Home » Articles » வாசகர் கடிதம்

 
வாசகர் கடிதம்


admin
Author:

பிப்ரவரி இதழ் படித்தேன். படிக்கும் போதே உற்சாகத்தை தந்தது. டாக்டர் ஜி. இராமநாதன் அவர்களின் மனச்சோர்வடைகிறீர்களா? மிக மிக பயனுள்ளதாக இருந்தது. சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடையவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் டானிக் “தன்னம்பிக்கை”

டாக்டர் எம்.எஸ். கோவிந்தராஜன்
விஜயபுரம் – வடக்கு

பிப்ரவரி இதழ் கிடைத்து. சந்திரா மனோகரன் அவர்களின் “விதியை விரட்டுவோம்” கட்டுரை மிக அருமை.

Prof. டாக்டர். ராமசித்துராஜூ
நாமக்கல்.

பா. செல்வராஜ் அவர்களின் “உங்களுக்கு நீங்களே வேலை தேடிக்கொள்வது எப்படி?” எனும் கட்டுரையின் வழிகள் மிகமிகச் சிறந்த வழிகள். இதழ் நல்ல முன்னேற்றம். தொடர்க உங்கள் பணி.

B.G.N ஜெனார்த்தனன்.
சேலம்.

முன்னேறத் துடிக்கும் என் போன்ற இளைஞர்களுக்குக் கிடைத்த மிப்பெரிய வரப்பிரசாதன். இந்த இதழ் விரைவில்தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு மெருகேறி வருகிறது.’விதியை விரட்டுவோம்’ விதியை மதியால் வெல்ல முடியும் என்று உணரும் வண்ணம் இருந்தது.

விஸ்வநாதன்,
மோப்பிரிபாளையம்

விரும்பும் வெற்றியை விரைந்தடையா வண்ணம் தடுக்கும். விரும்பத்தகாப் பழக்கங்களை விடுவதைப்பற்றிய விரிவான கட்டுரை. எங்கள் தன்னம்பிக்கைக்கு ஊட்டம் தரும் விதமாக அமைந்திருந்தது.
ஆ. சக்திவேலவன்.
காசிப்பாளையம்.

பிப்ரவரி இதழில் கவிஞர்களின் கவிதை கனல் தெரித்தது. க. அம்சப்பிரியாவின் கவிதை அம்சமாக இருந்தது. சக்திகணல் அவர்களின் கவிதை அழகாக இருந்தது. இரா. இரவியின் கவிதை இருட்டில் இருந்து வெளிச்சம் தெரிய உதவியது. வாழ்த்துக்கள்.

துல. சேகர்,
சோளங்காபாளையம்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment