Home » Articles » 10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?

 
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?


ஜெயச்சந்திரன்
Author:

சிறப்பறிவு

வெற்றி ஏணியின் எட்டாம் படி

– சக்சஸ் ஜெயச்சந்திரன்

பத்தே ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிக்கம் வழியாக நீங்கள் பிளாஸ்டிக் குடங்கள் உற்பத்தி செய்யும் தொழில் துவங்க முடிவு செய்து விட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியாயின் அத்தொழில் பற்றிய சிறப்பறிவு உங்களுக்குத் தேவை. அதுவே வெற்றி ஏணியின் எட்டாவது படி.

அதற்காகப் பல மாத காலப்பயிற்சிக்குச் செல்ல வேண்டுமோ என்று பயப்பட வேண்டாம். அத்தொழில் நடைபெறும் இடங்களுக்குச் சென்று தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் கேள்வி கேளுங்கள். கேளுங்கள் கொடுக்கப்படும்!

என்ன? எப்படி? எத்தனை? எவ்வளவு? ஏன்? எப்பொழுது? எங்கே? என்ற கேள்விகளை அறிந்தவர்களிடம் மேலும் மேலும் கேளுங்கள்.

பிளாஸ்டிக் கச்சாப்பொருள் எங்கு கிடைக்கும்? கிலோ என்ன விலை? இயந்திரம் எங்கு வாங்கலாம்? என்ன விலை? தேந்தெடுத்துள்ள தொழில் பற்றி என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டுமோ அத்தனை கேள்வியும் கேளுங்கள்.

அன்போடு, எதிர்பார்ப்போடு, பணிவோடு கேட்கப்படுகிற எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஒருவர் சலிப்படைந்துவிட்டால் பொருத்தமான இன்னொருவரைத் தேடிச் சென்று கேளுங்கள்.

போதுமான அளவுக்கு மனிதர்களிடம் கேட்டு அறிந்த பின்னால் புத்தகங்களைக் கேளுங்கள். சலிப்பு இல்லாமல், கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளிப்பவை புத்தகங்கள்!

தொழில் உலகம் ஏற்றுமதி உலகம். பொருளாதாரம், வளர் தொழில், பிளாஸ்டிக் தொழில் மலர் போன்ற வார, மாத இதழ்கள் உங்களுக்கு யோசனகளையும் சிறப்பறிவையும், ஊக்கத்தையும் தரவல்லவை!

மனிதர்களையும், புத்தகங்களையும் கேட்டு சிறப்பறிவை நீங்கள் பெற்றுவிட்டால் தொழிலில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடலாம். ஆனால் தெளிவான சிறப்பறிவை அனுபவத்தின் மூலம் பெற்றவர்கள் மகத்தான வெற்றி பெற்றார்கள் என்பதை வால்டர் கிறிஸ்லரின் வரலாற்றிலிருந்து அறிந்து கொள்ளுங்கள்.

அமெரிக்காவில் உப்பு ஏரி நகரம் என்று அழைக்கப்படும் “உடா” வில் கார் பழுது பார்க்கும் தொழிற்சாலையில் வால்டர் கிறிஸ்லர் ஒரு மெகானிக். அவன் தன் சேமிப்பை எல்லாம் ஒன்று திரட்டிய போது 4000 டாலர் சேர்ந்தது.

அதைக்கொண்டு ஒரு தள்ளுமாடல் டப்பாக்காரை வாங்கியபோது அவன் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உறவினர்கள் ஆச்சரியப்பட்டனர்.

அடுத்து அவன் செய்த்து அனைவரையும் திகைக வைத்தது. காரின் பாகங்கள் அனைத்தையும் “பீஸ் பீஸா”கக் கழட்டி கடை முழுவதும் பரப்பினான். பின் மீண்டும் அவற்றை ஒன்று சேர்த்துத காரை உருவாக்கி ஓட்டினான். மறுநாள் மீண்டும் பீஸ் பீஸாகக் கழட்டினான். 2 நாட்களில் மீண்டும் பூட்டினான். கழட்டும் போதும் பூட்டும்போதும் நட் போல்ட், பாகங்கள் அனைத்தையும் நன்கு ஆராய்ந்தான்.

இந்த நடைமுறையில் 10 முறைக்கு மேலாக கார் பாகங்களைக் கலைத்தபோது அவன் நண்பர்கள் அவனுக்கு நட் கழன்று விட்டது என்றே முடிவு செய்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் விமர்சனமும், எதிர்ப்பும் கிறிஸ்லரை எள்ளளவும் அசைக்கவில்லை.

பத்து முறைக்கு மேல் கார் பாகங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்தான். குறைகளை நீக்க கற்பனை செய்தான்.

