Home » Articles » மனசு விட்டுப் பேசுங்க….

 
மனசு விட்டுப் பேசுங்க….


admin
Author:

எனக்கு ஒரு பெரிய தொழிலதிபராக ஆசை. ஆனால் யாரிடமும் பேச பயமாக இருக்கிறது. என் தாழ்வு மனப்பான்மையால் எதையுமே செய்ய முடியல. இப்பட்டி இருந்தால் என் வாழ்க்கையும் லட்சியமும் வீணாகிவிடுமோன்னு நினைக்கிறேன். இதற்கு வழி என்ன?
(பெயர், ஊர் வேண்டாம்)

இதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்லலாம். நீச்சல் பழக, பழைய முறைப்படி சுரைப்படி அல்லது இப்போதுள்ள இரப்பர் மிதப்பானை இடுப்பில் கட்டுவார்கள்.

தண்ணீரில் நீந்தப் பழகும்போது அவருக்கு அளவற்ற ஆசை இருக்கும். தண்ணீரில் அருகில் போவார் பிறகு தள்ளி வந்து விடுவார். இப்படி பல முறை முயற்சிப்பார். ஆனால் ஒரு முறை கூட தண்ணீரில் குதிக்கவே மாட்டார்.

இப்படி ஒரு சில நாட்கள் கூட போய்விடும். இறுதியில் நீச்சலை பழக்குபவர், அவரைப் பிடித்து தண்ணீருக்குள் சடாலென தள்ளி விட்டு விடுவார். “செத்தேன்” என்று அலறியபடி தண்ணீரில் விழுந்தவர், சில நிமிடங்கள் தடுமாறுவார். பிறகு தன்னை சுதாரித்துக் கொண்டு நீந்த ஆரம்பிப்பார். அப்போது தான் நீந்துவதன் இன்ப அனுபத்தை உணருவார். இந்த நிலைக்குப் பின் அவரே தண்ணீரில் குதித்து வெகு சீக்கிரம் நீச்சலை கற்று மகிழ்ச்சியாக மணிக்கணக்கில் நீந்துவார்.

அதைப்போல உங்களுக்குள்ள தயக்கம், பயம், தாழ்வு மனப்பான்மையும்தான் உங்களை பின்னுக்கு தள்ளிக் கொண்டிருக்கின்றன. உங்களை யாரும் பிடித்துத்தள்ள முடியாது. அதனால் நீங்களே தள்ளிவிட்டுக் கொள்ள வேண்டியதுதான். அதற்கு சில வழிகளை கடைபிடியுங்கள்.

வழியில் பார்ப்பவரிடம் எல்லாம் “டைம் என்னாச்சு?” எனக் கேளுங்கள்.

எங்கேயோ பார்த்தவராக இருந்தால் வலிய சென்று ‘குட்மார்னிங்’ சொல்லுங்கள்.

யாராவது நற்செயல்களைச் செய்திருந்தால், நீங்களாகச் சென்று அவரைப் பாராட்டுங்கள்.

தினமும் ஒரு புதிய தெருவில் சென்று சுமார் மூன்று முதல் ஐந்து பேரிடம் ‘இந்த தெரு எங்கே போகுது?’ எனக் கேளுங்கள்.

ஒரு கடையில் ஒரு செய்தித்தாளை வாங்கி விட்டு நூறு ரூபாயை கொடுத்து சில்லறையை வாங்குங்கள்.

எதுவும் வாங்காமலேயே நூறு ரூபாய் அல்லது ஐந்நூறு ரூபாய்க்கு சில்லறை கேளுங்கள்.

கடைக்காரர் மறுப்பார். இருந்தாலும் அவரை சம்மதிக்க வையுங்கள்.

பஸ்ஸில் ஏறி ஐந்நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து பத்து ரூபாய் டிக்கெட் கேளுங்கள். கண்டக்டர் இறங்கச் சொன்னாலும் எப்படியாவது சமாளித்து சில்லறை வாங்கி விடுங்கள்.

எந்த மனிதரைப் பார்த்தாலும் தயக்கமில்லாமல் ‘வாங்க’, ‘வணக்கம்’ னு சொல்லுங்கள்.

மேடையில் பேச வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ஒரு சில நிமிடங்களாக பேசுங்கள்.

இவற்றில் சில ஏடாகூடமான செயல்கள் போலத்தோணும். நீச்சல் குளத்தில் தள்ளி விடற மாதிரிதான். அதனால் இந்த தயக்கம் பம் பகிற வரைக்கும் இதுல எதல்லாம் முடியுதோ அதை பிராக்டீஸ் பண்ணுங்கள். ஒரு சில மாதங்களில் நீங்கள் தரையிசாலியாகிவிடுவீர்கள். உங்களுடைய தொழிலதிபர் இலட்சியமும் நிறைவேறிவிடும்.

இதைத்தான் மேலை நாடுகளில்”Assertive Training” என சில மாதங்களுக்கு கோர்ஸ்ஸாகவே நடத்துகிறார்கள்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2001

மனசு விட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உறவுகள்… உணர்வுகள்
நான்கு பந்துகளுடன் நம்முடைய வாழ்க்கை!
கேள்வி – பதில்
வாசகர் கடிதம்
நீங்கள் எடுக்கும் முடிவான முடிவு என்ன?
தலைப்புச்செய்தி
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்
நிறுவனர் பக்கம்
சிரிப்போம் சிறப்போம்
பொதுவாச்சொல்றேன்
“ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?”
"ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?"
வணக்கம் தலைவரே
பெற்றோர் பக்கம்