Home » Articles » சத்குரு பதில்கள்

 
சத்குரு பதில்கள்


ஜக்கி வாசுதேவ்
Author:

என் குடும்பத்தில் நெருங்கிய உறவினர்கள், எனக்கும் என் செயல்களுக்கும் எதிர்மறையாக உள்ளனர். அதற்குக் காரணம் என்ன? அதலிருந்து எப்படி விடுபடுவது?

வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் ஏன் உங்களுக்கு எதிராக ஆனாகள் என்பதை முதலில் பார்க்க வேண்டும். இதற்கு நீங்களே கூட முக்கியமான காரணமாக இருக்கலாம். இலை, தானாகவே அப்படித்தான் இருக்கிறார்கள் என்றால் உங்களுக்கும், அவருக்கும் ஒத்து வருகிதா என்று பார்க்க வேண்டும். ஒருவருக்கொருவர் எதிர்மறை ஆகிவிட்டால் விட்டுவிட்டுப் போய் விடுங்கள் என்று நான் சொல்லவில்லை. உங்கள் தன்மையை விட்டு விடக் கூடாது. உங்கள் தன்மையை உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் தன்மை எப்படி இருக்கிறது என்றால், நான்குபேர் எது சொன்னாலும் அப்படி ஆகி விடுகிறீர்கள். ஒரு கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அங்கு ஒருவர் சொன்னார் ‘ஒருவர் என்னை ‘முட்டாள்’ எனச்சொல்லி விட்டார். அதனால் எனக்கு இந்த ஒரு வாரம் மனம் நிம்மதியில்லாமல் போய்விட்டது. அவர் மீது வழக்கு போடலாம் என இருக்கிறேன்’ என்று சொன்னார். யாரோ ஒருவர் முட்டாள் என்று ஒரு வார்த்தை சொன்னார் அதற்குப்போய் ஒரு வாரமாய் உங்கள் மன அமைதி உடைந்து போய்விட்டது என்றால் அவர் சொன்னது உண்மை என்றுதானே ஆகிவிடும்.

அவருக்கு வாழ்க்கை எந்த மாதிரி புரிந்திருக்கிறதோ அந்த மாதிரி எடுத்துக் கொள்கிறார். நீங்கள் புத்திசாலியாக இருந்தால் இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும். ‘நான்’ என்கிற தன்மையில் உறுதியில்லாமல் இருக்கிறதனால் எப்படி காற்று போகிறதோ அப்படி நீங்கள் போகிறீர்கள். அதுதான் பிரச்சினை.

இப்பொழுது வீட்டை விட்டு போகிறீர்கள் அங்கே இன்னொருவர் இன்னொன்று பேசுவார்கள். எங்கே போனாலும் பேசுவார்கள். அவர் வாழ்க்கையை எப்படிப் புரிந்திருக்கிறாரோ அதைத்தான் பேசுவார். மற்றவர்களுக்காக நம் பார்வை, எண்ணம், தன்மை குறையக் கூடாது. நம் தன்மையை உறுதியாகவும், புத்திசாலித்தனமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது யார் நமக்கு எதிராக இருக்க முடியும்?


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2001

நிறுவனர் பக்கம்
பெற்றோர் பக்கம்
தப்பித்தலா? விடுதலையா?
உள்ளத்தோடு உள்ளம்…
முழுமையாய் வாழ்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள்
வாசகர் கடிதம்
நம்பிக்கையும் நானும்
உற்சாக உற்சவம்
மனசுவிட்டுப் பேசுங்க….
வணக்கம் தலைவரே
சத்குரு பதில்கள்
உணவகம்
மனித சக்தி மகத்தான சக்தி
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
சிரிப்போம் சிறப்போம்
நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்
வெற்றியின் மனமே
பொதுவாச் சொல்றேன்