காரின் பாகங்கள் குறித்த சிறப்பறிவை கற்பனையோடு கலந்தபொழுது, புதிய அற்புதமான குறையற்ற காரை அன் வடிவமைத்தான். கிறிஸ்லர் கார் விற்பனை சக்கைப்போடு போட்டது. அவன் விரைவில் கோடீஸ்வரன் ஆகிவிட்டான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

நீங்களும் மேற்கொள்ளப்போகும் தொழிலின் எல்லா விவரங்களையும், நுணுக்கமாக ஆராய்ந்து சிறப்பறிவைத் திரட்டிக் கொண்டால் அத்தொழிலில் மகத்தான வெற்றி பெறுவீர்கள்.

ஆகவே உங்கள் தொழிலுக்குத் தேவையான முதலீடு, உற்பத்தி,மார்க்கெட்டிங் பற்றிய சிறப்பறிவைத் திரட்டுங்கள்!

நீங்கள் வாணிகத்தின் மூலம் 1 கோடி ரூபாய் சம்பாதிக்க விரும்புகிறீர்களா? உங்கள் நகரத்தில் நடைபெறும் பலவகை வணிக்தையும் உற்றுநோக்குங்கள். எதில் மக்களுக்கு அதிக நாட்டம் உள்ளது? எதில் குறைந்த முதலீட்டில் ஈடுபட முடியும்? எதில் நியாயமான லாபம் கிடைக்கும்? எதில் நட்டத்திற்கு அதிக வாய்ப்பில்லை? என்று கூர்ந்து கவனித்துச் சிந்தியுங்கள். தேவைப்பட்டால் அனுபவமுள்ள மக்களிடமும், புத்தகங்களிடமும் கேளுங்கள்.

உதாரணமாக அரிசி மொத்த வணிகம் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அரிசியில் எத்தனை வகை உண்டு? அவற்றின் தற்போதைய மார்க்கெட் விலை என்ன? அரிசியை எங்கு மொத்தக் கொள்முதல் செய்யலாம்? 100 கிலோ மூட்டை ஒன்றின் அடக்க விலை என்ன? மார்க்கெட் பகுதிவரை கொண்டு செல்ல போக்குவரத்துச் செலவு என்ன? மூட்டை அரிசி விற்பனை விலை என்ன? 5% லாபம் கிடைக்க வேண்டுமென்றால் என்ன விலைக்கு விற்க வேண்டும்?

வாங்கிய அரிசி மூட்டைகளைச் சேமித்து வைக்க குடோன் வாடகை என்ன? உரிமம், வரி, பணியாளர் சம்பளம் ஆகியவற்றிற்கான செலவு எவ்வளவு? எல்லாச் செலவும் போக குறைந்தபட்ச லாபம் பெற என்ன விலைக்கு விற்க வேண்டும்?

எந்த வணிகமாயினும் இது போன்ற சிறப்பறிவைத் திரட்டுங்கள். தேவைப்படுகிற எல்லாக் கேள்விகளையும் கேளுங்கள்! அனுபவம் உள்ளவர்களை அறிவுரைக்காகவும், ஆலோசனைக்காகும் தயங்காமல் அணுகுங்கள். நீங்கள் வெற்றி பெறுவது உறுதியாகிவிடும்.

உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் இடையில் சேவை செய்வதன் மூலம் நீங்கள் ஒரு கோடி சம்பாதிப்பது என்று முடிவு செய்திருக்கிறீர்களா? நல்லது. அதற்கும் சிறப்பறிவு உங்களுக்குத் தேவை.

எந்த ஒரு பொருளாயினும் விற்பனை விலையில் ஒரு பகுதித விற்பனையாளர் கழிவு என்று ஒதுக்கப்படுகிறது. விற்பனையாளருக்கு 2% முதல் 25% வரை கழிவு தரும் உற்பத்தியாளர் உள்ளனர். இவ்வாறு ஒரு பொருளின் மாவட்ட மாநில உரிமையைப் பெற்று, நுகர்வோருக்கு ஊக்கமூட்டி, விற்பனையில் சாதனை செய்து கோடீஸ்வர்ர் ஆனவர் பலர் உள்ளனர் என்பதை அறியுங்கள். சேவையைத் தேர்ந்தெடுப்பவருக்கு முதலீடும் அதிகம் தேவையில்லை!

நீங்கள் இலக்கிய நூல்களை பதிப்பாளரிடமிருந்து பெற்று நுகர்வோராகிய வாசகர்களுக்கு விற்பனை செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். தமிழ் மாநிலத்திலுள்ள 29 மாவட்டங்களிலும் முகவர்களை நியமித்து வாசகர் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து கற்றுக் கொடுத்து நீங்கள் விற்பனையில் சாதனை படைக்க முடியும்.

