Home » Articles » வருமுன் காப்பது

 
வருமுன் காப்பது


பாலசுப்பிரமணியன் பி
Author:

ரீகி, Dr. Mikao usui என்பவரால் 18 ம் நூற்றாண்டின் கடைசியில் கண்டுப்பிடிக்கப்பட்டது. ரீகி என்றால் “பிரபஞ்ச உயிர்சக்தி” என்று பொருள். ரீகி சக்தி மிகுவும் சக்தி வாய்ந்தது.சக்தி வாய்ந்த ஒரு சுய சிகிச்சை முறை. இதை பண்ணணினால் உடனே முழு மன அமதி, உடல் தளர்வு, எல்லாம் கிடைக்கும்.

“ரீ” “கி” என்ற இரண்டு வார்த்தைகளின் கூட்டுதான் ரீகி. “ரீ என்றால் பிரபஞ்சம் “கி” என்றால் உயிர் சக்தி. உயர்ந்த நிலையில் உள்ள சக்தியின் மறு டிவம்தான் ரீகி.

ரீகி என்பது Rei-Ki (ரீ-கி), (Rei) ரீ என்பது Universe, (Ki) கி என்பது மின் காந்த சக்தி, ரீகியை Universal Life Force என்று சொல்கிறோம். அண்ட சராசரத்தில் நிரம்பி இருக்கின்ற மின்காந்த சக்தியை (universal Life Force) “தலை” வழியாக எடுத்து “கை” வழியாக பாய்ச்சும் முறையைத்தான் ரீகி என்கிறோம்.

நம் வாழ்க்கை முறை

நம்முடைய சக்தியின் இருப்புக் குறைய குறையத்தான் நாம் ஆரோக்கியம் இழக்கின்றோம். ரீகி என்னும் இந்த கலையில் கை மூலம் அண்ட சராசரத்திலுள்ள சக்தியை கிரகித்து, உடம்பில் அனுப்பி தீய சக்திளை விரட்டி நல்ல சக்திகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஹீலிங், கையை வைத்து குணப்படுத்தும் சிகிச்சை, காஸ்மிக் சக்தியை உபயோகப்படுத்தும் சிகிச்சை சிறிது காலமாக மக்கள் மத்தியில் பிரபலம் ஆகிக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் ஏழையோ, பணக்காரனோ, தெருவில்போகும் பிச்சைக்காரனோ அவர்களுக்குள்ளே ஒரு உலகமே அடங்கியுள்ளது. அவர்கள் உடம்பில் காஸ்மிக் சக்திதான் உள்ளது. நாம் எப்பொழுதும் நமக்குள் இருக்கும் இந்த சக்தியை வெளி உலகத்திற்கு பரப்பிக் கொண்டு இருக்கின்றோம்.

பூமியில் உள்ள அண்ட சராசரத்தில் உள்ள சக்தியை கிரகித்து நம்மையும் குணப்படுத்தி, மற்றவர்களையும் குணப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் இந்த மாபெரும் சக்தியை கொடுத்திருக்கிறார். ஆனால் நாம் இதையெல்லாம் விட்டு விட்டு எல்லா நேரமும் நம்முடைய பேராசையை பூர்த்தி செய்தவற்காக நம்மை பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கின்றோம்.

அதனால் நம்முடைய, எண்ணம், சொல், செயல் எல்லாம் சுயநலமாக உள்ளது. இதனால் உலகில் தோல்வி மனப்பான்மையும், அராஜகமும், கோபமும், பெருகி விடுகின்றது.

இந்த கலியுகத்தில் இந்த மாதிரி சக்தி இருப்பது இறைவன் நமக்கு கொடுத்து இருப்பது இந்த உலகைக் காப்பதற்காகத்தான்.

ரீகியை எப்படி கற்றுக்கொள்வது ?

ரீகியைக் கற்றுக்கொள்ள பள்ளியிலோ, கல்லூரியிலோ படித்த பொது அறிவு மட்டும் போதும். ஒரு மாஸ்டரின் முறையாக கற்றுக்கொள்ள வேண்டும்.

ரீகி தீட்சை பெற்றவுடன் அண்ட சராசரங்களில் உள்ள சக்தி தலைவழியாக கைகளுக்கு வந்தடைகிறது. கைகளில் குறுகுறு என்று போவது தெரியும். கைகளில் இதமான சூடு இருக்கும். பிறகு போகப் போக மற்றவர்களுடைய சக்தியின் ஓட்டத்தை அறிய முடியும். ஒரு மின்காந்தம் உடலில் பாய்வது போல் ஒரு ஆனந்தமான ஒரு உணர்வு ஏற்படும்.

அன்புள்ளம் வேண்டும்

ரீகிக்கு அன்பு பொங்கும் உள்ளம் வேண்டும். “கருணை பொங்கும் உள்ளம் கடவுள் வாழும் இல்லம்” என்று சொல்கிறார் கவிஞர் கண்ணதாசன். நாமும் நல்லா இருக்கணும் மற்றவரும் நல்லா இருக்கணும் என்ற நல்ல எண்ணம் வேண்டும்.

