Home » Articles » வாசகர் கடிதம்

 
வாசகர் கடிதம்


admin
Author:

தன்னம்பிக்கை சிறப்பாக வருவது கண்டு வரவேற்கிறேன். உரிமையும் கடமையும், ‘ சரித்திரம் படைக்கலாம் வா ‘ கட்டுரைகள் சிறப்பாக இருக்கின்றன.

எம்.எஸ். சிவன் டைலர்ஸ், திருப்பூர்.

தன்னம்பிக்கை இதழ் இரண்டு மாதங்கள் வாங்கிப் படித்தேன். ஒவ்வொரு சொற்களும் ஒவ்வொரு கோடி கொடுத்தாலும் கிடைக்காது. மாதம் இரண்டு முறை வந்தால் மனதுக்கு மிகவும் உற்சாகமாக இருக்கும்.

எஸ்.என். கோகுலபாலன், கோவை – 6.

” சிந்தனையோடு கூடிய செயலே வெற்றிக்கு வழி வகுக்கும் ” என்ற ஷேக்சுபியரின் கூற்று, வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டி.

ஆ.சக்திவேலவன், காசிபாளையம்.

திரு.கே.கே இராமசாமி அவர்களின் கட்டுரை இந்திய இளைஞர்களை ஏற்றம் பெற வைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அவரின் வரிகள் ஒவ்வொன்றும் வைர வரிகள். அதில் ” ஒவ்வொருவர் வாழ்விலும் தினமும் பல வாய்ப்புகள் வரிகின்றன. வெற்றி பெரும் மனிதர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். மற்றவர்கள் தவற விட்டுவிடுகிறார்கள் ” என்ற கருத்து நூற்றுக்கு நூறு உண்மையே.

துலசேகர், சோளங்காபாளையம்,

சொல்வேந்தர் அரிமா எஸ்.டி. முகமது அவர்களின் சரித்திரம் படைக்கலாம் வா! ஆய்வுக்கட்டுரை அற்புதம், சிந்தனையாளர் திரு. எம்.ஆர்.கே. அவர்களின் எழுத்து நெடுயினை நுகர முடிகிறது. அவரது சிறந்த உள்ளத்திற்கும், தெளிந்த சிந்தனைக்கும் சிரம் தாழ்ந்த வணங்கங்கள்.

டாக்டர். ராம. சித்துராஜீ, நாமக்கல்.
———————————————————–

ஒரு புதிய இளைஞர் சமுதாயத்தை ” தன்னம்பிக்கை ” இதழ் உருவாக்க ஆரம்பித்துவிட்டது. இந்த ஆரம்பம், ஆலமரமாக வாழ்த்துக்கள். ” தடைக்கற்களே படிக்கற்கள் ” என்ற பொன்மொழியை நினைவு படுத்தும் டிசம்பர் இதழ் அட்டைபடம் அற்புதம், பாராட்டுகள்.

கவிஞர் லெனா, திருச்சி,


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1999

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ
பங்குச் சந்தை
வாசகர் கடிதம்
வாழ்த்துகிறோம்
சிந்தனைத்துளி
ஆண்டுகளின் கூட்டுத்தொகை வெற்றி
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனை
உன் இளமையின் மீது ஆணவம் கொள்ளதே!
ஓய் கொசுவே நீ வாழி!
''எதையும் சாதிக்க முடியும் ''
தேக்க நிலையிலும் வெற்றி காணுவோம்
கேள்வி – பதில்
சிந்தனைத்துளிகள்
'' ஷார்ப்பான '' சாதனைகள்
1 0 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
தயக்கம் வருவது எதனால்?