Home » Articles » வாசகர் கடிதம்

 
வாசகர் கடிதம்


admin
Author:

“சேவைக்கு அவசியமில்லாத சூழ்நிலைதான் சரியான சமூகச் சூழ்நிலையாக இருக்க முடியும். அவரவர் குடும்பத்தைச் சரியாகப் பார்த்துக் கொள்வதே சமூகத்திற்குச் செய்கிற பெரிய சேவை” என்ற உதவும் கரங்கள் வித்யாகரின் கருத்துக்கள் சிந்திக்கத் தூண்டுபவை. சாதனை நிகழ்த்தத் தேவையான ஐந்து பண்புகளை விளக்கிய தன்னம்பிக்கைக்கு நன்றி. செல்வம் சேர்ந்திட சிந்தனையைச் சீரமைப்பீர். வெற்றி என்பது தொடர் பயணம்… ஆகியன அற்புதம்.
D. சகதிவேல், குள்ளம்பாளையம்

“தியானம் என்பது மனிதனை இயக்கம் கடந்த ஒரு சமுத்திர நிலைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி என்பதனைத் தெள்ளத் தெளிவாக விளக்கிய ஜக்கி அவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒரு பொன் மொழிகள்.
கு.பாபு, S.K. பாளையம்

புதிய நூற்றாண்டில் புதுப்பொலிவுடன் வந்த தன்னம்பிக்கை பயனுள்ள அகராதி. உடல் சோர்வைப்போக்க காரணங்களை தெளிவாகத் தெரிவித்தமைக்கு நன்றி.
உஷா முத்துராமன், திருச்சி.

சத்குரு ஜக்கி சொல்லும் தியானம் செயலைத் துறப்பதல்ல, செயலைக் கடந்த நிலை என்ற கருத்து அற்புதமானது. இதற்கு உதாரணமாக விளங்கும் வித்யாகர் பணி பாராட்டுக்குரியது.
ந. செந்தில் குமார், திருப்பூர்.

தன்னம்பிக்கைக்கு “தாஸ்னாம விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. புத்தாண்டில் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. வாழ்த்துக்கள்.
R. ஆறுச்சாமி, கோவை

வித்யாகர் சொன்னது போல் அவரவர் குடும்பத்தை அவரவர் சரியாகப் பார்த்துக் கொண்டாலே வருங்காலத்தில் 1551 பேர் போல் ஆதரவற்றள் இல்லாத சூழல் ஏற்படும். இவரது பேட்டியினை வெளியிட்டமைக்கு நன்றி.
S. கொங்குவேல், நாமக்கல்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2001

வாசகர் கடிதம்
இந்தியா 2020
பெற்றோர் பக்கம்
நிறுவனர் பக்கம்
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவது எப்படி?
பொதுவாச் சொல்றேன்
ஆயிரம் நூல்களில் எழுதிவை!
சிரிப்போம்! சிறப்போம்!
நம்பிக்கையும் நானும்
முயற்சி கொள் நண்பனே!
வெற்றியின் மனமே
வணக்கம் தலைவரே!
மனித சக்தி மகத்தான சக்தி
மனசுவிட்டுப் பேசுங்க
உள்ளத்தோடு உள்ளம்