அதற்கு நூல்கள், அதன் ஆசிரியர்கள், வாசகர் அதிகம் விரும்பும் நூல்கள் எந்த பதிப்பகங்க் எவ்வளவு விற்பனையாளர் கழிவு அனுமதிக்கின்றன போன்ற விவரங்களை நன்கு அறிய வேண்டுடும். இது போன்ற விவரங்களை அறிவது கடினமானதன்று. பதிப்பகத்தாரைச் சந்தித்து கேட்டால் உற்சாகமாக விவரம் தருவார்கள்.

புத்தக் கண்காட்சி, கருத்தரங்குகள், மாணவர் சந்திப்பு ஆகிய வழிகளில் விற்பனையைப் பெருக்கலாம். இதில் நீங்கள்பெறும் 5% கழிவு உங்களைப் 10 ஆண்டுகளில் கோடீஸ்வரனாக்கும்.

தொழிலுக்குப் பிளாஸ்டிக் குட உற்பத்தியும், வணிகத்திற்கு அரிசி வணிகமும், சேவைக்குப்புத்தக விற்பனையும் உதாரணமாகவே காட்டப்பட்டன. இதையொட்டி வெவ்வேறு பொருள்களை இணைத்துக் கற்பனை செய்து எந்தத் தொழி, எந்த வணிகம் எந்தச் சேவை உங்களுக்குத் தகுந்தது என்று முடிவு செய்யுங்கள்.

அதில் நீங்கள் உற்பத்தி செய்வது, அல்லது சேவை செய்வது என்ன பொருள் என்று முடிவு செய்யுங்கள். அந்தப்பொருள் பற்றிய எல்லா விவரங்களைஉம் திரட்டுங்கள். சிறப்பறிவு மிகவும் தேவையானது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

நிறைந்த பொது அறிவு உடையவனைக் காட்டிலும், குறிப்பிட்ட துறையில் சிறப்பறிஉ உடையவனே வாழ்வில் வெற்றி பெறுகிறான்.

ஒரு நாட்டின் தலைநகர் எது? அதன் தற்போதைய பிரதம மந்திரி யார்? வானொலியைக் கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்நாட்டினர்? போன்ற வினாக்களுக்கு விடை தெரிந்து வைத்திருப்பது பொது அறிவு. அதனால் அதிகப் பயன் விளையாது.

ஒரு பொருளில் அல்லது செயலில் இறப்பறிவு அல்லது அனுபவத்தைப்பெறுவதே வெற்றி நல்கக்கூடியது.

எல்லாம் கற்ற பண்டிதர் ஒருவர் ஆற்றக் கடந்து செல்ல வேண்டி வந்தது. ஒரு படகில் ஏறி அமர்ந்தார். எளியவனாகிய படகோட்டியைப் பார்த்து, ‘ஏனப்பா! நீ திருக்குறள் படித்திருக்கிறாயா? ‘ என்றார்.

‘இல்லீங்கய்யா! அப்டின்னா என்னங்க?’

இல்லையா? உன் வாழ்க்கையில் கால்பாகத்தை வீணாக்கிவிட்டாயே! ‘தொல்காப்பியமாவது படித்திருக்கிறாயா?

‘இல்லீங்க…!’

‘அட பாவி! வாழ்க்கையில் பாதிப் பங்கை வீணாக்கி விட்டாய்! போகட்டும். சிலப்பதிகாரமாவது படித்திருக்கிறாயா?’

‘இல்லீங்க…!’

‘ஐயையோ! முக்கால் பகுதி வாழ்க்கையை வீணாக்கி விட்டாயே!

படகோட்டி அமைதியாகத் தலைகுனிந்தான்.

பண்டிதர் பெருமிதமாகத் தலை நிமிர்ந்தார்.

திடீரென்று வானம் இருண்டது. மழைபெய்த்து. ஆற்றில் பெருவெள்ளம் வந்தது. படகு தத்தளித்தது. மூழ்கும் போலிருந்தது. இப்போது படகோட்டி கேட்டான். ‘பண்டிதரே நீச்சல் படிச்சிருக்கீங்களா?’

‘இல்லையேப்பா…’

‘அடேடே! முழு வாழ்க்கையையும் வீணாக்கிட்டீங்களே!’

படகோட்டி ஆற்றில் குதித்து நீந்தினான். பண்டிதர் ஆற்றோடு போனார்.

ஆகவே, சிறப்பறிவும், அனுபவமுமே உங்களை வெற்றி என்னும் கரை சேர்க்கும். சிறப்பறிவைத் திரட்டுங்கள். பத்தே ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதித்து வெற்றி பெறுங்கள்.

 

7 Comments

 1. karthik says:

  வெரி நல்லாயிருக்கு

 2. karthik says:

  நல்லாயிருக்கு

 3. Ranganathan says:

  சூப்பர்

 4. PREM says:

  encourging essay for all

 5. kousalya says:

  very nice and valuable information

 6. V. SETHURAMALINGAPANDIAN says:

  very very super tips

Post a Comment