Home » Articles » வெற்றியின் மனமே

 
வெற்றியின் மனமே


இராமநாதன் கோ
Author:

இன்று முதல் நீங்களும் செல்வந்தர்தான்

தன்னுடைய டிரைவரோடு எல்லா ஊர்களுக்கும் மருத்துவ கருத்தரங்குகளுக்குச் சென்று வருவார் அந்த பிரபல டாக்டர்.

ஒவ்வொரு கூட்டத்திலும் பேசுவதை அந்த டிரைவரும் உன்னிப்பாக கவனித்திருந்தார்.

பலமுறை, பல நாட்கள் தொடர்ந்து பேசுவதைக்கேட்டு வந்ததால், டாக்டர் பேசுகிற அத்துனையும் சரளமாக பேசுமளவிற்கு பழகிவிட்டது டிரைவருக்கு.

ஒரு கூட்டத்திற்குச் செல்லும்போது, எதேச்சையாக டாக்டரிடம், “ஐயா, நீங்கள் வழக்கமாக பேசுகிற எல்லா விஷயங்களும் எனக்கு அத்துப்படி, அதான் இன்னிக்கு நான் உங்க கோட்டை அணிந்து கூட்டத்தில் பேசுகிறேன்” என்று கேட்க, டாக்டரும் சரி என்றார்.

கூட்டம் நடந்தது.

டாக்டர் கோட்டை அணிந்திருந்த டிரைவர் சிறப்பாகவே உரையாற்ற, இதை கூட்டத்தின் கடைசியில் அமர்ந்து டிரைவர்போல, அந்த டாக்டரும் ரசித்துக் கொண்டிருந்தார் பார்வையாளர்களின் வழக்கமான பல்வேறு கேள்விகளுக்கும் திறமையாகவே பதிலளித்தார், டிரைவர்.

திடீரென ஒரு புதுமையான கேள்வியை பார்வையாளர்களில் ஒருவர் கேட்டார்.

இதுவரை அப்படியொரு கேள்வியை யாரும் கேட்டதில்லை.

பின் வரிசையில் அமர்ந்திருந்த உண்மையான டாக்டர், “இந்த கேள்விக்கு பதில் டிரைவருக்குத் தெரியாதே; டிரைவர் திணறி மாட்டப்போறான்” என எண்ணிக் கொண்டிருக்கும்போதே “ச்சே.. இதென்ன பெரிய சந்தேகம்? என்னுடைய டிரைவர் கடைசியில் அமர்ந்துள்ளார். அவரே இதை உங்களுக்குச் சொல்லி விடுவார்,” என்றார்.

பின் வரிசையில் அமர்ந்திருந்த டாக்டரும் உடனே எழுந்து தன் உண்மை நிலையைக்காட்டிக் கொள்ளாமல் பெரிய சந்தேகக் கேள்விக்கு பதலளித்துவிட்டார்.

டிரைவரின் சமயோசித புத்திதான் சிறந்த ஆபத்து பாந்தானாக காப்பாற்றியது.

வெற்றியைப் பெற நினைக்கிற ஒவ்வொருவருக்கும் இந்த “ஆபத்து பாந்தான்” அவசியமாக இருக்க வேண்டும்.

அது என்ன?

பதிலுக்கு வருமுன் சில நடைமுறைகளைப் பார்ப்போம்.

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் எத்தனை சிக்கல்களை எதிர்கொள்கிறான்?

திடீர் விபத்துக்கள்.

எதிர்பாராத உடல் பாதிப்புகள்

திடீரென வேலையிழப்பு.

பண முடக்கம்.

முன்ன்றிவிப்பில்லாத விலைவாசியேற்றம்.

வருமானம் தந்து கொண்டிருந்த எஞ்சின் திடீரென பழுதடைதல்.

நெருங்கிய உறவினரின் அவசரத் தேவைகள்.

இப்படி, தொடர்ந்து அடுக்கிக் கொண்டே போகலாம்.

இப்படியெல்லாம் வரும்போது என்னாகிறது?

மனக்குழப்பம்,
குடும்ப சிக்கல்,
பணம் இழப்பு,
அன்றாட நடைமுறை பாதிப்பு

சீராக ஓடிக் கொண்டிருந்த பயணத்தில் எந்த பக்கமும் போக வழியில்லாமல் அடைந்துவிட்டால் என்ன செய்ய முடியும்?

