Home » Articles » மளிகையிலிருந்து மாளிகை வரை

 
மளிகையிலிருந்து மாளிகை வரை


கௌசல்யா பொன்
Author:

பாபு ! “நம்ம அண்ணாச்சி கடைல ரெண்டு கிலோ துவரம் பருப்பு வாங்கிட்டு வா” நல்ல மனுஷன் எந்தப் பொருள் வாங்கினாலும் கறிவேப்பிலையும், கொத்து மல்லியும் கேட்காமலேயே பைல வெச்சிடுவாரு (இது வியாபார ரகசியம்). அது பலபேர் வீட்டில் அன்றாடம் கேட்பது. தினசரி வாழ்வில் நம் உதடுகள் உச்சிக்கும் வார்த்தை “மளிகை”. நாள் முழுவதும் விறுவிறுப்பாக விற்பனை நடக்கும் இடங்களில் முக்கியமானது மளிகைக் கடை.

ஒரு காலத்தில் “ஒரு மளிகைக்கடை வைத்தாவது பிழைப்பேன்” என்ற காலம் மலையேறிவிட்டது. உழைப்பும், சுறுசுறுப்பும், பொறுமயாகப் பேசும் பக்குவமும் இருந்தால் மளகைக் கடை பல மாளிகை வாசிகளை உருவாக்கும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் நிஜம்.

“25,000 முதல் போட்டேன், 25,000 கடன் வாங்கினேன். நாளொன்றுக்கு ரூ. 500-1000 வரை வியாபாரம் நடக்கிறது” என்கிறார் மளிகைக்கடை உரிமையாளர் திரு. தனசிங்.

நகரின் மையப்பகுதியில் இருக்கும் கடைகள்தான் வெற்றி பெறுமா என்ன?

“அப்படி இல்லை!” என்கிறார் சக்தி ஸ்டோர்ஸின் உரிமையாளர் திரு. செல்வகுமார். “மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாக இருந்தால் போதும்” அதுவும் குடியிருப்பு பகுதிகளுக்கு பக்கமாக மளிகைகடை இருந்தால் நல்லது.

ஆபீஸ் போகும் அவஞரத்தல் குளித்துவிட்டு தலை துவட்டிக் கொண்டே லுங்கி, பனியனுடன் வந்து “கால் கிலோ ரவை கொடுங்க” என்று கேட்கும் அதிரடி ஷாப்பிங் ஆண்களுக்கு கூப்பிடு தூரத்தில் இருக்கும் மளிகைக்கடைகள் மீது தனி காதலே உண்டு என்றார் இவர்.

இன்றைக்கு வங்கிகள் கூட கடன் கொடுக்க ஆயிரம் கேள்விகள் கேட்கம்போது அடையாளத்தை மட்டும் வைத்து அட்டைகளில் கணக்கெழுதி அனாயசமாகக் கடன் கொடுக்கிறார்கள் மளிகைக் கடைக்காரர்கள் (ஏழைகளின் கிரெடிட் கார்டு).

இந்த “கிரெட்டிட்” வசதி, பன்னாட்டு நிறுவனங்களை விட அண்ணாச்சி கடைகளில்தான் அதிக பிரபலம்.

மாதம் ஒரு முறை கடன் தீர்க்கும் மாத சம்பளக்காரர்களும் உண்டு. இரண்டு, மூன்று மாதங்கள் இழுத்தடிக்கும் இல்லத்தரசிகளும் உண்டு. கெஞ்சியும், மிஞ்சியும் வசூல் செய்து விடுகிற வாய் சாமர்த்தியம் மளிகைக் கடைக்காரர்களின் கூடப் பிறந்த குணம்.

அதுசரி, கடை முழுக்க நிறைந்து கிடக்கும்பொருட்களின் நதி மூலம்தான் என்ன?

மொத்த விற்பனையாளர்களிடம் வாங்கி வந்து விடுகிறோம் என்கிறார்கள் மளிகைக்கடைக்காரர்கள். மொத்த விற்பனையாளர்களிடம் நூறு ரூபாய் வாங்கி வரும் பொருள் 5-10 வரை லாபம் வைத்து விற்கப்படுகிறது. (கடன் சொல்பவர்களுக்கு தனி ரேட் உண்டோ?)

“பத்தோடு பதினொன்றாக மளிகையை நடத்த முடியுமா?” “முடியும் என்கிறார் ஆனந்தம் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸின் உரிமையாளர் கோவை இரமேஷ். மற்ற தொழில்களைவிட அதிக கவனமும், உழைப்பும் தேவை. மேலும் இரண்டு, மூன்று தொழில் செய்யும் அதிபர்களுக்கு இது பொருந்தாது என்கிறார் இவர்.

மளிகைக் கடையில் இன்று பணிபுரியும் எல்லோருமே “வருங்கால முதலாளிகள்” என்ற எண்ணத்தில் உள்ளார்கள். இது நியாமும் கூட. ஒரு கடையில் தொழில்பழகிக் கொண்டு எதிரிலேயே போட்டிக் கடை போடுகிற பலே கில்லாடிகளும் உண்டு. இவர்கள் “குருவையே மிஞ்சிய சிஷ்யர்கள்”.

இளைஞர்கள் சுய தொழில் செய்ய வங்கிக்கடன் வாங்கலாம். ஆனால் அதை வாங்க முடிகிறதா? என்பதே பெரிய மலைப்பு. வங்கிகளில் செக்யூரிட்டி கேட்கிறார்கள். இடம், நிலம் இவற்றின் பத்திரம் இருந்தால்தான் கடன் கொடுப்பார்கள். வீடு, நிலம் சொந்தமாக இருந்தால் கடன் கேட்க நாங்க எதற்கு இவர்களிடம் போகிறோம் என்கிறார் ஒரு மளிகைக் கடைக்காரர்.

