Home » Articles » கேள்வி – பதில்

 
கேள்வி – பதில்


admin
Author:

கேள்வி : கோபம் – பதட்டம் இரண்டிற்கும் வித்தியாசம் என்ன? நான் அடிக்கடி பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் கோபப்பட்டு பேசி விடுகிறேன். பிறகு வருந்துகிறேன். இதற்கு என்ன செய்வது?

பதில் : கோபம் என்பது ஒரு உணர்ச்சி ( Emotion ) அன்பு, மகிழ்ச்சி போன்று இதுவும் ஒரு உணர்வு.

பதட்டம் ( Disease ). கோபம், கவலை, பயம் அளவுக்கு மீறிய மகிழ்ச்சி போன்றவைகளால் ஏற்படும் பாதிப்பை பதட்டம் ( Tension ) எனலாம்.

பதட்டம் இருவகை உண்டு : கவலை, பயம் போன்றவற்றின் போது வருவது நெகடிவ் டென்ஷன, அளவற்ற மகிழ்ச்சியில் உண்டாவது பாசிடிவ் டென்டிவ், ஆகவே கோபம் என்பது காரணி ( Cause ) பதட்டம் என்பது விளைவு (Effect). நாம் ‘ என்னை கோபமூட்டாதே, டென்ஷன் பண்ணாதே’ என்ற வார்த்தைகளை, ஒரே பொருள்பட உபயோகிக்கிறோம்.

கோபத்தை குறைக்க

1. கோபப்படும்போது அவசரப்பட்டு பேசாதீர்கள். சில நிமிடங்கள் மவுனமாக இருங்கள். பொறுமைதான் சிறந்த ஆயுதம்.

2. பிறகு கோபப்படும் விஷயத்தை பேப்பரில் எழுதுங்கள். அதை ஒரு மணி நேரம் கழித்து படித்தால், அவை வேண்டாததாகப்படும், கிழித்து எரியுங்கள்.

3. கோபமான மனநிலையில் எந்த முடிவையும் எடுக்காதீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல் கூடாது.

4. கட்டுக்கடங்காத கோபம் வரும்போது படுத்துக் கொள்ளுங்கள். ஆழ்ந்த மூச்சு – இழுத்து விடுதலை ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் செய்யுங்கள்.

5. தியானம், யோகாசன்ம் போன்றவைகள் கோபத்தை குறைக்கும் தன்மையுடையன.

6. கோபம் தணிந்தவுடன் கோபமான சூழ்நிலையை ஆராயுங்கள். அடுத்து அதுபோன்ற சூழ்நிலை வரும்போது நிதானமாக செயல்பட தயாராகிக் கொள்ளுங்கள்.

7. பிறருடைய தவறுகளை மன்னித்தல், உயர்ந்த மனோபாவமாகும். சிறுசிறு பிரச்சினைகளை பெரிது படுத்தாமல் மறப்பது, மனச்சுமைகளை குறைக்கும்.

8. மறுதரப்பினரின் வார்த்தைகளையும் அவரது மன உணர்வுகளையும் புரிந்துகொள்ளுங்கள், பெரும்பாலும் கோபமே வராது.

9. உங்களுடைய மன உணர்வுகளை, ” உங்கள் செய்கையால், சொல்லால் மனம் புண்பட்டுள்ளேன்” , என்ற வார்த்தைகளில் சுமூகமாக சம்பந்தப்பட்டவரிடமே சொல்லிவிடுங்கள்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1999

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ
பங்குச் சந்தை
வாசகர் கடிதம்
வாழ்த்துகிறோம்
சிந்தனைத்துளி
ஆண்டுகளின் கூட்டுத்தொகை வெற்றி
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனை
உன் இளமையின் மீது ஆணவம் கொள்ளதே!
ஓய் கொசுவே நீ வாழி!
''எதையும் சாதிக்க முடியும் ''
தேக்க நிலையிலும் வெற்றி காணுவோம்
கேள்வி – பதில்
சிந்தனைத்துளிகள்
'' ஷார்ப்பான '' சாதனைகள்
1 0 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
தயக்கம் வருவது எதனால்?