Home » Articles » நம்பிக்கை

 
நம்பிக்கை


admin
Author:

துளிர்க்கும் என்றே
இலைகளை உதிர்ப்பது
மரத்தின் நம்பிக்கை!

மலரும் என்றே
மொட்டுக்கள் உதிர்ப்பது
செடியின் நம்பிக்கை!

உதிக்கும் என்றே
மறைந்து போவது
கதிரவன் நம்பிக்கை!

விடியும் என்றே
இருடில் கிடப்பது
நாளின் நம்பிக்கை!

எழுவோம் என்றே
வீழ்ந்து கிடப்பது
அலையின் நம்பிக்கை!

உயர்வோம் என்றே
வாழ்ந்து வருவது
மனிதனின் நம்பிக்கை!

உலக உருண்டை
சுழன்றிடக் காரணம்
மனிதர்கள் நம்பிக்கை!

-ஜெயலட்சுமி


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2001

தொழில்
வணக்கம் தலைவரே
சிரிப்போம் சிறப்போம்
பெற்றோர் பக்கம்
தன்னம்பிக்கை பாடம் கற்போம்
மனித சக்தி மகத்தான சக்தி
நம்பிக்கையும் நானும்
உள்ளத்தோடு உள்ளம்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்
பொதுவாச்சொல்றேன்
உறுதியா? பிடிவாதா?
நம்பிக்கை
வெற்றியின் மனமே
உறவுகள்… உணர்வுகள்…
நாளும் நாளும் நம்பிக்கை
கேள்வி பதில்
வாசகர் கடிதம்