Home » Articles » சாதனையாளராக…

 
சாதனையாளராக…


சிவம் எம்.எஸ்
Author:

எம்.எஸ். சிவம்

வாழ்க்கையில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் சாதனையாளராக திகழ வேண்டும். வேதனையாளராக திகழக்கூடாது. சாதனையாளராகத் திகழ்ந்தால் நாடும் வீடும் போற்றும். புகழும். வேதனையாளராக இருந்தால் நாடும் வீடும் ஏசும். எதிர்க்கும். நான் சாதனையாளராகத்தான் நினைக்கிறேன். நல்லநேரம் வருவதில்லை. அதிர்ஷ்டம் வருவதில்லை. யோகம் வருவதில்லை. என்னால் என்ன செய்யமுடியும் என்று சிலர புலம்புகிறார்கள்.

இவையெல்லாம் வேதனை மூட்டையை சுமப்பவனின் வேதாந்தம். வாழ்க்கையில் வீணாய் போகின்றவர்களின் விதண்டாவாதம். நல்ல நேரம் வருவதில்லை. அதிர்ஷ்டம் வருவதில்லை. யோகம் வருவதில்லை என்கின்ற புலம்பல்களை, வேதாந்தங்களை மூட்டைகட்டி சாதனை என்ற நெருப்பிலே போட்டு சாம்பலாக்கு.

வேதனை என்னும் இருட்டிலே இருந்து சாதனை என்னும் வெளிச்சத்துக்கு வா. நெஞ்சை நிமிர்த்திப் பார். எத்தனை சாதனையாளர்கள் பீடு நடைபோட்டு வெற்றி வாகை சூடி வலம் வருகிறார்கள் என்று எண்ணிப்பார். சாதனையாளர்களின் சாதனைகளை உற்றுப்பார். நம்மை சுற்றியுள்ள ஒவ்வொன்றும் சாதனையாளர்கள் கண்டுபிடித்த சாதனைகளை நாம் இன்று அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்

மின்சார்தைப் பார். மின் அணுத்துறை கம்ப்யூட்டரைப் பார். ரயிலைப் பார். ஆகாய விமானத்தைப்பார். கப்பலைப்பார். தொலை பேசியைப் பார். இன்னும் எத்தனையோ சாதனைகளைக் கூறிக்கொண்டே பாகலாம். இடம்பிடிக்காது. இவர்களெல்லாம் வேதனைகளை படிக்கட்டாக்கி அதன்மேல் நடந்து சாதனைபுரிந்து வெற்றிக்கொடி நாட்டிய மேதைகள். அந்த மேதைகளின் வாழ்க்கை வரலாற்றை உற்றுபார். அவர்களுடைய வாழ்க்கை வரலாற்று நூல்களை சரித்திர சான்றுகளை வாங்கி படித்து அறிவுப்பூர்வமாக ஆராய்ச்சி செய்துபார்.

எந்த துறையில் இருந்தாலும் எந்த தொழில் செய்தாலும் எந்த உத்யோகத்திலும் இருந்தாலும் அதில் சர்வவல்லமை படைத்த சாதனையாளராக திகழ இன்றே திட்டமிடு முடிவு எடு. செயல்படு. சாதனையாளராக திகழ இன்றே திட்டமிடு. முடிவு எடு. செயல்படு. சாதனையாளராக வர சபதம் எடு. வேதனை என்னும் சாத்தானை ஓட்டு. சாதனை என்னும் சாம்ராஜ்யத்தை கட்டு. நாடும் வீடும் போற்ற புகழ சாதனைபுரியும் சரித்திர நாயகனாக வாழ்ந்து காட்டு.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1999

நினைவில் நிற்பவை – தொடர் 7
பெருமையைக் கெடுக்கும் பொறாமை
தேர்வில் முதன்மை பெற
சிந்தனைத்துளிகள்
தேர்வில் வெற்றிபெற இதோ வழிகள்
வாசகர் கடிதம்
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
வளமூட்டும் சிந்தனைகள்
கேள்வி – பதில்
சாதனையாளராக…
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.கவின் சிந்தனை
கவிதை