Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

முன்னேறத் துடிப்பவன் தன்னை நேசிப்பது போலவே தன்னைச் சார்ந்தவர்களையும் நேசிக்க வேண்டும்.  எப்போதும் தன்னை மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தால் அதுத் தன்னலம். மற்றவர்களையும் நினைத்து அவர்களது உணர்வுகளையும் மதித்துச் செயல்பட்டால் அது முன்னேற்றம்.  அதேபோல் ஒருவன் தன்னுடைய கருத்துக்களை எவ்விதம் போற்றுகிறானோ அதே அளவு மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.

வீண் விவாதங்களில் கலந்து கொள்வதையும், வீண் செயல்களில் தலையிடுவதையும் தவிர்க்கலாம். முன்னேற்றத்திற்குச் செயல்தான் முக்கியமே தவிர பேச்சு அல்ல.  நீங்கள் முன்னேற விரும்புவர்கள்.  முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பவர்கள்.  எனவே, உங்களைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்படியே பிறரையும் நீங்கள் நடத்துங்கள்.

முன்னேற்றப் பாதையில் செல்பவர்கள் அவசரப்படாமல், பதட்டப்படாமல் சமநிலை மனத்தோடு செயல்பட வேண்டும். மேலும் முன்னேற்றம் என்பது பொருள் சேகரிப்பது மட்டுமல்ல.  அது ஒரு கூறு.  வாழ்க்கைக்கு அடித்தளமானது.  அதை வைத்துக்கொண்டு உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்வதுதான் முன்னேற்றம்.

வாழ்த்துக்களுடன்,
ஆசிரியர்குழு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1999

ஆசிரியர் தந்த அதிசய விளக்கு
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
உயிரோட்ட மனநிலை
உள்ளத்தோடு உள்ளம்
தன்னம்பிக்கையின் சிந்தனைத்துளிகள்
தன்னம்பிக்கை இதழின் நிறுவனர் டாக்டர். இல.செ. கந்தசாமி
கேள்வி – பதில்
உயர்வுக்கு வழி
சிந்தனைத்துளி
குறிக்கோளைப் பாகுபடுத்திக்கொள்வோம்
தொழில் தரும் தன்னம்பிக்கை
மனிதன் மனிதனாக இருக்க!
தள்ளிப்போடும் மனப்பான்மையைக் கிள்ளிப்போடுவோம்!
முயன்றுதான் பாருங்களே!
வாசகர் கடிதம்