Home » Articles » ஆழ்மனச் சக்தியைப் பெருக்கி அற்புதச் சாதனைகள் படைப்பது எப்படி?

 
ஆழ்மனச் சக்தியைப் பெருக்கி அற்புதச் சாதனைகள் படைப்பது எப்படி?


ஜெயச்சந்திரன்
Author:

– சக்ஸஸ் ஜெயச்சந்திரன்

உலகில் பிறந்த எவரும் வாழ்க்கையில் வெற்றிபெறவே விரும்புவர்.

ஆனால், அனைவருமே வெற்றி அடைகிறார்களா? சிலர் வெற்றிபெற்று மகிழ்கின்றனர். பலர் தோல்வி அடைந்து வருந்துகின்றனர்.

ஏன் இந்த நிலை?

விலையுயர்ந்த வைரத்தை விற்பனை செய்தாலும் நட்டம் அடைபவர்களும் உண்டு. அற்பமான பொருளை விற்று லாபம் அடைபவரும் உண்டு.

ஏன் இப்படி?

நீங்கள் செய்யும் தொழிலில், வணிகத்தில் வெற்றி அடைகறீர்களா? இல்லையா என்பது நீங்கள் என்ன பொருளை உற்பத்தி செய்கிறீர்கள் அல்லது விற்பனை செய்கிறீர்கள் என்பதில் இல்லை. அத்தொழிலில், வணிகத்தில் என்ன மனப்பான்மையுடன் ஈடுபட்டு இருக்கிறீர்கள் என்பதில் உள்ளது.

வெற்றி, மனோபாவத்துடன் ஈடுபடும்போது நீங்கள் வெற்றியை ஈர்த்துக் கொள்கிறீர்கள். தோல்வி மனோபாவத்துடன் உழைக்கும்போது தோல்வி உங்களிடம் வந்து ஒட்டிக் கொள்கிறது.

நீங்கள் விரும்பினால் வெற்றி மனப்பான்மையை உருவாக்கிக்கொள்ள முடியும். தோல்வி மனப்பான்மையை உருவாக்கிக் கொள்வதும் உங்கள் கையில்தான் இருக்கிறது.

ஆகவே, வெற்றியும் தோல்வியும் உங்கள் மனப்பான்மையிலிருந்துதன் உருவெடுக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மனப்பான்மை என்பது என்ன? அது எப்படி அமைகிறது? விரும்பியபடி உங்கள் மனப்பான்மையை மாற்றிக்கொள்ள முடியுமா? எப்படி மாற்றுவது?

உள்ளத்தில் தொடர்ந்து நிலை பெறும் சிந்தனைதான் மனப்பான்மையாக மாறுகிறது. செய்யும் தொழில் சிறப்பாக நடைபெறும் என்றும், வருமானம் பெருகுவதாகவும், வெற்றி அடையப் போகிறோம் என்றும் எண்ணுகிற நம்பிக்கை அடிப்படையிலான மனச்சித்திரங்களே வெற்றிச் சிந்தனை மீண்டும் மீண்டும் பதிவாகும்போது வெற்றி மனப்பான்மையாக மாறிவிடுகிறது.

தொழிலில் நட்டம் வந்து விடுமோ? முதலை இழந்து விடுவோமோ? வருமானம் வட்டிக்கே சரியாகிவிடுமோ? கடையை மூட வேண்டி வந்துவிடுமோ? என்று அவநம்பிக்கை. அச்சம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட மனச்சித்தரங்கள் தொடர்ந்து பதிவாகும்போது தோல்வி மனப்பான்மை உங்கள் தோழனாகிவிடுகிறது.

நீங்கள் விரும்பினால் மனச்சித்திரங்களை மாற்றியமைத்து விரும்பும் மனப்பான்மையைப் பெற்றுவிட முடியும். அதற்கு ஆழ்மனக் கட்டளை உங்களுக்கு கை கொடுக்கும்.

ஆக, ஆழ்மனக்கட்டளை மூலமும் மனச்சித்திரத்தின் மூலமும் வெற்றி மனோபாவத்தை உருவாக்கிக்கொண்டு உங்களால் வெற்றிமேல் வெற்றி பெற முடியும். தோல்வியை நிரந்தரமாகத் துரத்தி அடித்துவிட முடியும்.

ஆகவே, கடும் உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்னும் மொழியை மாற்றி ஆழ்மனச் சக்திக்கு ஈடு இணையில்லை என்னும் புது மொழியைப் புரிந்துகொள்வீர்கள்.

நீங்கள் நான்கைந்து பெட்டிகளுடன் பேருந்து நிலையம் செல்கிறீர்கள். போர்டர் பற்றி நினைவே இன்றி, ஒவ்வொரு பெட்டியாகத் தூக்கி கொண்டு பேருந்தின் பின்புற ஏணியில் ஏறி பெட்டிகளை மேலே ஏற்றுகிறீர்கள். ஒவ்வொரு முறை ஏறி இறங்கும்போதும் உங்கள் உடைகள் கிழிந்து விடுகின்றன. கறைபடிந்து விடுகின்ற. கழுத்திலும், இடுப்பிலும் வலிக்க ஆரம்பிக்கின்றது.

பேருந்து இருக்கையில் அமரும் போது இனி இதுபோன்ற பயணத்தையே தவிர்க்க வேடும் என்று கவலையுடன் எண்ணுகிறீர்கள்.

