Home » Articles » நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்

 
நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்


மகேஸ் சிங்கராஜா
Author:

மனிதன் தன்னை முழுமையாக நம்பினால் தன்னம்பிக்கை தானாக வந்து விடும். நம்பிக்கையில்தான் நாம் உயிர் வாழ்கிறோம். குடும்பத்திடம், சமுதாயத்திடம், நண்பனிடம், நாட்டிடம், தெய்வத்திடம் உள்ள நம்பிக்கையே நமது வாழ்வுக்கு அடிப்படை.

தனக்கு தெய்வ நம்பிக்கை இல்லை என சொல்பவன் கூட ஒரு தலைவர் படத்தை வழிபடுகிறான். அவனுக்கு விழா எடுக்கிறான். கிரீடம் சூட்டுகிறான்.

ஓர் விருந்தினர் அழைக்க பல விதமான உணவு வகைகளை சாப்பிடுகிறோம். சாப்பிடும் போதெல்லாம் விஷம் கலந்திருக்குமா? என்று சாப்பிடுவதில்லை. அதிலும் ஓர் நம்பிக்கை. தினமும் பல இடங்களுக்கு பிரயாணம் செய்கிறோம் எதிரில் வரும் வாகனங்களால் நாம் இறந்து விடுவோமா என்று நடுங்குவதில்லை. “சந்தேகப்பட்டுக் கொண்டே இருக்கிறவன் அழிந்து போவான்” என்கிறார் கீதையில் கிருஷ்ணர். அப்படியானால் கண்மூடித்தனமாக அனைவரையும் நம்பிவிட முடியாது. நன்கு ஆராய்ந்து பார்த்து பழகின பின்பு நம்ப வேண்டும். நூற்றில் சிலர் நம்பிக்கை துரோகிகள்தான். நம்பினோர் கெடுதில்லை. நான்கு மறை தீர்ப்பு என பாரதி பாடினான்.

நாம் பழகுகின்ற அனைவரிடமும் நம்மைப்பற்றி நம்பிக்கை ஏற்படும்படி நடக்க வேண்டும். நம்மை நம்பி ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை முழுமையாக உண்மையோடு, அக்கறையோடு, நேர்மையோடு நாணயத்தோடு மேலும் தன்னம்பிக்கையுடன் செய்து முடிக்க வேண்டும்.

படிப்பு இல்லாமல், பணம் இல்லாமல், ஏன் கை, கால் இல்லாமல் கூட வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் தன்னம்பிக்கை இல்லாமல் வெற்றிபெற்றவர்கள், என எவருமே கிடையாது. உதாரணமாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் சந்திக்காத தோல்விகள் கிடையாது.

சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு தனது இருபத்தி ஏழு வயதில் நரம்பு மண்டலமே செயல் இழந்தது. 46 வது வயதில் செனட்டர் தேர்தலில் படு தோல்வி. இதனை தோல்வியும், பேரிழப்பும் லிங்கனின் தன்னம்பிக்கையை ஒன்றும் செய்துவிடவில்லை. விடாமுயற்சியுடன் தனது 52 வது வயதில் அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியானார்.

கடந்த காலத்தை விடுத்து எதிர்வரும் பாதையில் முன்னேறுங்கள். மறந்தும் குறைகளைச் சொல்லி புலம்பிக்கொண்டு இருக்காதீர்கள்.சமாளித்து விடுவேன். எல்லாம் சரியாகநடக்கும் என்ற நம்பிக்கை உங்கள் ஆழ்மனதில் அடி நீரோட்டமாக இருக்க வேண்டும்.

நம்மிடம் உலக ஞானம் இருக்கிறது. எதையும் சரிகட்டி சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை வைத்து துணிந்து நின்று திறமையுடன் செய்தோமானால் பல நட்சத்திரங்களிடையே நீங்கள் ஓர் சூரியனாக திகழ்வீர்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2001

நிறுவனர் பக்கம்
பெற்றோர் பக்கம்
தப்பித்தலா? விடுதலையா?
உள்ளத்தோடு உள்ளம்…
முழுமையாய் வாழ்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள்
வாசகர் கடிதம்
நம்பிக்கையும் நானும்
உற்சாக உற்சவம்
மனசுவிட்டுப் பேசுங்க….
வணக்கம் தலைவரே
சத்குரு பதில்கள்
உணவகம்
மனித சக்தி மகத்தான சக்தி
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
சிரிப்போம் சிறப்போம்
நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்
வெற்றியின் மனமே
பொதுவாச் சொல்றேன்