Home » Articles » பொதுவாச்சொல்றேன்

 
பொதுவாச்சொல்றேன்


புருஷோத்தமன்
Author:

இன்னிக்கு உலகம் பூராப் பார்த்தா படிப்பறிவு எக்கச்சக்கம். குழந்தைகளுக்கு எது அம்மா எது அப்பான்னு தெரியறதுக்கு முன்னாடியே A, B, C, D சொல்லிக் கொடுத்திடறாங்க.

பொதுவா புத்தகங்களுக்குள்ளே புதையல் எடுத்துதான் இந்த இளைய தலைமுறை எல்லாம் துறையிலேயும் நல்லா வளர்ந்திருக்கு. நான் பொதுவாச்சொல்றேன். புத்தகங்களைப் படிச்சுப் படிச்சு மனசுலே பக்குவம் வந்ததுன்னா, அதுதான் நல்லக் கல்வி.

பக்கத்திலிருக்கிற மனிதர் கிட்டேயிருந்து, தள்ளிப் தள்ளிப போகறதுக்குப்பேரு படிப்பில்லை. வெறும் தகவல்களை சேகரிக்கிற இயந்திரமா மனுசன் மாறிகிட்டு வரானோன்னு கவலையா இருக்கு.

படிக்க படிக்க மனசு விரிவடையணும். உறவு வட்டம் விரிவடையறதன் மூலமா உலகமே ஒரு குடும்பமா தோணனும். இத்தனையும் பழங்காலத்துல இருந்திச்சு. பல்கலைக்கழகங்களுக்கு போய் பட்டம் ஏதும் வாங்காத கணியன் பூங்குன்றனார் நெஞ்சை நிமித்தி “யாதும் ஊரே யாவரும் கேளிர்” அப்படீன்னு, 2000 வருஷத்துக்கு முன்னாடியே பாடினார். ஆனா இன்னைக்கு பல்கலைக் கழகங்களிலே பதக்கம் வாங்கிக் குவிக்கிற பட்டதாரிங்க சில பேரு பக்கத்து வீட்டுக்காரரையே தெரிஞ்சுக்காம இருக்காங்க.

இரண்டாவதா, ஏற்பட்டிருக்கிற ஆபத்து என்னன்னா கல்வி அப்படீங்கறது பணம் சேர்ப்பதற்கான ஒரு அங்கீகார முத்திரை அப்படீன்னு ஆகிப் போச்சு. வணிகத்திற்கு முதலீடு பண்ற மாதிரி கல்விக்கு முதலீடு பண்றதாலே, ஆதாய நோக்கம்தான் அதிகமாயிட்டு வருது.

நான் பொதுவாச் சொல்றேன். எதார்த்தமா மனிதர்களை படிக்கிற மனசு. யாருக்கு இருக்கிறதோ அவங்கதான் அறிவாளி. அறிவாளி வேற. புத்திசாலி வேற. என்னடா குழப்பறேன்னு பார்க்கிறீங்களா?

புத்தி அப்படீங்கறது கொஞ்சம் சாமர்த்தியமா இருக்கிறதுக்கு அடையாளம். அறிவு அப்படீங்கிறது சரியா இருக்கிறதுக்கு அடையாளம். நான்பொதுவாச் சொல்றேன், புத்திசாலியா மனுஷன் இருக்கலாம். அது தேவைதான். ஆனா சந்தர்ப்ப சூழ்நிலைகள் தெரிஞ்சு சமுதாயத்துக்கு தான் செய்ய வேண்டிய கடமைகள் புரிஞ்சு அறிவாளியா நடந்துக்கிறானான்னு பாக்கறதுதான் அடிப்படையில ரொம்ப ரொம்ப முக்கியம்.

“படித்ததினால் அறிவு பெற்றவர் ஆயிரம் உண்டு. படிக்காத மேதைகளும் பாரினிலே உண்டு” அப்படீன்னு ஒரு பழைய சினிமாப் பாட்டு இருக்கு. அறிவுங்கறது படிச்சுதான் வரணும்னு அவசியமில்லை. படிக்கிற பள்ளி, அங்கிருக்கிற ஆசிரியர்கள், ஆசிரியர்களின் அணுகுமுறை இத்தனையும் சேர்ந்து, சில அறிவாளிகளை உருவாக்கலாம்.

நான் பொதுவாச் சொல்றேன், பெரும்பாலான பள்ளியிலே புத்திசாலிங்கதான் படிச்சுட்டு இருக்காங்க. மாவட்டத்துல முதல் இடத்துக்கு பள்ளி வரணுங்கறதுனால 10-ம் வகுப்பிலேயும், 12-ம் வகுப்பிலேயும் ஒரு இராணவம் நடத்தறமாதிரி பள்ளிக்கூடங்கள் நடக்குது. குழந்தைகள் மனசுல எவ்வளவுக்கு எவ்வளவு பரீட்சையிலே எழுத முடியும் அப்படீங்கற எல்லைகளுக்கு உட்பட்டு தான் இப்போது கல்வி முறையே ஆகிப்போச்சு.