அப்படித்தான் பலர் தவிக்கிறார்கள்.

அதற்குத்தான் “ஆபத்து – பாந்தான் தேவை.

அதுதான் “சேமிப்பு”

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் யாரெல்லாம் சேமிப்பு இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களெல்லாம் ஏதாவது ஒரு கால கட்டத்தில் அவதிப்பட்டே தீருவார்கள்.

எப்படி சேமிப்பது?

எவ்வளவு சேமிப்பது?

அதன் அவசியம் என்ன?

எந்த வகை சேமிப்பை செய்வது?

என்பை இனி ஆராய்வோம்.

ஒருவர் தன்னுடைய ஒரு மாத செலவிற்கு தேவையான பணத்தையாவது தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இது குறைந்த பட்ச சேமிப்பு.

அதுவே ஒரு வருட வருமான அளவிற்கு சேமிப்பு இருந்தால் அதை திருப்தியான சேமிப்பு எனலாம்.

சேமிப்பின் அளவு, அவரவர் தொழில், வருமானம், பணப் புழக்கத்திற்கேற்ப மாறுபடும்.

உதாரணத்திற்கு பல லட்சியங்களை வைத்து தொழில் செய்பவர் சுமார் ஒரு லட்சம் ரூபாயாவது தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தன்னுடைய வருமானத்தில் இருபது சதம் சேமிக்கும் பழக்கமுள்ளவர்களே சரியான சேமிப்பை செய்பவர்கள்.

இனி சரியாக திட்டமிட்டு சேமிக்காதவர்களின் புலம்பல்களைப் பார்ப்போம்.

“அந்த வீட்டைக் கட்டலாம்னு திட்டம் போட்டேன். எல்லா முதலும் போயிருச்சு.”

“எல்லா வசதியுடன் வாழ்ந்த குடும்பந்தான்; இன்னிக்கு நடுரோட்டுல நிக்குது.”

“பெரிய அந்தஸ்துதான்; வெளியில சொல்ல முடியாத பணச்சிக்கல்கள்.”

“நான் போட்ட திட்டமெல்லாம் தப்பாயிடுச்சு; இனி எங்கே போய் நிக்கறதுன்னு தெரியல.”

“எல்லாரையும் திருப்திப்படுத்த நெனச்சு தான் செஞ்சேன். எனக்கு யாரும் கை கொடுக்கல.

இப்படி எண்ணற்ற சம்பவங்களை நாள்தோறும் பார்க்கலாம்.

“எனக்கு ஏற்கனவே கடன் சுமை தாங்கல; இதுல போயி சேமிப்பு எப்படி சாத்தியம்? என்று சிலர் நினைக்கலாம்.

இவர்கள் கூட இரண்டு ரூபாய் லாபத்திற்கு சேமிப்பில் வைத்தாலும் தவறே இல்லை எனலாம்.

ஏற்கனவே கடனில் உள்ள ஒருவனுக்கு இது அவசியம்தானா?

இக்கேள்விகளுக்கு நான் ஒரு உறுதியான பதிலைச் சொல்வேன். பல நல்லமனிதர்கள் உங்களுக்கு துஐயாக இருக்கலாம். பெரிய நிறுவனத்தில் நீங்கள் பணிபுரிபவராக இருக்கலாம்; உங்களுடைய அவசரத் தேவைக்கு உதவ ஆயிரக்கணக்கானோர் கூட இருக்கலாம்.

இருந்தாலும், அவசர நேரத்தில் அல்லது ஆபத்து காலங்களில் உங்களுடைய சேமிப்பிலிருந்து எடுத்து அந்த பண நெருக்கடியிலிருந்து விடுபடுகி அனுபவமிருக்கிதே அதற்கு இணையாக எதையும் ஒப்பிடவே முடியாது.

அந்த சமயத்தில் உண்டாகும் பாதுகாப்பு உணர்வு, திருப்தி, நம்பிக்கை, மனதைரியம், உற்சாகம் போன்றவைகளுக்கு எதை ஈடாக்க முடியும்?

