Home » Articles » ஆலோசனைப் பகுதி

 
ஆலோசனைப் பகுதி


admin
Author:

கேள்வி: எனக்கு வயது 40. ஒரு கம்பெனயில் உதவியாளராக வேலை செய்கிறேன். பெரும்பாலும் நான் பழகுபவர்கள், என்னைப் புண்புடும்படியாகப் பேசுகிறார்கள். அதைப்பொறுக்காதபோது, கோபத்தில் ஏதேனும் பேசிவிடுகிறேன். இதனால் மற்றவர்களுடன் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. எனக்கு மற்றவர்களைப் போன்ற உயர்வான தகுதிகள் இல்ல்லாத்தால்தான் என்னை பிறர் மதிப்பதில்லை என்று எண்ணுகிறேன். பிறரை பார்க்கும் போதெல்லாம் எனக்குள் தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது. இதற்கு என்ன செய்யலாம்?

பதில்: மனதில் தாழ்வு எண்ணம் இருந்தால், மற்றவர்கள் இயல்பாகச் செயல்பட்டாலும், அவர்களுடைய செய்கைகள் நம்மை தாழ்த்துவதாகத் தோன்றும். மேலும் மற்றவர்கள் தங்களுடைய சொந்த பிரச்சனைகளாலும், வேலை சிரமத்தாலும் நம்முடைய எதிர்பார்ப்புகளை சய்ய இயலாமல் போகலாம். அதைக்கூட திட்டமிட்டு நம்மை தாழ்த்துவதற்குச் செய்வதாக எண்ணத் தோன்றும்.

ஒருவேளை, மற்றவர் நம்மை தாழ்த்த திட்டமிட்டால் கூட, அதன் ரியாக்ஷனை வெளிக் காட்டாவிடில், அவருக்கு ஏமாற்றமாகிவிடும். அவர் அந்த செயலை மீண்டும் செய்ய மாட்டார்.

மேலும் ஒருவர் உங்களை தாழ்த்துவதாக நினைத்தால், சுமூகமாக எந்த உணர்ச்சி வயப்படுதலும் இல்லாமல், ‘உங்கள் செயல், என்னை புண்புடுத்துகிறது’ என்ற றுப்பை வெளியடலாம். அதை வார்த்தைகளால் சொல்லும் மனநிலை மற்றும் சூழ்நிலை இல்லாதபோது, சிறு காகிதத்தில் எழுதிக் கொடுக்கலாம்.

இதற்குப் பின்னரும் ஒருவர்தொடர்ந்து உங்களைப் புண்படுத்தினால், அவரைச் சந்திக்கும் வாய்ப்பைக் குறைக்கலாம். அல்லது தவிர்க்கலாம்.

தாழ்வு மனப்பான்மை உண்டாக்கும் காரணங்களை ஆராய்ந்தால், ‘பிறருடன் நம்மை ஒப்பிடுதல் தான்’ முதல் காரணம் என்பது தெரியும்.

நம்முடைய பெற்றோர்களை மற்ற பெற்றோர்களுடன் ஒப்பிட்டு ‘அவர்களைப் போலில்லையே’ என நினைக்கிறோம்.

நம்முடைய தொழிலை மற்ற தொழில்களுடன் ஒப்பிட்டு ‘அது போன்று அமையவில்லையே’ என நினைக்கிறோம்.

தொழில் உயர்வாக இருந்தாலும் ‘அவரைப் போல சம்பாதிக்கவில்லையே என ஏங்குகிறோம் . அல்லது ‘அவரைவிட நமக்குத் தான் வீண் செலவு வந்து கொண்டே இருக்கிறது’ என ஒப்பிடுகிறோம்.

அல்லது, ‘அவரைப் போன்ற உறவுகள் அல்லது தொடர்புகள் நமக்கில்லையே’ என நினைக்கலாம்.

இது போன்ற ஒப்பிடுதலைத் தொடர்ந்தால் அதற்கு எல்லையே இராது.

ஆகவே தாழ்வு எண்ணங்களை மாற்ற முதலில், உங்களைப் பிறருடன் எதற்காகவும் ஒப்பிடாதீர்கள். இந்த உலகத்தில் நீங்கள் யாருடனும் ஒப்பிட முடியாதவர். மற்றவர்களிடம் இல்லாத பல அம்சங்கள் உங்களிடம் உள்ளன. பல்வேறு காரணங்களாலும் சூழ்நிலைகளாலும் அவை வெளிப்படாமல் இருக்கின்றன.

இரண்டாவது, உங்களுடைய கடந்தகால வாழ்க்கையை இன்றைய நிலையுடன் ஒப்பிடுங்கள். அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதைக்களைய முயலுங்கள். அதுவே சிறந்த முன்னேற்றமாகும். மற்றவர்களைப் பார்த்து சில வழிமுறைகளை செய்யலாம். சிலவற்றைசெய்யாமல் விடலாம். அதற்குமட்டுமே மற்றவ்வர்களின் நிலையை அறிய வேண்டும். தவிர மற்றவர்களுடன் ஒப்பிடாமல் இருப்பதுதான் உங்களுக்கும் நல்லது. மற்றவர்களுக்கும் நல்லது. அப்போதுதான் மனித உறவுகள் மேம்படும். தாழ்வு மனப்பான்மை உண்டாகாது.

மூன்றாவது, ‘நீங்கள் யாருகும் தாழ்ந்தவர் அல்ல’ என்ற உறுதியான எண்ணத்தை மனதில் நிலை நிறுத்துங்கள். உங்களிடமில்லாத சிலதகுதிகள் பிறரிடம் இருந்தாலும், நீங்கள்யாருக்கும் தாழ்ந்தவரல்ல என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

நான்காது, உங்களுடைய உடன்பாடு இல்லாமல், உங்களை யாரும் தாழ்த்த முடியாது. மற்றவர்கள் உங்களை தாழ்த்தினாலும் நீங்கள் உங்களை தாழ்வாக நினைக்காதீர்கள். அப்போது தான் பிறர் செயல்களை உங்களைப் பாதிக்காது. முடிந்த அளவு உங்கள் தகுதியை மேம்படுத்து முயலுங்கள்.

இந்த மனநிலயில் செயல்பட்டால் தாழ்வு மனம்பான்மை நீங்கும். மனக்குறைகள் குறைந்து விடும். கோபப்படுதல் மற்றும் கருத்து வேறுபாடுகள் நீங்கி உயர்வான உறவுகள் தொடரும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 1998

தன்னம்பிக்கை முத்துக்கள்
சிந்தனைத் துளிகள்
நூல் அறிமுகம்
கோவை தன்னம்பிக்கை இதழ் நடத்திய சுயமுன்னேப் பயிலரங்கம்
பத்திரிகைகள் பாராட்டுகின்றன
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
வாசகர் கடிதம்
உழைப்பு
ஆலோசனைப் பகுதி
கவலை "No" தன்னம்பிக்கை "Yes"
சிகரம்
நினைவில் நிற்பவை
உரிமையும் கடமையும்
இளைஞனுக்கு வாழ்வு செழிக்க வழிகாட்டி
சிந்தனைத்துளி
மனித உறவுகள்
முன்னேற்றப் பாதை
சோம்பேறி யார்?
உள்ளத்தோடு உள்ளம்