Home » Articles » திறமைசாலியான பிள்ளைகளை உருவாக்கும் வழிகள்

 
திறமைசாலியான பிள்ளைகளை உருவாக்கும் வழிகள்


admin
Author:

பெற்றோர் பக்கம்

அந்தப் பெற்றோர் தங்கள் இரட்டைக் குழந்தைகளுடன் பொருட்காட்சிக்கு சென்றார்கள். மியூசிக் கேஸியோவைப் பார்த்ததும் வாங்கித் தருமாறு குழந்தைகள் கேட்டார்கள்.

உடனே, தந்தை சொன்னார் “நான் ஆளுக்கொரு கேஸியோ வாங்கித் தருவேன். ஆனால், யாருக்குமே தொல்லை தராம நீங்க வாசிக்கணும் அது முடியுமா?”

“ஓ… அப்படியே செய்வோம்”

என்றார்கள் குழந்தைகள்.

“அதெப்படி?” … தந்தை.

முதல் பிள்ளை சொன்னான். “நீங்க ஆபிசுக்கு போன பின்னாடி நான் வாசிப்பேன்.”

இரண்டாவது பிள்ளை, “நீங்க தூங்கின பிறகு நான் வாசிப்பேன்.” என்றான்.

இதைக்கேட்டவுடன் முதல் பிள்ளையை வாரியணைத்து முத்தமிட்டாள் தாய்.

தந்தையோ, இரண்டாவது பிள்ளையைப் பார்த்து, “உனக்கும் அவன் மாதிரி புத்தி வேணும். பேசக்கூடாது. அவன் படிப்பில எப்பவுமே முதல்ல வருவான். நீயோ எப்பவு கடைசியிலதான் வர்ரே” என்றார்.

இப்படிப் பல பெற்றோர்கள், தன் குழந்தைகளில் ஒன்றை உயர்த்தி ஒன்றைத் தாழ்த்தி தவறாக்க் கையாளுவதால், இளம் உள்ளங்களில் மன உளைச்சல் ஏற்பட்டு தலைவலி, வயிற்றுவலி, தூக்கமின்மை, மனச்சோர்வு போன்றவை உண்டாகின்றன.

பெற்றோர்கள், திறமை குறைவாக இருக்கும் குழந்தைகளைச் சரியான முறையில் கையாள வேண்டும். மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பேசுவது தவறான அணுகுமுறை. குழந்தைகளை வளர்ப்பது ஒரு நீண்டகால முதலீடு. அதில் பெற்றோர்களின் விருப்பு, வெறுப்புகளை குறுக்கே வரக்கூடாது.

முதலாவது, குழந்தகளுக்கு சின்னச் சின்ன சாதனைகளைப் படைக்கும் மனநிலையை உண்டாக்க வேண்டும். உதாரணத்திற்கு அன்றைய பாடங்களை வீட்டிற்கு வந்தவுடனே எழுதல், குறித்த நேரத்தில் பள்ளிக்குச் செல்லுதல், டி.வி பார்ப்பதைத் தவிர்த்தல் போன்றவைகளை ஊக்குவிக்க வேண்டும். அதைச் சரியாக செய்யும்போதெல்லாம் பாராட்டலாம்.

இரண்டாவது, சிறுவர்களின் பள்ளியில் நடப்பது பற்றியும், வீட்டில் படிப்பது பற்றியும் அவ்வப்போது பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.

மூன்றாவது சிறுவர்கள் படிப்பிலும் திறமையாக வர வேண்டும். அதற்கு விளையாட்டு, நாடகம், நாட்டியம், ஓவியம் வரைதல், மேடைப்பேச்சு, தலைமைப்பண்புகள், சமூக சேவை போன்றவற்றில் எந்தத்துறையில் ஈடுபாடு உள்ளதோ, அதில் சேர்த்து ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் சிறுவர்களுக்கு தங்களுடைய பலத்தை அறியும் வாய்ப்பு கிட்டும். அதன் மூலம் தன்னம்பிக்கை வளரும்.

நான்காவது குழந்தைகளுக்கு படிப்பு மிக முக்கியம். அதை விடவும் அவர்கள் படிப்பின் சுமையால் மன உளைச்சல் ஆகிவிடாமலிருப்பது மிக மிக முக்கியம். அதற்கு விளையாட்டு, மற்றும் உடற்பயிற்சிகளையும் தினமும் செய்யப் பழக வேண்டும்.

ஐந்தாவது, ஆக்கப்பபூர்வமான சிந்தனை செய்யக் கற்றுத்தர வேண்டும்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு மாணவன் பரீட்சைக்கு படிக்கும்போது கஷ்டமான கேள்வி வந்துவிடக்கூடாது என்று வேண்டிக்கொண்டே தினமும் படித்தான். முழு ஆண்டுத் தேர்வும் வந்தது. கேள்வித்தாளை வாங்கி பார்த்ததும் எல்லாக் கேள்விகளும் கஷ்டமானதாகவே இருந்தது. அதைப் பார்த்த அதிர்ச்சியில் நன்கு படித்திருந்தாலும் பரீட்சையை எழுதாமலேயே வெளியேறிவிட்டான்.

ஆழ் மனத் தத்துவத்தின் அடிப்படையில் “இப்படி வரக்கூடாது, அது நடக்கக்கூடாது” என்று எண்ணுதல் எதிர்மறை சிந்தனையாகும். இது போன்று சிந்தித்தால் எதை கூடாது என நினைக்கிறோமோ அதுதான் மனதில் உருவகமாகி அப்படியே நடந்துவிடும்.

 

1 Comment

  1. M. J. SYED ABDULRAHMAN says:

    நன்றி
    எனக்கு தே வை இல்லா தா தை என் நு வதே இல்லை நல்லது
    மீண்டும் நன்றி – சிறப்பு
    மனோசக்தி

Post a Comment


 

 


January 2001

செல்வம் சேர்த்திட… சிந்தனையைச் சீரமைப்பீர்
(ச)மையல்
உடல் சோர்வடைகிறீர்களா?
வாழ்க்கைக்குள் வா
பொதுவாச்சொல்றேன்
நிறுவனர் பக்கம்
கேள்வி பதில்
வெற்றியின் மனமே
நம் கையில் நம்பிக்கை
மனித சக்தி மனித சக்தி
விமர்சனங்களை விமரிசியுங்கள்
பொதுவாச்சொல்றேன்
உதவும் கரங்கள் வித்யாசாகர் பேசுகிறார்
திறமைசாலியான பிள்ளைகளை உருவாக்கும் வழிகள்
உள்ளத்தோடு உள்ளம்
“யோக துரோனாச்சார்யா” கோபாலனந்தா
"யோக துரோனாச்சார்யா" கோபாலனந்தா
மாபெரும் மன ஆற்றல் பயிற்சிகள்(Tecniques)
விட்டு விடுதலையாவோம்!