இன்றைய நாளில் பல நிதி நிறுவனங்கள் “திவாலா” வதையும் பார்க்கிறோம்.

அதனால் எந்த வகை சேமிப்பு பாதுகாப்பானதோ, உடனடி தேவைகளை ஈடு செய்யுமோ அதில் வட்டி குறைவாக இருந்தாலும் அத்தகைய சேமிப்பே உயர்ந்ததாகும்.

நான் ஒரு சுயமுன்னேற்ற பயிலரங்கத்தில் இந்த கருத்தை அதிகமாக வலியுறுத்தி பேசியபோது ஒருவர் எழுந்து கேட்டார்.

“நீங்கள் சொல்வதப்பார்த்தால் பணம் தான் முக்கியம் என்று நினைக்கத் தோன்றுகிறது” என்றார்.

இங்கு ஒரு முக்கிய கருத்தை விளக்குவது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.

நம்முன்னோர்கள்சொன்ன பொன் மொழிகளாவன.

பணத்தால் கட்டிடத்தை வாங்க முடியும்; ஆனா குடும்பத்தை வாங்க முடியாது.

பணத்தால் படுக்கையை வாங்க முடியும்; ஆனால் தூக்கத்தை வாங்க முடியாது.

பணத்தால் இரக்கத்த வாங்க முடியும்; ஆனால் ஒரு வாழ்கையை வாங்க முடியாது.

பணத்தால் மருந்தை வாங்க முடியும்; ஆனால் உடல் நலனை முழுவதும் வாங்க முடியாது.

பணத்தால் மனிதர்களை கூட வாங்கலாம்; ஆனால் உண்மயான அன்பை வாங்க முடியாது.

பணத்தால் இன்சூரன்ஸ் வாங்கலாம்; ஆனால் உயிர் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் வாங்க முடியாது.

இவையெல்லாம் சரிதான்; யாருமே மறுக்க முடியாதுதான். ஆனால்அதை எதற்காக, யாருக்காக சொன்னார்கள்? பணத்திற்காக பேராசைப்பட்டுதன்னை அழித்துக் கொள்பவர்களுக்காக, பணத்தற்காக நியாய நெறிகளை மறந்துவிட்டவர்களுக்காக.

பணத்திற்காக பிறரை வஞ்சிப்பவர்களுக்காக.

நியாயமான செல்வ சேமிப்பை, ஆரோக்கயமாக சம்பாதிப்பதை அதே முன்னோர்க் பல்வேறு கோணங்களில் வலியுறுத்தினார்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

இங்கு முக்கிய கேள்வி ஒன்றைக்கேட்க வேண்டும்.

யார் ஏழை? என்பதுதான்.

பணக்கார்ராக பிறக்காதவன் ஏழையல்ல; பணமில்லாதவன் ஏழையல்ல;

பணம் சம்பாதிக்காதவனும் ஏழையல்ல.

அப்படியென்றால் யார்தான் ஏழை?

பணம் சம்பாதிக்க எண்ணாதவனே ஏழை?

பணம் சம்பாதிக்க எண்ணிவிட்டாலே நங்கள் ஏழையல்ல; இது உறுதி.

அதன் முதற்படிதான் “சேமிப்பு” என்ற ஆபத்து – பாந்தான்.

உங்களுடைய வருமானத்தில் முதல் பத்து முதல் இருபது சதத்தை முதலில் சேமிப்பில் வைத்துவிட்டு மற்ற செலவுகளைச் செய்யுங்கள். இன்று சேமிப்பை தொடங்கி விட்டால், நீங்களும் செல்வந்தர்தான்.

தொடரும்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2001

வணக்கம் தலைவரே
முயற்சிதான் மந்திரம் உழைப்புதான் தந்திரம்
நம்பிக்கையும் நானும்
மனித நேயத்திற்கு மகுடங்கள்!
எழுக! வெல்க!
நிறுவனர் பக்கம்
துணிவோடிரு!
உறவுகள்….. உணர்வுகள்….
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்
சுய முன்னேற்றம்??
பெற்றோர் பக்கம்…
பொதுவாச்சொல்றேன்
வெற்றியின் மனமே
கேள்வி பதில்
வருதத்தின் பிடியில் வல்லரசு
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்