது. இதற்கு இதுதான் என்ற தெளிவு வேண்டும். இவ்வாறு பயின்று முதன்மை பெற்றவர்களின் அனுபவங்களை நாம் பாட மாக்கிக்கொள்ள வேண்டும்.

நாம் தேர்வு செய்யும் முன்னோடிகள் உலகப் புகழ் பெற்றவர்களாகத்தான இருக்க வேண்டும் என்பதில்லை. இவ்வுலகத்தால் அறியப்படாதவராகக் கூட இருக்கலாம். அவர் உங்கள் ஊரிலோ, உங்கள் தெருவிலோகூட இருக்கலாம். அவர் நாம் தேர்ந்த துறையின் உயர்ச்சிக்கு முன்னோடியாக, வழிகாட்டியாக விளங்குபவராக இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

விட்டுவிட வேண்டும்

ஒன்றில் முழுமையாக வெற்றி பெற வேண்டுமானால் மற்றொன்றைவிட்டுக் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.

மாபெரும் அறிஞராகவும் திகழ வேண்டும்; மாபெரும் பணக்காரராகவும் விளங்க வேண்டும் என்றால் இயலாத காரியம்தான். ஓரளவு வசதியுள்ள இலக்கிய மேதையாகலாம். ஓரளவு இலக்கிய அறிவுள்ள பணக்காரராகலாம். இப்படி ஏதேனும் ஒன்றில்தான் முன்மை பெற முடியும்.

உலக சுகங்கள் அனைத்தையும் அனுபவிக்கவும் வேண்டும். முன்னேறவும் வேண்டும் என்றால் முடியாது. அதனால் நமக்கு ஏற்றது இதுதான் என்று சொல்லும் துணிவும், வேண்டாதவைகளை ஒதுக்கும் மனத் தெளிவும் வேண்டும்.

ஒன்றை நாமாக விட்டுக் கொடுக்கும் போதுதான் வேறொன்று நமக்குத் தானாக வந்து சேர்கிறது.

வாழ்க்கை வரலாறு படியுங்கள்

எந்தத்துறை என்பதையும் யார் போல என்பதையும் முடிவு செய்த பிறகு அவர்கள் வள்ந்த வரலாற்றை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கை வரலாற்றைப் படிப்பது நம்மை நாமே வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்லும் முதல் கட்டமாகும்.

நாம் முன்னோடியாகக் கொண்டவர். அவரது முன்னேறத்திற்கு எடுத்து கொண்ட முயற்சி எவ்வளவு? அவருடைய அடிப்படை வசதிகள் எத்தகையதாக இருந்தது? எப்படி ஒவ்வொரு படியாக மேலே வந்தார்? அவர் மேலே வர அவருக்கு முக்கியக் காரணியாக இருந்தது எது? இவ்வாறு பல கேள்விகளுக்கு அவரது வாழ்க்கை வரலாற்றிலிருந்து விடை காண வேண்டும்.

இதோ ஒருவர் வரலாறு

அந்த ஆறரையடி உயரமுள்ள மனிதர் தினக்கூலியாக வாழ்க்கையைத் தொடங்கினார். பலசரக்குக்கடை பணியாளராக, கிராம அஞ்சல் நிலைய அதிகாரியாக – தொண்டர் படைத் தலைவராக – இப்படிப்பல பொறுபுக்களை ஏற்றுப் பணியாற்றினார்.

எவ்வளவு இன்னல்கள் நேர்ந்தபோதும் வறுமை வாட்டியபோதும் தாம் விரும்பிய சட்டக்கல்வியை அவர் படிக்கத் தவறிவில்லை.

அரசியலில் ஆர்வம் கொண்ட அவர் சட்டமன்றத் தேர்தலில் நின்று தோல்வியைத் தழுவினார். சோர்ந்து விட வில்லை. அடுத்தமுறை நின்றார் வென்றார். அடுத்தடுத்த நான்கு முறை வென்று அந்த நாட்டின் மக்கள் தலைவரானார்.

1832 ல் தொடங்கிய அரசியல் வாழ்க்கை, 28 ஆண்டுகள் விடாமுயற்சி, 1860 -ல் ஆப்ரகாம் லிங்கனை அமெரிக்க ஜனாதிபதியாக உயர்த்தியது. இந்த வரலாறு நமக்கு பாடமாகட்டும். படிப்பினை நல்கட்டும்.

