Home » Articles » உற்சாக உற்சவம்

 
உற்சாக உற்சவம்


admin
Author:

தன்னம்பிக்கை மாத இதழும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் ‘விட்டு விடுதலையாவோம்’ என்னும் முன்னேறத் துடிப்போருக்கான மெகா பயிலரங்கின் ஏழாவது நிகழ்ச்சி 15.4.2001 அன்று கோவை நானி கலையரங்கில் நடைபெற்றது. நிரம்பி வழிந்தது அரங்கம். நடைபாதையிலும் அணி அணியாக அமர்ந்திருந்தனர். முன்னேறத்துடிக்கும் இளைஞர்கள்.

தன்னம்பிக்கை இதழின் இணை ஆசிரியர் திரு. மரபின் மைந்தன் முத்தையா வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து பேசிய டாக்டர் பெரு. மதியழகன் தனது உரையில், “ஒருவரின் உயரமோ, உருவமோ அவரது உண்மையான திறமை, வளர்ச்சியில் தடை ஏற்படுத்தாது. மனதில் திடமும், உழைப்பும், முயற்சியும் கொண்டிருந்தால் வளர்ச்சி ஏற்படும்.

இளைய சமுதாயத்தினர் பெரும்பாலும் தங்கள் உருவம், உடை இவற்றில்தான் உயர்ந்த நிலை என்று எண்ணியுள்ளனர். அது தவறான கருத்தாகும். புறத்தோற்றத்தை விட்டொழித்து அகத்தோற்றத்தை அழகுபடுத்துதலே அவசியம். தாழ்வு மனப்பான்மை என்பது உயரிய வாழ்க்கைக்குத் தடையாதாகும்” என்றார்.

தாழ்வு மனப்பான்மை உள்ளவரை எப்படிக் கண்டுகொள்வது? அவர்கள் எந்த ஒரு இடத்திலும் முன்புறம் இருக்க மாட்டார்கள். அடுத்தவரை மட்டம் தட்டிக் கொண்டேயிருக்கும் பொறாமைக்குணம் கொண்டவர். எல்லாக் கூட்டத்திலும் பின்புறம் ஓடி ஒளிந்து கொள்பவர் என்று டாக்டர் இல.செ.கவின் கருத்துக்களைச் சுட்டிக் காட்டினார்.

இந்த நிகழ்ச்சியினைத் தொடர்ந்து நடத்தி, இளைஞர்களிடம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. எம். கிருஷ்ணன் அவர்களுக்கு சென்ற மாதம் “துறை மாண்புச் செம்மல்” விருது வழங்கப்பட்டது. அதற்கு தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தன்னம்பிக்கை வாசர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலிமூலம் தெரிவித்துக்கொண்டனர்.

திரு. இறையன்பு ஐ.ஏ.எஸ். சிறப்புரை நிகழ்த்தினார். (அவரது உரை தனியாக வெளியாகியுள்ளது).

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களின் ‘நான் கண்ட பெரியவர்கள்’ எனும் நூலை திரு. இறையன்பு ஐ.ஏ.எஸ். வெளியிட்ட முதல் பிரதியை திரு. எம் கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பேரா.அ.ச. ஞானசம்பந்தன், திரு. வெ. இறையன்பு, டாக்டர் பெரு. மதியழகன் ஆகியோர் விளக்கங்கள் தந்தனர்.

பள்ளிக்கூடம் போகாம…
பாடத்தைப் படிக்காம….

“பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு வரை நாம் வாழ்க்கையை வீண்டிக்கிறோம். அதற்குப் பதிலாக ஏதாவது தொழிற்கல்வியை கொண்டு வந்தால் அதை மட்டும் படிக்கலாமேம என்ற அதிரடிக் கேள்வியோடு ஒரு வாசகர் வினா விடை நேரத்தை தொடங்கினார்.

இதற்கு பதிலளித்த திரு. வெ. இறையன்பு “அடிப்படைக் கல்வியைப் பெறாமல் எந்தக் கல்விக்குப் போனாலும், எந்தத்தொழில் தொடங்கினாலும், அது அவ்வளவு நல்லதல்ல. இப்போதிருக்கும் அடிப்படைக் கல்வியையே இன்னும் முறைப்படுத்த வேண்டும் என்று வேண்டுமானால் சொல்லுங்கள். அத்தகைய மாற்றங்கள் அவசியம். உதாரணத்திற்கு அறிவியல்- வரலாறு – மொழி – புவியியல் என்று தனித்தனியாக படிக்கிறோம். அதற்குப் பதில் காற்று என்பதை எடுதுக்கொண்டால் அது குறித்த அறிவியல் தகவல்கள் – வரலாற்றுச் செய்திக் – காற்று பற்றிய இலக்கியப் பதிவுகள் என்று ஒன்றாகத் திரட்டி மாணவர்களுக்குத் தர வேண்டும். இது இன்னும் முழுமையான கல்வியாக இருக்கும். ஆனால் அடிப்படைக் கல்வி இல்லாமல் நேரத்தொழிற் கல்விக்குப் போவது ஆபத்தானது” என்றார்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2001

நிறுவனர் பக்கம்
பெற்றோர் பக்கம்
தப்பித்தலா? விடுதலையா?
உள்ளத்தோடு உள்ளம்…
முழுமையாய் வாழ்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள்
வாசகர் கடிதம்
நம்பிக்கையும் நானும்
உற்சாக உற்சவம்
மனசுவிட்டுப் பேசுங்க….
வணக்கம் தலைவரே
சத்குரு பதில்கள்
உணவகம்
மனித சக்தி மகத்தான சக்தி
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
சிரிப்போம் சிறப்போம்
நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்
வெற்றியின் மனமே
பொதுவாச் சொல்றேன்