படிப்பு அபட்டீங்கறது ஒரு பந்தயம் போல நடந்துக்கிட்டிருக்கு.

நான் பொதுவாச் சொல்றேன். பந்தயமுன்னு வந்துட்டாலே பக்கத்திலிருக்கிற எல்லோரும் எதிரியாகத்தான் தெரிவாங்க. அதனால கல்வி அப்படீங்கறது வேலைக்கு இளைஞர்களை தயார் பண்ண வேண்டியதுதான். ஆனால் வாழ்க்கைக்கு பயனில்லாம ஆக்கிடக்கூடாது.

நான் பொதுவாச்சொல்றேன், என்னதான் பெரிய பெரிய பதவிகளிலே அமர்ந்தாலும் சொந்தமா தொழில் தொடங்கினாலும் மனசுல நேயம் இல்லாமல் மக்கள் மத்தியிலே போன வாழ்க்கை சந்தோஷமா இருக்காது. ஒரு இறந்த வணிகன், ஒரு சிறந்த அறிஞர் எல்லாவற்றையும் தாண்டி, ஒரு சிறந்த மனிதன் உருவாக வேண்டியது தான் உடனடித் தேவையாயிருக்கு.

நான் பொதுவாச் சொல்றேனு. இந்த மாற்ற்தை இந்தியாவில் ஏற்படுத்தணும்னு விவேகானந்தர் ரொம்ப விருப்பப்பட்டாரு. Manmaking Education “மனிதர்ளை உருவாக்கும் கல்வி வரவேணும்னு” அந்த வீரத்துறவி தவமிருந்தார். பாடத்திட்டங்களைப் பற்றி கண்ணோட்டங்களை நாம் மாத்தணும். மத்திய அரசாங்கம் ஜாதகம், சாஸ்திரம் பற்றியெல்லாம் கல்வியிலே சேர்த்தலாமான்னு பார்த்துகிட்டிருக்கு.

நான் பொதுவாச்சொல்றேன். மனிதனுடைய மூளைக்கு தீனி போடுவது மட்டும் கல்விக்கு வேலையில்லை. இதயத்தை பண்படுத்தறதும் கல்வியினுடைய முக்கிய கடமைதான். முதல்ல நல்ல புத்தக்களை தேடிப் படிக்கிற பழக்கத்தை ஏற்படுத்தணும். பாடப் புத்தகங்களை மட்டும் படிக்கிற ஒவ்வொரு குழந்தைக்கும் அன்றாட வகுப்பில் நடக்கிற பீரியடுகள்ள நூலகம் என்ற ஒரு பீரியும் கண்டிப்பா இருக்கணும்.எந்தப் புத்தகங்களை ஒவ்வொரு குழந்தையும் தேடிப்படிக்குதோ அந்தத் துறையில அதுக்கு நாட்டம் இருக்குதுன்னு தெரிஞ்சு அதுக்கு தேவையான சூழலை ஏற்படுத்தணும்.

நான் பொதுவாச் சொல்றேன். 10 வகையான செடிகளை வீட்டில் வைக்க தோட்டம் அமைச்சாலே ஒவ்வொரு செடிக்கும் என்னன்ன தேவைன்னு பார்த்துப் பார்த்து அதுக்குத்தகுந்த உரம் போடு, தேஐயான அளவுக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்கணும். ஆறறிவுள்ள மனிதர்களுக்கு மட்டும் ஒரே மாதிரியான கல்விமுறை, ஒரே மாதிரியான பாடத்திட்டம் எப்படிப் பொருத்தமாய் இருக்கும். நீங்களே சொல்லுங்க.

ஒவ்வொரு வீட்டிலேயும் எதிர்கால டாக்டரையோ இன்ஜினியரையோ, கம்ப்யூட்டர் ஸ்பெஷலிஸ்ட்டையோ வளர்த்திட்டிருக்கோம். நான்பொதுவாச்சொல்றேன். ஒவ்வொரு வீட்டிலேயும் இந்தியாவின் எதிர்காலம் வளருது என்கிற பொறுப்புணர்வு இருக்குமேயானால், குறுகிய வட்டத்தைக் கடந்து, விரிந்த பார்வையோடு, பரந்த மனசோடு பிள்ளைகளை ஒவ்வருத்தரும் வளர்க்கத் தொடங்குவோம்.

புத்தகங்களைப் படிக்கற மாதிரியே மனிதர்களை படிக்கறதும் ரொம்ப ரொம்ப முக்கிம். இதை குழந்தைகளுக்கு எப்படியாவது கற்றுக்கொடுங்க.

இதயம் பாதி மூளை பாதி
இணைந்து ஜெயிப்பதே மனித ஜாதி.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment