Home » Articles » மனசுவிட்டுப் பேசுங்க….

 
மனசுவிட்டுப் பேசுங்க….


admin
Author:

நான் ஒரு பள்ளி ஆசிரியை, எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்களாகின்றன. என் கணவருக்கும் எனக்கும் அவ்வப்போது மிகுந்த வேறுபாடுகள் உண்டாகின்றன. இது நாளுக்கு நாள் அதிகமாவதாக நினைக்கிறேன். இதனால் மனமுடைந்த நான் ஒருமுறை தற்கொலை முயற்சியில் இறங்கினேன். இனி அப்படி தவறு செய்யக்கூடாது என்று முடிவெடுத்தாலும் அவ்வப்போது கணவர் வெறுப்பைக் காட்டும்போது மனமுடைகிறேன்.. என்ன செய்யலாம்.?


முல்லாவின் கதை ஒன்றைச் சொல்கிறேன்.

முல்லா ஒருமுறை பெரிய துணிக்கடை நடத்ததிய மகளிர் அணிவகுப்பின் ‘பேஷன் ஷோ’ விற்கு சென்றார்.

அழகான பெண்கள் விதவிதமான துணிகளுடன் காட்சியளித்தார்கள். முல்லாவிற்கு மிகுந்த குஷி.

வீடு திரும்பிய முல்லாவிடம் மனைவி ‘எப்படி பேஷன் ஷோ’? என்று கேட்டார்.

‘ஒரே ஏமாத்து வேலையா இருக்கு!’

‘என்ன சொல்றீங்க’ – மனைவி.

‘அழகான பெண்களுக்கு புடவையை கட்டி நடக்க விட்டு காட்டிட்டு பிறகு வாங்கப்போகும் போது வெறும் புடவையை மட்டும் கொடுக்கறாங்களே! என்றார் முல்லா.

அதைப்போல திருமண எதிர்ப்பார்ப்புகள் ஒவ்வொருவருக்கும் நிறைய உண்டு. ஆனால் நடைமுறைக்கு வரும்போது முல்லாக் கதையைப் போல சிலருக்கு ஏமாற்றங்களாகத் தோன்றவது உண்டு. அதுதான் இது போன்ற வெற்றுப்புளுக்குக் காரணம்.

எக்காரணத்தைக் கொண்டும் மனமுடையாமல் உங்கள் கடமைகளைச் செய்யுங்கள்.

இயன்றவரை உங்களுடைய திறமைளை வளர்த்துக்கொண்டே வந்தால் உங்களுடைய கணவருக்கு மேலும் பயனுள்ளவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.

அந்த நிலைக்குப்பின் உங்கள்மீதுள்ள வெறுப்பு மறைந்துவிடும்.

இதற்கு மேலும் ஆலோசனை தேவைப்பட்டால் நேரில் விளக்கம் பெறவும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2001

சிரிப்போம் சிறப்போம்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
வெற்றிப்பாதை
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
டாக்டர் ருத்ரன் பதில்கள்
நிறுவனர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
வாசகர் கடிதம்
மனித சக்தி மகத்தான சக்தி
உறவுகள் உணர்வுகள்
பொதுவாச் சொல்றேன்
வணக்கம் தலைவரே!
சிந்தனைத்துளி
மனசுவிட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்