Home » Articles » வெற்றியின் மனமே

 
வெற்றியின் மனமே


இராமநாதன் கோ
Author:

கவனமாக வீசுங்கள்!

சிலருக்குத் தெரியும்; பிழைக்கத் தெரியாது. இவர்கள் ஏமாளிகள்.

சிலருக்குத் உழைக்கத் தெரியாது. ஆனால் பிழைக்கத் தெரியும். இவர்கள் திருடர்கள்.

சிலருக்கு உழைக்கவும் தெரியாது; பிழைக்கவும் தெரியாது. இவர்கள் முட்டாள்கள்.

ஒரு சிலருக்கே உழைக்கவும் தெரியும்; பிழைக்கவும் தெரியும். அவர்களே புத்திசாலிகள்.

நீங்களும் புத்திசாலியாக விளங்க வேண்டுமானால் அதற்கு சில அஸ்திரங்களை நன்றாக வீசக் கற்றுக் கொள்ள வேண்டும்.

முதல் அஸ்திரம் பாராட்டுதல்.

முன்னாள் பிரமதர் மொரார்ஜி தேசாய் பற்றி ஒன்றைச் சொல்வார்கள்.

அவரை யாராவது நேரடியாக உண்மையாக பாராட்டினால் பிடிக்கவே பிடிக்காது; பாராட்டியவர் மீது கோபப்படுவார்.

ஆனால், அதுவே பாராட்டை விரும்பாத ஒரே மனிதர் இவர்தான் என்று யாராவது சொன்னால் போதும்; உடனே மனம் குளிர்ந்து விடுவார்.

ஆகவே, பாராட்டு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள அடிப்படை தாகம். அது மட்டுமல்லாது மிகப் பெரிய நம்மிடம் உள்ள செல்வங்களை தானம் கொடுக்கிறார்கள்.

அதைச் சரியாகச் செய்தால் அனைவரையும் கவர முடியும். அதைச் செய்யத் தெரியாவிட்டால் உங்களால் செய்ய முடிந்ததைக் கூட செய்வதற்கு சிரமப்பட வேண்டி இருக்கும்.

மனயியல் வல்லுநரான வில்லியம் ஜேம்ஸ் “தன்னை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனுக்கும் அடிமனதிலுள்ள ஆழ்ந்த ஏக்கம். அது கிட்டாவிடில் அம்மனம் நொந்து விடும்” என்கிறார்.

அதனால்தான் மீண்டும் சொல்வேன் “பாராட்டு என்பது ஒவ்வொருவருக்குமுள்ள அடிப்படைத் தாகம்”.

அதற்காகவே பலர்,

தம்மிடம் உள்ள செல்வங்களை தானம் கொடுக்கிறார்கள்.

பல பதவிகளை நாடுகிறார்கள்.

பலர் செல்வத்தைச் சேர்க்கிறார்கள்.

பலர் கடுமையாக உழைக்கிறார்கள்.

பல நண்பர்களை / உறவுகளை நாடுகிறார்கள்.

அதற்காகவே பலர் உயிர் வாழ்கிறார்கள்.

“நான்” ஒரு முக்கியமானவன் என்று நிரூபிப்பதற்காகத்தான், பாராட்டுகளுக்காக மனச்சிதைவிற்கும் ஆளாகிறார்கள்.

பாராட்டு எப்படி இருக்க வேண்டும்? என்பதைப் பார்ப்போம்.

முதலாவது, எதைப்பற்றி பாராட்டுகிறோம் என்ற தெளிவு வேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் வீட்டு விருந்தைப் பாராட்டுகிறோம் என்றால் விருந்து ரொம்பா நல்லா இருந்தது என்று சொல்வோம். அதைவிட “உங்களுடைய விருந்தில் ஒவ்வொன்றும் சிறப்பானவை; அதிலம் அந்த பாயாசத்தின் சுவையும் சாம்பாரின் ருசியும்ம் என்னால் மறக்கமுடியாது” என்று சொன்னால் அவருடைய திருப்தியின் அளவு பன்மடங்காகிவிடும்.

இரண்டாவது, நம்முடைய பாராட்டு அடிமனத்திலிருந்து வர வேண்டும். மனமுவந்து பாராட்டுவதுதான் சிறப்பானதாகும். அதை விட்டு சம்ப்தமே இல்லாத வார்த்தைகளால் உதட்டளவில் (மனதிற்குள் மாறான வேறொன்றை வைத்துக் கொண்டு) பேசுவது புழுகுதல் ஆகிவிடும்.

மூன்றாவது, ஒரு செயலைப் பாராட்டவேண்டுமானால் அதை செய்தவரிடன் உடனுக்குடன் சொல்ல வேண்டும். தள்ளிப் போட்டு செய்யும் பாராட்டுக்கு கவரிச்சியில்லை; பயனுமில்லை.

நான்காவது, ஒருவரைப் பாராட்டினால், அதைப்பற்றி என்ன நினைக்கிறார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க்கூடாது.

ஐந்தாவது, முழுமையாக பாராட்ட வேண்டும். சிலர் பாராட்டும்போது “உங்களுடைய திறைமை பாராட்டுகிறேன்; ஆனால்..” என்று எதையாவது சொல்வார்கள்.

அதற்கு சில உதாரணங்களைப் பாருங்கள்.

“கல்யாண விருந்து நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அந்த பாயாசம் மட்டும் ருசியில்லை.”

“நீங்க எல்லாத்தையும் சரியாச் செஞ்சீங்க; ஆனா அந்த வேலையைக் கெடுத்துட்டீங்க..”

“உங்க டிரஸ் நல்லாயிருக்கு; ஆனா கலர்தான் டல்லாயிருக்குது” இது போன்ற “ஆனால்” களைச் சொல்லக்கூடாது,, அப்படி சொல்வது சர்க்கரையில் உப்பைக் கலக்குவது போல.

ஆறாவது, குறைகளிலிருந்தாலும் பாராட்டப் பழகுங்கள். சில உதாரணங்களைப் பாருங்கள்.

“நீங்கள் என்னிடம் கடுமையாக பேசுவீர்கள்; ஆனால் உங்களுடைய திறமையை நினைத்து மனம் பூரிக்கிறேன்”.

“விருந்தில் பாயாசம் நம்ம எதிர்பார்ப்புக்கு இல்லாட்டியும் விருந்து ரொம்ப சுவையாக இருந்தது”.

இதைப்போல பாராட்டை வெளிப்படுத்தலாம்.

சரி, இனி என்ன யோசனை? உங்கள் அருகில் யார் இருக்கிறார்கள்? குழந்தைகளா? சகோதரரா? தந்தையா? மனைவியா? கணவரா? நண்பரா?உறவினரா? புதிய நபரா? பணியாளா? மேலதிகாரியா? எதிரியா?

யாராயிருந்தால் என்ன?
அஸ்திரத்தை (பாராட்டு) கையிலெடுங்கள்.
கவனமா, சரியாக வீசுங்கள்
வெற்றிக் கேடயம் உங்களுக்குத்தான்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment