Home » Articles » பொதுவாச்சொல்றேன்

 
பொதுவாச்சொல்றேன்


புருஷோத்தமன்
Author:

உலகத்திலேயே எனென்னன புதுமைகள் ஏற்பட்டு வந்தாலும், நாட்டு நடப்பை நல்லாப் புரிஞ்சிருக்கணும்னா பழைய பழமொழிகளைத் தேடித்தான் நாம போக வேண்டியிருக்கு.

“பழமொழி” அப்படீன்னா பழுத்த அனுபவத்தில் கிடைத்த மொழிதானே. அப்படியொரு பழமொழியை இப்ப நினைச்சுப் பார்க்கறேன்.

“கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” அப்படீன்னு சொல்லுவாங்க.. இப்ப இந்தப் பழமொஇயை ஏன் சொல்றேன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.

நான் பொதுவாச் சொல்றேன். பார்க்கறது, கேட்கறது எல்லாம் நிஜம் போல இருக்கு. ஒரு விஷயத்தைப் பார்க்கற போது இன்னொரு விஷயம் பொய்யாத்தெரியுது. ஒரு செய்தியக் கேட்கற போது இன்னொரு செய்தி பொய்யாத்தெரியுது. அப்படீன்னா, உண்மையை எப்படிக் கண்டுபிடிக்கறது?

அதுக்குப் பெரியவங்க சொன்ன வழிதான், தீர விசாரிப்பதே மெய், இதிலே, தீர விசாரிப்பது அப்படீங்க வார்த்தை ரொம்ப முக்கியம். நான் பொதுவாச் சொல்றேன், இருக்கற எல்லா சந்தேகங்களும் தீர விசாரிப்பது மெய் அப்படீன்னு.

நாம சின்ன வயசுல ஒரு கதை படிச்சிருக்கோம். ஒரு அம்மா வீட்டிலே பூனை வளர்த்தாங்க. அவங்க கைக்குழந்தையை விட்டுட்டு கடைக்குப் போய் வந்தாங்க. வாசலிலே வாயெல்லாம் ரத்தம் ஒழுகப் பூனை நிற்கறதைப் பார்த்தாங்க. “அய்யோ குழந்தையைக் கடிச்சுட்டியே? அப்படீன்னு பூனையை அடிச்சுக் கொன்னுட்டு உள்ளே போய்ப்பார்த்தா, குழந்தை அமைதியா தூங்குது. பக்கதிலே ஒரு பாம்பு துண்டு துண்டா கிடக்குது.

நான் பொதுவாச்சொல்றேன். உணர்ச்சி வேகத்திலே இப்படி முடிவெடுக்கறது உண்மையைத் தெரிஞ்சுக்க விடாம செய்திடும்.

“தீர விசாரிப்பதே மெய்”, இதுக்கு சிலபேர் வேடிக்கையா சொல்வாங்க. வாதி – பிரதிவாதி ரெண்டு பேர் கிட்டேயும் இருக்கிற பணம்,சொத்து எல்லாம் “தீர” விசாரிப்பதே மெய் அப்பீன்னு…

உண்மை என்னன்னா, ஒவ்வொரு பிரச்சைனயையும் ஆழமா விசாரிக்கிறபோது, இரண்டு பக்கத்துக்கும் சாதகமாகவும் பாதகமாகவும் நிறைய விஷயங்கள் வெளியே வந்து சந்தேகத்தைக் கிளப்பும். அந்த சந்தேகங்கள் அத்தனையும் “தீர” விசாரிப்பதுதான் மெய்.

நான் பொதுவாச் சொல்றேன், அப்படி விசாரிக்கிற வாய்ப்பு எதுவாக இருந்தாலும் அதை இரண்டு பக்கமும் சரியா பயன்படுத்தி முறையா தகவல்களைத் தரணும். தன்னுடைய கருத்தையோ, வாதத்தையோ வெளிப்படுத்த எத்தனை வாய்ப்புண்டோ அத்தனையும் பயன்படுத்துறதுதான் நல்லது.

ஒரு பொதுவான சிக்கலிலே “கருத்துருவாக்க வாதிகள்”னு பலர் இருக்காங்க. பத்திரிகைகள், அனைத்துத்துறை பிரமுகர்கள்னு அந்தப்பட்டியல் நீண்டுக்கிட்டே போகும்.

மக்கள் செல்வாக்கு காரணமா அவங்க கருதுக்குத் தனிமதிப்பு ஏற்படும். அப்படி இருகிறவங்க பெரும்பாலும்சரியான கருத்தை நிதானமா வெளிப்படுத்தினாதான் நல்லது.

நான் பொதுவாச் சொல்றேன். சொல்கிற வார்த்தைக்கு மதிப்பு இருக்குன்னா மனசளவிலே நாம நீதிபதிகளா செயல்படணும்.

நான் பொதுவாச்சொல்றேன், சொன்ன வார்த்தை சொன்னதுதானே..அதிலே கவனம் இருந்தா கவலையே கிடையாது. தீர விசாரிக்க தெளிவா தெரியறதையே சொல்லுவோம்.

பதறாமல் உண்மைகளைப் பார்க்கிற பக்குவம் பலகாலமாய் நம்மை உயர்த்துகிற தத்துவம்.

(தொடரும்)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2001

மனசு விட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உறவுகள்… உணர்வுகள்
நான்கு பந்துகளுடன் நம்முடைய வாழ்க்கை!
கேள்வி – பதில்
வாசகர் கடிதம்
நீங்கள் எடுக்கும் முடிவான முடிவு என்ன?
தலைப்புச்செய்தி
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்
நிறுவனர் பக்கம்
சிரிப்போம் சிறப்போம்
பொதுவாச்சொல்றேன்
“ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?”
"ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?"
வணக்கம் தலைவரே
பெற்றோர் பக்கம்