Home » Articles » சிரிப்போம் சிறப்போம்

 
சிரிப்போம் சிறப்போம்


ஞனசம்பந்தம் கு
Author:

“தம்பி நீ காலை எத்தனை மணிக்கு எழப்போகிறாய்” அவனுடைய சகோதரி ஒரு நாள் இரவு கேட்டாள்.

“எப்போதும் போல ஆறு மணிக்கு… ஏன்?” என்றான். – தம்பி

“எழுந்து..?” – சகோதரி.

“இதென்ன கேள்வி நிலக்கடலை விவசாயம் இருக்கிறது… வியாபாரம் இருக்கிறது. இரண்டையும் கவனிப்பேன்” – தம்பி.

“சரி நீ தினமும் காலையில் ஆறுமணிக்கு எழுந்தால் கடலை வியாபாரி, 4 மணிக்கு அதவாது இரண்டுமணி நேரம் முன்னதாக எழுந்தா ஜனாதிபதியாகக் கூட ஆகலாம்… முயற்சிசெய்” என்றாள் சகோதரி.

தன் மனதில் எப்போதும் இருக்கும் ஜனாதிபதி எண்ணத்திற்கு வண்ணம் பூசியது அந்த வார்த்தைகளே! பிறகு அந்தச் சிறுவன் ஒருபோதும் ஆறுமணி வரை தூங்கியது இல்லை. ஆம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏன்ன பிறகு கூட வெள்ளை மாளிகையிலிருந்து ஓய்வு பெறும்வரை ஒரு நாள் கூட அப்படித் தூங்கவில்லை. இதுதான் கடலை விவசாயியாக, வியாபாரியாக இருந்த ஜிம்மிகார்டர் அமெரிக்க ஜனாதிபதியாக மாறியதற்கான மந்திரக் காரணம்.

“காதற்ற ஊசிதான்” ஞானம் தரும் என்பதில்லை. காதில் கேட்கும் வார்த்தைகளும் மனதுக்குள் மின்சாரம் பாய்ச்சும் வல்லமை உள்ளவைதான்.

“எல்லாத் திறமைகளும் எனக்கு உண்டு, ஆனால் இந்தக் கேடு கெட்ட உலகம் என்னைப் புரிந்து கொள்வதில்லை, வாய்ப்புத் தருவதில்லை” – இப்படிச் சிலபேர், இல்லை பலபேர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.

எல்லாத் திறமைகளும் உண்டு. உண்மைதான். எந்தத்திறமையாவது சிறப்பாக உண்டா?

ஒரு முறை ஒரு நண்பர் என்னிடத்தில் சொன்னார். “இந்த நாடு ஒரு அருமையான கிரிக்கெட் வீர்ரை இழந்திருச்சுங்க”

“அப்படியா? யாரது? என்று நான் கேட்டேன்.

“நான்தான்… நான் மட்டும் கிரிக்கெட் ஆடியிருந்தா அப்படி வந்திருப்பேன்” – இப்படிச் சிலபேர்.

இன்னொருவர் சொன்னார். “எனக்கும் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கும் என்ன வித்யாசம்னு நினைக்கறீங்க. நானும் 5 1/2 அடி . அவரும் அதுதான். மாநிறம், சுருட்டை முடி… என்னா.. அவருக்குக் கொஞ்சம் நடிக்கத் தெரியும்…. நமக்கு சுட்டுப் போட்டாலும் நடிப்பு வராது.

எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு மெதுவாகச் சொல்கிறார் பாருங்கள்.

சில நேரங்களில் கேள்வி கேட்பவர் முட்டாளா? பதில் சொல்பவர் மடையனா? என்று குழப்பம் ஏற்படும்.

கிராமத்து வீதியில் ஒருவன் போய்க்கொண்டிருந்தான். எதிரில் வந்த ஒருவன் இவனைப் பார்த்து “போன வாரம் செத்துப்போனது நீயா? உங்க அண்ணனா?” என்று சந்தேகத்தோடு கேட்டான்.

அதற்கு இவன், “எங்க வீட்லபோய்க் கேட்டுட்டு வர்றேன் இரு” என்றான்.

இன்றைய காலத்தில் எல்லாமே அவசரமாகத் தான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. 30 நாட்களுள் மொழி கற்கலாம், 3 மணிநேரத்தில் கார் ஓட்டலாம், 3 நிமிடத்தில் சாப்பாடு தயார். ஆற அமர யோசிச்சு, ரசிக்க நேரமில்லை.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2001

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெரியுங்கள்
நேதாஜியின் மகள் அனிதா போஸ் – உடன் ஒரு அபூர்வ சந்திப்பு
வாசகர் கடிதம்
டாக்டர் கு. ஞானசம்பந்தம்
சிரிப்போம் சிறப்போம்
கேள்வி – பதில்
இளைஞனுக்கு..
மனித சக்தி மகத்தான சக்தி
வெற்றியின் மனமே
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வருமுன் காப்பது
நிறுவனர் பக்கம்
தன்னம்பிக்கை தந்த வெற்றி
வணக்கம் தலைவரே
பொதுவாச் சொல்றேன்
மளிகையிலிருந்து மாளிகை வரை
இராவண இரத்தம்