Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

ஒவ்வொரு நாளும் உதயம் புதியது. ஒவ்வொரு நாளும் உலகம் புதியது. பூத்துச் சிரிக்கிற பூக்கள் புதியவை. காற்றின் சுந்தம் நாளும் புதியது. வானம் அளக்கிற பறவையின் பாடல்கள் கரைவரை சிரிக்கிற அலைகளின் கீதம் எல்லாம் புதியது. ஒவ்வொரு நாளும் புதிது. புதிதாய் அனுபவங்கள் புதிய பாடங்களைப் போற்றுகின்றன. புதுமைக்கேற்ப தன்னை மாற்றும் உள்ளங்கள்தான் சாதிக்கின்றன.

நேற்றைய தோல்வியென்பது விழுந்துவிட்ட கிளை. அல்லது உதிர்ந்துவிட்ட சருகு. அதனைப் பார்த்துப் பார்த்து அழுகிற மனிதனின் கண்களுக்கு புதிதாகத் துளிர்விடும் வெற்றியின் வாய்ப்புகள் தென்படுவதேயிலை.

முன்னேற்றம் நோக்கிய மாற்றங்களுக்கு இழப்புகளிலிருந்து ஆக்கங்களுக்கு மெல்ல மெல்லத் தயாராவோம். இந்த பூமி, புதிய பரிசுகளை எதிர்பார்க்கிறது..
நம்மிடமிருந்தும்கூட!

வாழ்த்துக்களுடன் ஆசிரியர் குழு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 1999

சிந்தனைத்துளி
நீங்கள் சிறந்த பெற்றோரா?
ஆழ்மனச் சக்தியைப் பெருக்கி அற்புதச் சாதனைகள் படைப்பது எப்படி?
மெடிக்கல், என்ஜினியரிங் சீட் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்?
உயர்வுக்கு உரிய வழி
எங்கிருந்து துவங்கலாம் தோழரே…
இளைஞனே…
துணிச்சலைத் துணை கொள்ளுங்கள்
கவலையை விடுங்கள்
பார்வையை மாற்றுங்கள்; பாதை தெளிவாகும்"
மனசு விட்டுப் பேசுங்க..
நம்பிக்கையும் நானும்..
உள்ளத்தோடு உள்ளம்