Home » Articles » மனசு விட்டுப் பேசுங்க!

 
மனசு விட்டுப் பேசுங்க!


admin
Author:

திடீர் திடீரென மனதில் ஏற்படும் பய உணர்வுகளும் அத்துடன் கூடிய உடல் பாதிப்புகளும், மனப்பதட்டம் எனப்படும்.

அறிகுறிகள்

எல்லா நேரங்களிலும் மனதிற்குள் ஒரு பயம்!

ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற உணர்வு; நிலைமை கட்டுக்கடங்காதுபோய் விட்ட பிரமை;

எதற்கெடுத்தாலும் கோபப்படுதல்

வெளியில் பயணம் செய்தால் விபத்து நேருமோ என்ற அச்சம்;

சிறு பிரச்சனைகளுக்குக்கூட தீர்வு காண இயலாமல் குழப்பம் அடைதல்.

கை – கால் நடுங்குதல், உடல் வியர்த்தல், நெஞ்சு வலி, மூச்சிரைத்தல், தலைவலி, தலைசுற்றல், வயிறு வலி, வயிறு புரட்டுதல், வயிற்றுப்போக்கு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், தூக்கமில்லாமல் புரளுதல், தூங்கும்போது சிறு சத்தம் கேட்டாலும் திடுக்கிட்டு விழித்துக் கொள்ளுதல், தீய கனவுகள் – தன்னை யாரோ கொலை செய்யத் துரத்துது போல, சுடுவது போல உயரமான இடத்திலிருந்து தள்ளிவிடுதல் போன்ற நிகழ்ச்சிகள் கனவுகளில் தோன்றுதல், உடல் தளர்தல், எளிதில் களைப்படைதல், கவனம செலுத்த இயலாமை, உடல் எடை குறைதல், இதுபோன்ற அறிகுறிகள் மனப்பதட்டத்தின் விளைவுகளாகும்.

யாருக்கு இந்த பாதிப்பு வருகிறது?

இவர்கள் அதிகம் உணர்ச்சி வயப்படுவார்கள்; அதிகம் மனசாட்சி கொண்டவர்கள்; கடினமாக உழைக எண்ணுபவர்கள்; சுறுசுறுப்பானவர்கள்ந சராசரி மனிதனைவிட புத்திசாலிகளாகவும் இருப்பார்கள்.

சிலருடைய பெற்றோர்கள் அதிக பதட்டமடைபவர்களாக இருந்தால், பிள்ளைகளுக்கும் வரலாம்.

இளமையில் வுமையால் பாதக்கப்பட்டவரகள்ந காதலில், தொழிலில், திருமண வாழவில்தோல்வி அடைந்வர்கள்.

வெளி உலகத்திற்கு நல்லவர்களாக, பெரிய அந்தஸ்து உள்ளவர்களாக காட்சி அளித்துக்கொண்டு, தீய செயல்களில் ஈடுபடுபவர்கள், அல்லது உடந்தையாயிருப்பவர்கள்; போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள்; போன்றவர்களுக்கு மனப்பதட்டம் உண்டாகும்.

தான் விரும்புவதை செய்யமுடியாத சூழ்நிலை உண்டாகும்போது அல்லது தமக்கு விருப்பமில்லாத செயலைச் செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்போது மனப்பதட்டம் உண்டாகும்.

சிலருக்கு அதிர்ச்சியான சம்பவங்கள் நினைவுக்கு வரும்போது மனப்பதட்டம் உண்டாகும். சிலருக்கு பாரம்பரிய வழியாக மனப் பதட்டம் உண்டாகும்.

எப்படி உருவாகிறது?

மனதில் பலமான எண்ணங்கள் வளர்ந்து, தன்னம்பிக்கை குறையும்போது மனப்பதட்டம் உருவாகம். பொதுவாக குறைந்தபட்ச பய உணர்வு ஒவ்வொருவருக்கும் அவசியம். அதனால் தான் எச்சரிக்காக செயல்படமுடிகிறது. மேன்மேலும் முன்னேற முடிகிறது. நம்மை, வாழ்க்கை என்ற பயணத்தில், நிறுத்தி – நிதானித்து செயல்பட வைக்கிறது.