உங்கள் திறமைகளை கணக்கிடுங்கள்

இந்த வரலாற்றை நம்முடைய தன்முயற்சி, வாழ்க்கை முறை, அடிப்படை வசதி, பிற தகுதிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.

அவரிடம் இல்லாத நன்மை தீமை, நிறை, குறைகள் (Meits and demerits) நம்மிடம் என்னென்ன இருக்கின்றன என்பதையும் கண்டறிந்து குறைகளைப் போக்கி நிறைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

படிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் விடியற் காலையில் எழுந்துதான் ஆக வேண்டும் நீந்தவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் தண்ணீரில் இறங்கித்தான் ஆக வேண்டும். உடல் உழைப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் வியர்வை சிந்தியே ஆகவேண்டும்.

நாற்று நடச் செல்கின்ற பெண்மணி சேற்றில் இறங்காமல் வரப்பில் நின்று கொண்டிருந்தால் நடவு எப்படி நடக்கும்? அதனால் ஒன்றைப் பற்றிக் கொண்டு முன்னேற எண்ணுகின்றவர்கள் மற்றவைகளை ஒதுக்கி வைத்து விட்டு, தான் கருதியதை மட்டுமே முதன்மையாக எடுத்துச் செயல்பட வேண்டும். அதில் பெறும் இன்ப துன்பங்களை அனுபவங்களாக, படிப்பினைகளாக மகிழ்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நீங்கள் சாதாரண மனிதரல்ல!

சிலர் இப்படி எண்ணுவதை நாம் அறிந்திருக்கின்றோம். அன்றாட வாழ்க்கை சுகங்கள், டிராமா, சினிமா, நண்பர்கள், கேளிக்கைகள் இவற்றை எல்லாம் விட்டுவ்விட்டு குறிக்கோள் ஒன்றையே பற்றிக் கொண்டிருப்பது முழுமையான வாழ்க்கையாகுமா? என்பார்கள்.

இவைகள் எல்லாம் வாழ்க்கையில் வருகின்ற சில நிகழ்ச்சிகள். இதற்கு மிகச் சிறு பகுதி நேரத்தை ஒதுக்கினாலும் போதும். ஆனால் நமது குறிக்கோள் ஒரு குறிப்பிட்ட துறையில், பல்லாயிரம் மனிதர்களில் மிக உயர்ந்த மனிதராக வளர்வது, உயர்வது.

அவ்வாறு இருக்க சாதாரண மனிதர்கள் போல் எல்லாம் அனுபவிக்கவேண்டும் என்று விரும்பினால், பின்னர் நாமும் சாதாரண மனிதர்களில் ஒருவராகவே இருந்துவிட வேண்டியதுதான்.

நீங்கள் சாதாரண மனிதராக இருக்க விரும்பவில்லை. உங்கள் குறிக்கோள் உயர்ந்தது. ஆயிரத்திலும் லட்சத்திலும் அல்ல. கோடியில் ஒருவராகத் திகழ வேண்டியவர்கள்.

இந்தியாவில் 100 கோடி மக்களில் 100 பேரைத் தேர்ந்தால் அதில் நீங்கள் ஒருவராகத் திகழ வேண்டும். இப்பொழுது அப்படி முதல் வரிசையில் வைத்து எண்ணக் கூடிய 100 பேர் இல்லாமலா இருக்கிறார்கள்?

உலகின் 600 கோடி மக்களில் ஏதேனும் ஒரு துறையில் முதன்மையான ஒருமனிதரை இன்றும் நாம்தேர்ந்தெடுக்க முடியும் அல்லவா? இருக்கத் தானே செய்கிறார்கள்.

அதனால் முதலில் உங்கள் முன்னோடிகளைக் கண்டுபிடியுங்கள். நீங்கள் முன்னேறலாம். பின்னர் நீங்களே பலருக்கு முன்னோடியாகலாம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2001

மனித சக்தி மகத்தான சக்தி
உன்னால் முடியும் தம்பி
சிந்தனைத்துளி
பொதுவாச் சொல்றேன்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்.
விழுந்தாலும் எழுவேன்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே….
பெற்றோர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
தன்னம்பிக்கை பாதையில் நட!
மனசு விட்டுப் பேசுங்க!
நிறுவனர் பக்கம்
சிரிப்போம் சிறப்போம்
வாழ்க்கை
விட்டு விடுதலையாவோம்
உறவுகள் உணர்வுகள்….