ரீகி மாஸ்டர் என்கிற முறையில் உங்களிடம் ஒரு உண்மையைச் சொல்லுகிறேன். அன்புடன் கையை வையுங்கள் வியாதி சரியாகிவிடும். அழும் குழந்தைக்கு அம்மா தட்டிக்கொடுப்பதும், கோயிலுக்கு சென்று இரு கைகளால் கடவுளை வணங்குவதும் ரீகிதான். நமக்கு வயிற்று வலி என்றவுடன் தானாக கைகள் சென்று அந்த இடத்தில் வைக்கிறோம். வலி போய்விடுகிறது.

“அன்பே சிவம்” என்றார் தாயுமானார். அன்பு தான் இன்ப ஊற்று. அன்பு உள்ளம் வேண்டும். கலியுகத்திற்கு மனித சமுதாயத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட பெரிய பொக்கிஷம் இந்த ரீகி. ஆனால் இது மிகவும் சுலபமாக இருப்பதால் மக்கள் அதை நம்ப மறுக்கிறார்கள். இந்து மத தத்துவங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்தால் அதில் சொல்லப்பட்டது எல்லாம் ரீகி தான்.

நம் மக்களுக்கு நம்முடைய முறை என்றாலே ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. அது இன்னும் போகவில்லை. டாக்டர். மிக்கா உஷி இ ரீகியை எளியமுறையில் பரப்பி விட்டார்.

நம்மிடமே எல்லா சக்தியும் உள்ளது. இதைத்தான் “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் எல்லாம் தேடி அலைகின்றார் ஞான தங்கமே” என்கிறார் கவிஞர் கண்ணதாசன். “வருமுன் காப்போம்” தான் ரீகி.

ரீகியின் பயன்கள்

மனத்தளர்ச்சி நீங்கி நிம்மதி தோன்றும். மனத்தளர்ச்சி, மனச்சோர்வு, பயம், எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிடும். வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தோடு, புதிய நம்பிக்கையோடு பார்க்கக்கூடிய அளவிற்கு மன மாற்றம் உண்டாகும்.

சுயசிகிச்சை மூலம் நம்மை நாமே நேசிக்கும் குணமும், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளும் எண்ணமும் உண்டாகிறது. ரீகி மூலம் மனத்தெளிவு உண்டாகிறது. ஆக்கப்பூர்வத் திறன் இறைவனுக்கும் நமக்கும் உள்ள ஒரு இணைப்பைப் புதுபித்துக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு ரீகி பண்ணும் போது அவர்களும் இதையே உணர்வார்கள்.

நாம் அன்றாடம் கடைபிடிக்கும் முறைதான் இந்த ரீகி ஏதோ தேவையில்லாத முறை என்று நினைத்து விடாதீர்கள். வாழ்க்கையில் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய கலை இது. இது ஒரு வாழ்க்கை கலை, வாழும் கலை, வாழ்க்கை விஞ்ஞானம்.

இதைக்கற்றுக்கொண்டால் வாழ்க்கையில் எல்லா விதமான துன்பங்களும் நீங்கிவிடும். இது ஒரு ஆன்மீக ரீதியான மனதையும், உள்ளத்தையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும் கலை. இந்த கலியுகத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட மாபெரும் பரிசு. இதை நீங்கள் கற்றுக்கொண்டால் வாழ்க்கை, வளமாகவும்,இன்பமாகவும் இருக்கும்.

மக்கள் வெள்ளத்தில் ஒரு மகத்துவத்திருவிழா

தன்னம்பிக்கை மாத இதழும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் “விட்டு விடுதலையாவோம்” தொடர் பயிலரங்கின் 6வது நிகழ்ச்சி கோவை மணி மேல் நிலைப்பள்ளி நானி கலையரங்கில் நடைபெற்றது.

கூட்டம் 6 மணிக்கு என்று அறிவிக்கப்படிருந்தாலும் 4-30 மணியிலிருந்தே வரத்தொடங்கிவிட்டனர் வாசகர்கள். அரங்கம் முழுவதும் ஆங்காங்கே அமைதி மண்டலம் (Silence Zone) என்கிற அறிவிப்புப்பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.

5-30 மணிக்கு நிரம்பி வழிந்தது அரங்கம். அரங்கினுள் இருக்கைகளில் மட்டுமன்றி நடைபாதை உட்பட தரை முழுவதும் தலைகள்தான். மிகச் சரியாய் 5-59க்கு ஸ்கிரீன் மேலே போக சத்குருவின் வருகைக்காக வெள்ளை ரோஜாக்களின் வாசம் கமழக் கமழ மேடை அலங்கரிக்கப் பட்டிருந்தது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2001

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெரியுங்கள்
நேதாஜியின் மகள் அனிதா போஸ் – உடன் ஒரு அபூர்வ சந்திப்பு
வாசகர் கடிதம்
டாக்டர் கு. ஞானசம்பந்தம்
சிரிப்போம் சிறப்போம்
கேள்வி – பதில்
இளைஞனுக்கு..
மனித சக்தி மகத்தான சக்தி
வெற்றியின் மனமே
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வருமுன் காப்பது
நிறுவனர் பக்கம்
தன்னம்பிக்கை தந்த வெற்றி
வணக்கம் தலைவரே
பொதுவாச் சொல்றேன்
மளிகையிலிருந்து மாளிகை வரை
இராவண இரத்தம்