Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

குடும்பத்திற்காக கடைகளுக்குப் போவது, சம்பளத்திற்காக வேலைக்குப் போவது, நண்பர்களுக்காக வெளியே போவது என்று நமது இருபத்து நான்கு மணி நேரத்தை எப்படியெல்லாம் பாகப்பிரிவினை செய்கிறோம்?

நாள் ஒவ்வொன்றிலும், நமக்காக என்று எத்தனை நேரம் செலவிட முடிகிறது என்பதை எண்ணிப் பார்ப்போம். “நமக்காக” என்றால், உணவுக்கும் ஓய்வுக்கும் செலவிடும் நேரமல்ல. படிப்பது, தியானம் செய்வது, நம்மை நாமே சுயபரிசோதனை செய்வது, புதிய துறைகள் பற்றித் தெரிந்து கொள்வது என்று, நம்மை பலப்படுத்திக் கொள்வதற்கான பணிகளைச் செய்கிறோமா?

இதுதான் நமது நிகழ்காலத்தின் போக்கினைப் படம்பிடித்து எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிற விஷயம். நேற்றைவிட இன்று, இன்றைவிட நாளை, என்று ஒவ்வொரு நாளும் நமது தனிமனித ஆற்றலைப் பெருக்கிக் கொண்டே போவதன் மூலம் வெற்றி பெற முடியும்.

ஆனால், இன்று நமக்காக என்று செலவிடுகிற நேரங்கள், பல பேருக்கு அவர்களின் ஆற்றலை சிதறுண்டு போகச் செய்வதாகவே இருகிறது. “உல்லாசம்” என்கிற பெயரில் வேண்டாதபழக்கங்கள், “பொழுது போக்கும் என்கிற பெயரில், சின்னத்திரை… இவற்றிலிருந்து விடுபட்டு வாழ்க்கையை நோக்கி நம் உணர்வுகளை ஒருமுக்படுத்துவோம்.

இன்றைய வாழ்க்கை ஒரு விதத்தில் போர்க்களம்தான். விழிப்புடன் இருக்கும் போதுதான் வெற்றிகள் சாத்தியம். நம் வங்கிக் கணக்குப் போலவே, நமது திறமைகளின் கணக்கிலும் ஒவ்வொரு நாளும் வரவுகள் கூட வேண்டும். புதிய புதிய சிந்தனைகள் – தகவல்கள் – நுணுக்கங்கள் என்று வாழ்வின் ஒவ்வொரு நாளும் வரவு வைப்போம். வளம் பெறுவோம்.

வாழ்த்துக்களுடன்,
ஆசிரிர் குழு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2001

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெரியுங்கள்
நேதாஜியின் மகள் அனிதா போஸ் – உடன் ஒரு அபூர்வ சந்திப்பு
வாசகர் கடிதம்
டாக்டர் கு. ஞானசம்பந்தம்
சிரிப்போம் சிறப்போம்
கேள்வி – பதில்
இளைஞனுக்கு..
மனித சக்தி மகத்தான சக்தி
வெற்றியின் மனமே
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வருமுன் காப்பது
நிறுவனர் பக்கம்
தன்னம்பிக்கை தந்த வெற்றி
வணக்கம் தலைவரே
பொதுவாச் சொல்றேன்
மளிகையிலிருந்து மாளிகை வரை
இராவண இரத்தம்