Home » Articles » முயற்சி கொள் நண்பனே!

 
முயற்சி கொள் நண்பனே!


புதியவன்
Author:

உளியிடம் அடிபெறும் கல்லும்
உன்னத சிலை வடிவம் பெற்று
உயிர்கள் தொழும் தெய்வ மாகிறதே…

நீ மட்டும் ஏன்
தோல்வியின் அடி கண்டால்
வேள்வித் தீயில் வீழ்ந்ததுபோல்
வேதனைப் படுகிறாய்?

ஆழ்கடலில் முத்தெடுப்பது
அனைவருக்கும்
எளிதல்ல!
முத்தினை எடுக்கின்ற அனைவருக்கும்
ஆழ்கடல் நிச்சயம் அற்பமே!

பயிற்சி கொள்ள முனைந்து விட்டால்
பலன்கள் உனது காலடியில்
மனதிற்கும் ஒரு கை உண்டு
மார்க்கம் தருகின்ற தன்னம்பிக்கை
விரைந்து அதனோடு தோள் சேர்ந்தால்
கரைந்து பொசுங்கி விடும் கவலை
காணமுடியும் விடியலை!

– புதியவன்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2001

வாசகர் கடிதம்
இந்தியா 2020
பெற்றோர் பக்கம்
நிறுவனர் பக்கம்
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவது எப்படி?
பொதுவாச் சொல்றேன்
ஆயிரம் நூல்களில் எழுதிவை!
சிரிப்போம்! சிறப்போம்!
நம்பிக்கையும் நானும்
முயற்சி கொள் நண்பனே!
வெற்றியின் மனமே
வணக்கம் தலைவரே!
மனித சக்தி மகத்தான சக்தி
மனசுவிட்டுப் பேசுங்க
உள்ளத்தோடு உள்ளம்