Home » Articles » காக்கை குருவி எங்கள் ஜாதி

 
காக்கை குருவி எங்கள் ஜாதி


admin
Author:

மார்ச் 20 மதியம். பரீட்சை எழுதிவிட்டு வெளியே வந்த குழைந்தயின் காதில் கேட்டது. ஒரு தீனக்குரல், அண்ணாந்து பார்த்தபோது, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வேப்ப மரத்தின் உச்சிக் கிளையிலிருந்து தலைகீழாகத் தொங்கியபடி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது ஒரு கொக்கு.

இது நடந்தது கோவை திருச்சி எல்லையிலுள்ள “விவேகாலயா” மெட்ரிக்குலேஷன் பள்ளியில்! அவ்வளவுதான்! கூடிவிட்டன குழந்தைகள். அந்ப் பறவையை எப்படியாவது காப்பாறி விட வேண்டுமென்ற தவிப்பு அந்தச்சின்னக் கண்களில்! வேப்பமரமோ நாற்பதடி உயரம். பதறிக் கொண்டு வந்தது பள்ளி நிர்வாகம். தீயணைப்புத்துறைக்குத் தொலைபேசி அழைப்பு பறந்தது.

வேப்பமரத்தின் கீழ் திரண்ட குந்தைகள் பள்ளி நேரம் முடிந்ததும் வீட்டுக்கு போக மறுத்தனர். கொக்கு பிழைக்க வேண்டும் என்று “த்ரயம்பகம் யாம ஹேம் புஷ்டி வர்த்தனம்” என்று தொடங்கும் பள்ளி பிரார்த்தனை கீதம் பாடத் தொடங்கினர். விரைந்து வந்த தீயணப்பு வீரர்கள் பிரதாப் ராஜேந்திரகுமார் கோவிந்தசாமி ஆகியோர், கோட்ட அதிகாரி விஜயசேகர் மேற்பார்வையில், மீட்புப் பணியில் இறங்கினர்.

மீட்கப்பட்டதும் கொக்குக்குத் தண்ணீர் தரவேண்டும் என்று பிஞ்சுக் கைகளில் வாட்டர் பாட்டில்கள், கொக்கைத் தூக்கிக்கொண்டு தீயணைப்பு வீரர்கள் கீழே இறங்கியதும் குழந்தைகள் எழுப்பிய கரவொலி, ஆயிரம் விருதுகளுக்கும் ஈடாகாது என்று நெரிந்த்து சொல்கின்றர். “தீயணைப்புப் துறையினர்.

“விவாகாலயா பள்ளயின் பாடத்திட்டம், குழ்தைகளைக்குள் மனித நேயத்தை விதைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பாடத்தில் கூட, புத்தர் காலத்தில் இருந்துதான் கற்றுத் தருகிறோம். அதற்கு முன் கற்காலத்தில் வேட்டையாடி வாழ்ந்த முறை ஒன்று இருந்ததே குழந்தைகளுக்கு தெரிய வேண்டியதில்லை என்பது எங்கள் எண்ணம்” என்றார் பள்ளயின் செயலாளர் நளினி ஷண்முகம். – பள்ளி நிர்வாகம் – குழந்தைகள் – தீயணைப்புத் துறையினர் அனைவருமே நம் பாராட்டுக்குரியவர்கள்.

“காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற பாரதியின் வரிகளை, இவர்கள் தங்கள் வாழ்கைக்கு வார்த்துக் கொண்டுள்ளனர்.

இந்தச்செய்தி கேள்விப்பட்டு விவேகாலயா நிர்வாகத்தை நாம் அணுகியபோது குழந்தைகள் பள்ளிக்கு வரும் போதே கையில் பச்சை மீன் கொண்டு வந்திருந்தார்கள்… அந்த கொக்குக்காக!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2001

சிந்தனைத்துளி
கேள்வி பதில்
வல்லமை ஏந்து
எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும்
நிறுவனர் பக்கம்
(நி)தானம்
சிந்தனைத்துளி
சிரிப்போம் சிறப்போம்
தேவை
மனித சக்தி மகத்தான சக்தி
வாசகர் பகுதி
வணக்கம் தலைவரே…
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
வாசகர் கடிதம்
புரிந்துகொண்டு பின்பற்றுவதா? பின்பற்றிப் புரிந்து கொள்வதா?
வெற்றியின் மனமே…
கைத்தொழில் களஞ்சியம்
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கையும் நானும்
காக்கை குருவி எங்கள் ஜாதி
உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?