இளைஞர்கள் தன் முயற்சியையே மூலதனமாகவும், கடின உழைப்பும், மன உறுதியும் இருந்தால் எந்த தொழிலிலும் ஈடுபடலாம்.

என்னதான் கம்ப்யூட்டர் பில்லிங், டோர் டெலிவரி என பெரிய கடைகளின் எண்ணிக்கை பெருகினாலும், சாதாரண தரப்பு மக்கள் எவ்வித தடையுமின்றி 100 கிராம், 50 கிராம் பொருட்கள் எங்களிடம் மட்டுமே வாங்க முடியும் என்பது சிறிய மளிகைக் கடைக்காரர்களின் “சவால்”.

“அப்படி 50 கிராம் வாங்கினாலும் சுத்தமாக சுகாதாரமாக பைகளில் அடைக்கப்பட்ட நியாயமான விலை, சரியான எடையுள்ள பொருள்களைத் தேடி எல்லாத்தரப்பு மக்களும் எங்களிடம் வருகிறார்கள்” என்கிறார் நீல்கிரீஸின் இயக்குனர் திரு செல்லையன் (ராஜா).

கோவை, ஈரோடு, சென்னை, பெங்களூர் என கிளைகள் பரப்பிய நீல்கிரீஸின் “குளு குளு” ஏசி அறையில் டென்சன் இல்லாமல் ரிலாக்ஸா நமக்கு வேண்டிய பொருள்களை நாமே எடுத்துக் கொள்ளலாம்.

பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸில் ஒரு வண்டியைத் தள்ளியபடியே உலா வரும்போது லிஸ்டில் உள்ள பொருட்கள் மட்டுமின்றி விட்டுப் போனவையும் “என்னை எடுத்துக்கலையா?” என கண் சிமிட்டும், சாம்பாரை மணக்க வைக்கும் மல்லிகைத்தூள் முதல், மனைவிக்கு பிடிக்கும் மணக்கும் மல்லிகை வரை வாங்கிக்கொண்டு ஹாயாக வீடு வந்து சேரலாம்.

“வீட்டைக் கட்டிப்பார்” “திருமணம் செய்து பார்” இது பழமொழி. “போன் செய்தால் போதும், மளிகைப் பொருட்களும் உங்களது வீட்டில்” இது புது மொழி என்கிறது “சுபிக்ஷா”.

தமிழ் நாட்டில் 88 கிளைகளுடன் இயங்குகிறது. “சுபிக்ஷா” டிபார்ட்மெண்டல் & பார்மஸி, “தரம், சுகாதாரம், டோர் டெலிவரி ஆகியவையே எங்களது பலம்” என்கிறார் சென்னை வேளச்சேரியில் உள்ள சுபிக்ஷாவின் தலைமை மேனேஜர் திரு. ரத்தின்குமார்.

கம்ப்யூட்டரில் லிஸ்ட் வாங்கி டோர் டெலிவரி எனும் வசதி தரும் மாளிகை நிலையிலுள்ள கடைகளும் உண்டு.

நல்ல விற்பனை, நல்ல லாபம் மட்டுமே ஒரு மளிகையின் வெற்றியைத் தராது. “சமூக உணர்வும்” வேண்டும். நூற்றுக் கணக்கான இளைஞர்களின் வேலை வாய்ப்பிலும் நமக்குப் பொறுப்பு உள்ளது என்கிறார் கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸின் தலைவர் திரு. தனுஷ்கரன்.

இது முழுக்க முழுக்க முயற்சியும் வியாபாரத் திறனையும் பொறுத்தது. ஆகும் என்கிறார் இவர்.

தரம் என்பது நன்றாக இருந்தால் எல்லா மக்களும் தேடி வருவார்கள் என்பது நிச்சயம்.

மாறிவரும் சமூக அமைப்பில் மக்களின் ரசனைகளும், அன்றாட தேவைகளும் மாறி வருகின்றன. இதற்கேற்ப அதனை பூர்த்தி செய்வதுதான் இவர்களின் நோக்கமாகவும், குறிக்கோளாகவும் உள்ளது.

ஒரு மளிகையை வைத்து மாளிகையாக்குவது மட்டும் வெற்றி அல்ல. அந்த மாளிகையை கண்ணாடி மாளிகையாக உடையாமல் கவனத்துடன் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.

 

3 Comments

  1. E.Thiyagu says:

    Nan department store vaikka aalosanai theavai. Won land and building available. so please conduct my no. 9788173661. please give me your cell no.

  2. kanmani.p says:

    ஒரு மளிகையை வைத்து மாளிகையாக்குவது மட்டும் வெற்றி அல்ல. அந்த மாளிகையை கண்ணாடி மாளிகையாக உடையாமல் கவனத்துடன் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.

  3. Kumaran says:

    நான் புதிதாக மளிகை கடை வைக்க உள்ளேன் மொத்த விலையில் மளிகை சாமான்கள் எங்கே கிடைக்கும்

Post a Comment


 

 


March 2001

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெரியுங்கள்
நேதாஜியின் மகள் அனிதா போஸ் – உடன் ஒரு அபூர்வ சந்திப்பு
வாசகர் கடிதம்
டாக்டர் கு. ஞானசம்பந்தம்
சிரிப்போம் சிறப்போம்
கேள்வி – பதில்
இளைஞனுக்கு..
மனித சக்தி மகத்தான சக்தி
வெற்றியின் மனமே
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வருமுன் காப்பது
நிறுவனர் பக்கம்
தன்னம்பிக்கை தந்த வெற்றி
வணக்கம் தலைவரே
பொதுவாச் சொல்றேன்
மளிகையிலிருந்து மாளிகை வரை
இராவண இரத்தம்