பய உணர்வு அளவிற்கதிகமானால் – மனப் பதட்டமாக மாறுகிறது. இந்த நிலையில் மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் வெளிப்படும். இந்த நிலையில் அதை உணர்ந்து கொண்டால், அதிலிருந்து முழுவதும் குணம் பெறலாம்.

பயம் உண்டாவதற்குக் காரணங்கள் என்ன?

மனிதனுக்கு ஆறு வகையான பய உண்வுகள் உள்ளன என்கிறார் நெப்போலியன் ஹில்.

1. வயதாகி விடுமோ?

2. இறப்பு வருமோ?

3. வறுமை வந்துவிடுமோ?

4. நோய் வந்துவிடுமோ?

5. நேசிப்பவர்களின் அன்பை இழக்க நேருமோ?

6. பிறர் குறை சொல்லி விடுவார்களோ?

போன்ற காரணங்களின் அடிப்படையில் தான் பயம் உருவாகிறது.

இவற்றில், வயதாகுதல் என்பது யாரும் தடுக்க இயலாத்து. சுறுசுறுப்பான, ஆர்வமான செயல்களின் மூலம் முதுமை உணர்வைக் குறைக்கலாம்.

இறப்பு என்பது இயற்கையான செயல். மருத்துவ ரீதியாக சொன்னால் இறப்பு என்பது என்பது வலியில்லாத ஒன்று. இறப்பைப் பற்றிய பயமே வலியானது.

கடின உழைப்பு, திட்டமிட்ட செயலும் இருந்தால், வறுமையைப் பற்றிய பயம் வேண்டியதில்லை.

தகுந்த உடற்பயிற்சிகளும் பழக்க வழக்கங்களும் இருக்குமானால் நோய் பற்றய பயத்தைத் தவிர்க்கலாம். நோய் வந்தாலும் முறையான மருத்துவ சிகிச்சையின் மூலம் நலமாக வாழலாம்.

ஒரு செயல் நியாயமானதாக இருந்து – அது மற்றவர்களின் உரிமைகளில் தலையிடாத போது – மனசாட்சிக்கும் ஏற்புடையதாக இருக்குமானால், நேசிப்பவரின் அன்பை இழக்க நேருமோ என்றோ பிறர் குறை சொல்வார்களோ என்றோ பயப்படத் தேவையில்லை.

உணவு முறை

மாமிசம், எண்ணெயல்பொறித்த மற்றும் கார உணவுகளை குறைத்து மற்ற எல்லா உணவுகளையுமே அளவோடு சாப்பிடுதல் நல்லது.

பழங்கள் மற்றும் பச்சையாக சாப்பிடும் உணவுகள் நன்மை அளிக்கும்.

உடற்பயற்சியில் முறையாக கற்றுக்கொட யோகப் பயிற்சி, தளர்வு நிஐ பயிற்சி மற்றும் தியானம் பலனளிக்கும்.

மருத்துவ பரிசோதனைகளை பாதிக்கப்பட்டுள்ளோரின் தன்மைக்கேற்ப செய்ய வேண்டும்.

ஆங்கில மருத்துவம் செய்வது அவசியமே. மனப்பதட்டம் குணமாகும் வரை அதலிருந்து அவதிப்படாமலிருக்கப் பயன்படும். ஒரு சில பக்கவிளைவுகள் வந்தாலும் நாளாகும்போது சரியாகிவிடும். சரியான அளவில் மருந்து சாப்பிட்டால் பக்க விளைவுகள் இராது.

மனப்பதட்டம் குணமாகி முன்னேற்றம் கிடைத்ததும் அதை படிப்படியாக குறைத்து பிறகு நிறுத்தி விடலாம்.

பொதுவாக மனப்பதட்டம் உள்ளவர்கள் வாழ்க்கை முறைகளை, தினசரி பழக்க வழக்கங்களை மாற்றியமைக்க வேண்டும். அப்போது திரும்ப வராது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2001

மனித சக்தி மகத்தான சக்தி
உன்னால் முடியும் தம்பி
சிந்தனைத்துளி
பொதுவாச் சொல்றேன்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்.
விழுந்தாலும் எழுவேன்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே….
பெற்றோர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
தன்னம்பிக்கை பாதையில் நட!
மனசு விட்டுப் பேசுங்க!
நிறுவனர் பக்கம்
சிரிப்போம் சிறப்போம்
வாழ்க்கை
விட்டு விடுதலையாவோம்
உறவுகள் உணர்வுகள்….