Home » Articles » உயர்வுக்கு வழி

 
உயர்வுக்கு வழி


admin
Author:

தன்மதிப்பு

– டாக்டர் பெரு.மதியழகன்

நம்மை மற்றவர்கள் மதிப்பதும், நாம் பிறரை மதிப்பதும் ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் நம்மை நாம் மதிக்க வேண்டாமா?  நாமே நம்மை மதிக்கவில்லை என்றால் நம்மைப் பற்றிய மதிப்பை மற்றவர்கள் எப்படி உயர்த்திக்கொள்ள முடியும்?  நம்மை நாம் மதித்தால்தான்,பிறர் நம்மை மதிப்பார்கள்.  நம்மீது நமக்கு ஏன் மரியாதை இல்லை? இதற்குக் காரணம் ஒப்பீடுதான்.  அவர் மாதிரி நான் இல்லை என்றுதான் எப்போதும் எண்ணுகிறோமே தவிர, என்னைப் போல அவர் இல்லை என்று எப்போதாவது எண்ணுகிறோமா?

மற்றவர்களுக்கு நாம் முக்கியமில்லாமல் இருக்கலாம்.  நமக்கு நாம் முக்கியம். நாமே நம்மை ஒரு படி தாழ்த்தினால் ஊரும் உலகும் ஒருநூறு படிகள் கீழே இறக்கிவிடும்.  நம்மை நாமே ஒரு படி உயர்த்தினால் ஊரும் உலகும் பல படிகள் உயர்த்தி வைக்கும் என்பது தான் உண்மை.

நம்மை நாம் மதிப்போடு நடத்த வேண்டும். நம்மை பொலிவாக வைத்துக்கொள்ள வேண்டும். என்பதற்காகச் செய்கிற முயற்சிகள் அத்தனையும், நம்மை நாம் மதிக்கிறோம் என்பதற்கான வெளி அடையாளங்கள்.

நம்மைப் பற்றி நாம் எப்படி நினைக்கிறோமோ, அப்படியே ஆகிவிடுகிறோம்.  காஃப்கா என்கிற ஜெர்மானிய எழுத்தாளனின் சிறுகதை ஒன்றில் தன்னைக் கரப்பான் பூச்சி என்று கருதி சுருண்டு படுத்துக்கொண்ட ஒருவனைப்பற்றிய சுவையான கதை வருகிறது.  காலையில் சுருண்டு கிடக்கிற அவனைப்பார்த்த தங்களை, அவனது மீசை கரப்பான் பூச்சியின் மென்கம்பி மீசைபல் நீண்டிருக்கிறது என்றும், உடலெங்கும் இறக்கைகள் முளைத்து நீண்டு கொண்டே வருகிறதென்றும் தெரிவிக்கிறாள்.

தன்னைக் கரப்பான் பூச்சி என்று கருதுகிறவனை, அடுத்தவர்கள் ஒருபோதும் கானகத்துச் சிங்கம் என்று கருதமாட்டார்கள். எனவே வாழ்க்கையில் உயர்வடைய நம்மைப்பற்றிய நம் மதிப்பீடு மிக முக்கியம்.

ஜெர்மானிய நாட்டில் அக்னான் என்கிற ஓர் எழுத்தாளன் இருந்தான்.  அவன் தனது வீட்டிற்குபக்கத்தில், ஓர் அறிவிப்பு பலகையை வைத்து தயவு செய்து இங்கு வாகன ஒலிப்பானை அடிக்காதீர்கள் (No Horn Please) என்கிற அறிவிப்பை அதில் எழுதிவைத்தான்.  பள்ளிகளுக்கு அருகிலும், கோவில்களுகு பக்கத்திலும், மருத்துவமனை இருக்கும் இடங்களிலும் இருக்க வேண்டிய இந்த அறிவிப்புப்பலகை அந்த இடத்தில் ஏன் இருக்கிறது என்று அந்த நாட்டின் நாடாளுமன்றதில் கேள்வி எழுந்தது. அதற்கு அமைச்சர், அக்னான் எழுத்தாளர் என்று பதிலளித்தார்.  மற்றொருவர் எழுந்து, அவர் தூங்குகிற போது இந்த அறிவுப்பு எதற்காக என்றார்.அக்னான் எழுதுவதற்காக தூங்குகிறார் என்றார் அமைச்சர். இப்படியே குளிக்கிறபோது, சாப்பிடும்போது எதற்காக இந்த அறிவிப்புபலகை என்று கேட்டார் இறுதியாக அமைச்சர் அக்னான் எழுதுவதற்காக்க் குளிக்கிறார். எழுதுவதற்காகக் குளிக்கிறார். எழுதுவதற்காகவே சாப்பிடுகிறார் என்றார்.  விளைவு அரசாங்கமே No Horn Please என்கிற அறிவிப்புடன் Agnon is writing என்று எழுதிச் சேர்த்து விட்டது.

அக்னான் தன்னை ஒரு உயர்த்தியதால், அரசு அவரை பல படிகள் உயர்த்திட முன்வந்தது. உயர்வுக்கு உரிய வழிகளில் ஒன்று முதலில் நம்மை நாமே மதிப்பதுதான்.

தொடரும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1999

ஆசிரியர் தந்த அதிசய விளக்கு
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
உயிரோட்ட மனநிலை
உள்ளத்தோடு உள்ளம்
தன்னம்பிக்கையின் சிந்தனைத்துளிகள்
தன்னம்பிக்கை இதழின் நிறுவனர் டாக்டர். இல.செ. கந்தசாமி
கேள்வி – பதில்
உயர்வுக்கு வழி
சிந்தனைத்துளி
குறிக்கோளைப் பாகுபடுத்திக்கொள்வோம்
தொழில் தரும் தன்னம்பிக்கை
மனிதன் மனிதனாக இருக்க!
தள்ளிப்போடும் மனப்பான்மையைக் கிள்ளிப்போடுவோம்!
முயன்றுதான் பாருங்களே!
வாசகர் கடிதம்