Home » Articles » வாசகர் கடிதம்

 
வாசகர் கடிதம்


admin
Author:

கைரேகை பார்த்து ஜோதிடம் சொல்வார்கள். கைவிரலை வைத்து மக்கள் குண நலன்களை விளக்கிய ‘வணக்கம் தலைவரே’ சிறப்பாக இருந்தது.

ச. மல்லிகா, கோவை

என்னை முழுமையாக அடையாளம் காண உதியது சக்சஸ் ஜெயச்சந்திரனின் ‘உங்களை உங்களுகு அடையாளம் தெரிகிறதா?’
-சக. அசோக்குமார்,
தண்ணீர் பந்தல் பாளையம்

தனிமனிதன் குடும்ப மனிதன், சமூக மனிதன் எனப்பார்த்து ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்புக்களை விளக்கிய புருஷோத்தமன் அவர்களுக்கு நன்றி. ‘முடியாது’ எனும் வார்த்தையே தன் அகராதியில் இருக்கக் கூடாது என கட்டளை பிறப்பித்த நெப்போலியனைப் போல ‘சாதிக்க முடியாது’ என்ற எண்ணத்தை விட்டொழித்தால் சாதிக்க முடியும் என்பதை அறிவுறுத்திய சக்சஸ் அவர்களுக்கு நன்றி.

-D. சக்தி வடிவேல்
அரவக்குறிச்சி

‘நாளும் நாளும் நம்பிக்கை’ என்.சி. தர்மலிங்கம் அவர்களின் தன்னம்பிக்கை போற்றுதுக்குரியது. சத்குருவின் பதில்கள் அருமை. விவேகாலாயாவில் படிக்கும் இளைய பூக்களின் செயல் பாராட்டுக்குரியது.

பா. வசந்தன், புதியாம்பதி

உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்” நிறுவனர் பக்கத்தில், மலர்களைப் பார்க்காதே மலர்ந்திருக்கும் வேர்களைப் பார். என்ற கருத்து அருமை. உறுதியான வெற்றிக்கு உழைத்துக் கொண்டே இருங்கள் என்ற கருத்து உழைக்கத் தயங்கும் இளைஞர்களையும் உற்சாகப்படுத்தி உழைக்கத்தூண்டும்.

-முகவை தீ. பாலமுரளி, இராமநாதபும்

மற்றவர்கள் கட்டுரைகளை மட்டும் பார்த்து தன்னம்பிக்கை வளர்த்துக் கொண்டதோடு வாசகர்களையும் எழுத வைத்து நம்பிக்கை ஏற்படுத்தும் “நாளும் நாளும்” புதிய பகுதி வரவேற்கத் தக்கது. இன்னும் அதிக இடம் தரலாமே இதற்கு.
-கோவிந்தராஜன், அய்யப்ப நகர்.

‘உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?’ அருமையான படைப்பு ‘சிரிப்போம் சிறப்போம்’ எங்கள் சிந்தனைக்கு விருந்து. மனித சக்தியை அடையாளம் காட்டும் ஜக்கி தொடர் புத்தகமாக வெளியிட வேண்டுகிறோம்.
-டி.ஏ.பார்த்திபன்,
தெலுங்குபாளையம்.

சத்குருவின் ‘மனித சக்தி மகத்தான சக்தி’ படிக்கப் படிக்க பேரானந்தம் ஏற்படுத்துகிறது.
-தர்மா, சோமனூர்

‘வெற்றியின் மனமே… வணக்கம் தலைவரே, உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா, சிரிப்போம், சிறப்போம்’ என அனைத்து பகுதிகளும் அருமை. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
-பி. தமிழ்செல்வி, சேவூர்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2001

நிறுவனர் பக்கம்
பெற்றோர் பக்கம்
தப்பித்தலா? விடுதலையா?
உள்ளத்தோடு உள்ளம்…
முழுமையாய் வாழ்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள்
வாசகர் கடிதம்
நம்பிக்கையும் நானும்
உற்சாக உற்சவம்
மனசுவிட்டுப் பேசுங்க….
வணக்கம் தலைவரே
சத்குரு பதில்கள்
உணவகம்
மனித சக்தி மகத்தான சக்தி
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
சிரிப்போம் சிறப்போம்
நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்
வெற்றியின் மனமே
பொதுவாச் சொல்றேன்