கொஞ்சம் அக்கறையோடு தேடியிருந்தால் போர்டரின் சேவையைப் பயன்படுத்தி, அதற்கான சிறு கூலியைக் கொடுத்துவிட்டு வசதியாக மகிழ்ச்சியோடு பயணம் செய்து இருக்கலாம்.

உங்கள் துணைவியார் பல ஆண்டுகளாக விறகு அடுப்பில் சமையல் செய்து வருகிறார்.முகத்திலும் கரி பூசிக்கொண்ட, புகையில் கண்களைக் கசக்கிக் கொண்டு, உடைகளில் புகைக் கறைகளை ஆக்கிக்கொண்டு சமையல் செய்யும் நிலை கண்டு இரங்கி நீங்கள் ஒரு கேஸ் அடுப்பும், சிலிண்டரும் வாங்கி வருகிறீர்கள்.

அவற்றைத்த தங்கள் துணைவி உங்கள் துணைவியார் பயன்படுத்திக்கொள்வார் என்னும் நம்பிக்கையுடன் அவசரமாக வெளியூர் சென்று விடுகிறீர்கள். மூன்று மாதங்களுக்குப் பின்னர் திரும்பி வந்து பார்த்தால் அதே பரிதாபநிலையில் அவர் சமையல் செய்து கொண்டுள்ளார்.

கேஸ் அடுப்பும், நிரப்பிய சிலிண்டரும் நீங்கள் வைத்த இடத்தில், வைத்தவாறே இருக்கின்றன.

நீங்கள் அதிர்ச்சியுடன் கேட்கிறீர்கள். ஏன் விறகு அடுப்பில் சமைக்கிறாய்?

ஸ்டவ் வாங்கி வந்தீர்கள். சிலிண்டர் கொண்டு வந்தீர்கள். எப்படி பொருத்துவது? எப்படி இயக்குவது என்று சொல்லி தந்தீர்களா? அதனால் விறகு அடுப்பிலேயே சமைத்துக் கொண்டுள்ளேன்.

போர்டர் இருந்தும் பயன்படுத்தாமல் பயணத்தைத் துன்பமாக்கிக் கொள்வது போன்று, கேஸ் அடுப்பு இருந்தும் சமையல் செய்வதை எளிதாக்கிக் கொள்ளாமல் வதைபடுவது போன்று நமக்குள் ஆழ்மனம் என்னும் விசுவாசமான போர்டர் இருப்பதை அறியாமல், ஆழ்மனம் என்னும் சக்திமிக்க கேஸ் சிலிண்டரை பயன்படுத்தும் முறையை அறியாமல், தோல்வியையும், ஏமாற்றத்தையும், இழப்பையுமே சந்தித்து வருகிறோம்.

ஆழ்மனம் என்பது என்ன? அதன் இயல்பு என்ன? அதை எப்படி இயக்குவது? சக்தியைப்பெருக்குவது எப்படி? என்று அறிந்து கொண்டால் உங்கள் தொழிலும் வாழ்க்கையிலும் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றிதான்.

உங்களுக்குள் இருக்கும் ஆழ்மனத்தை ஒரு தேவதை என்று கூறலாம். அது ஆற்றல் மிக்க தேவதை. உங்களுக்கு விசுவாசமான தேவதை.

நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அதைப் பெற்றுத்தரும் ஆற்றல் அதனிடம் உண்டு.

உங்கள் ஆழ்மனத்திடம் தவறான முறையில் தீயதைக் கேட்டாலம் அது அப்படியே தருகிற அளவுக்கு விசுவாசமானது. அப்போது அது அரக்கனாகச் செயல்பட்டு நீங்கள் கேட்டவாறே செய்து முடித்து விடுகிறது.

ஆக, அது தேவதையா, அரக்கனா என்பது நீங்கள் கொடுக்கும் கட்டளையைப் பொருத்தது.

ஆழ்மனத்தின் இயல்பை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதனை இயக்கிச் செயல்படுத்துவது எப்படி என்று கற்றுக்கொள்ள வேண்டும். செயல்பட வேண்டும்.

அதன்பின்னர் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றிதான்.

உங்களிடம் ஆழ்மனச்சக்தி பெருகி விட்டால் நீங்கள் நினைத்ததை, விரும்பியவாறே அடைய முடியும். பெரும் சாதனைகளை உங்களால் செய்ய முடியும்.

அத்தகைய மனோ சக்தியைப் பெறுவதற்கு நீங்கள் ஆழ்மனக்கட்டளை அல்லது சுயகருத்தேற்றம் அல்லது ஆட்டோ சஜசன் முறையைப் பின்பற்ற வேண்டும்.

ஆட்டோ சஜசன் என்றால் என்ன?

தொடரும்….


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 1999

சிந்தனைத்துளி
நீங்கள் சிறந்த பெற்றோரா?
ஆழ்மனச் சக்தியைப் பெருக்கி அற்புதச் சாதனைகள் படைப்பது எப்படி?
மெடிக்கல், என்ஜினியரிங் சீட் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்?
உயர்வுக்கு உரிய வழி
எங்கிருந்து துவங்கலாம் தோழரே…
இளைஞனே…
துணிச்சலைத் துணை கொள்ளுங்கள்
கவலையை விடுங்கள்
பார்வையை மாற்றுங்கள்; பாதை தெளிவாகும்"
மனசு விட்டுப் பேசுங்க..
நம்பிக்கையும் நானும்..
உள்ளத்தோடு உள்ளம்