Home » Cover Story » நினைவில் நிற்பவை

 
நினைவில் நிற்பவை


இராமசாமி K.K
Author:


– K.K. இராமசாமி

நிறுவனர். ஹார்ப் நிறுவனங்கள்

தொழில் தொடங்கினேன்

சாதனைகளின் தொடக்கம் எண்ணங்கள். ஒரு தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் 1956 – ஆம் ஆண்டில் தோன்றியது. அந்த ஆண்டு நான் பி.எஸ்.ஜி. தொழிற்கல்லூரிஇல் மூன்றாம் ஆண்டு மாணவன். எங்கள் இயந்திரப் பிரிவு சங்கத்தின் தொடக்க விழாஇற்கு டெக்ஸ்மோ உரிமையாளர் திரு. இராமசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சியும், அவருடைய உரயும் என் மனதில்நாமும் அவரைப் போல் ஒரு தொழில் அதிபராக வளர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

படிப்புக் காலத்தில் பி.எஸ்.ஜி.. இன்டஸ்டிரியல் இன்ஸ்டிடியூட் என்ற உற்பத்தி நிலையத்தில் பயிற்சிக்காக வாரம் ஒருமுறை சென்று வந்தோம். அந்தப் பயிற்சியின் போது கண்டறிந்த உற்பத்தி முறைகளும், உற்பத்தி செய்த பொருட்களும் தொழில் தொடங்க வேண்டும் என்ற என் எணத்திற்கு மேலும் ஊக்கம் அளித்தன.

சாத்தனை செய்ய விரும்புபவர்களுக்கு ஒரு இலக்கு வேண்டும். ஆங்கிலத்தில் “A Dream with a dead line” என்றும் தமிழில் “கால வரையுடன் ஒரு கனவு” என்றும் கூறலாம். என் கனவு சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி நடத்துவது. எனது பண வசதியின்மை காரணமாக என்னால் ஒரு காலக் கெடுவை நிர்ணயிக்க இயலவில்லை. 1956 -ல் கண்ட கனவு நினைவாக மாற சுமார் பதினொரு ஆண்டுகள் ஆயிற்று. 1964 – ம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து பயிற்சி முடிந்து வந்தவுடன் தொழில் தொடங்க விரும்பினேன். ஆனால் அப்போது தொழில் தொடங்கத் தேவையான கட்டிடம், மின் வசதி, இயந்திரங்கள் வாங்கப் பணம் முதலியன இல்லாத்தால் என் முயற்சியைத் தள்ளிப் போட்டுவிட்டு மீண்டும் பி.எஸ்.ஜி யில் மூன்று ஆண்டுகள் பணி செய்தேன்.

இந்தக் காலத்தில் என் தந்தை சுமார் இரண்டாயிரம் சதுர அடியில் ஒரு கட்டிடம் கட்டிக் கொடுத்தார். நான் பி.எஸ்.ஜியில் பத்து ஆண்டுகள் பணி செய்த்தற்கு பணிக்கொடையாக ரூபாய் ஐயாயிரம் கொடுத்தனர். நான் திரு. ஜி.ஆர். தாமோதரன் அவர்களிடம், அந்த ஐயாயிரத்தை முன் பணமாக வைத்துக்கொண்டு ஒரு லேத மெசினை விலைக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் ஒத்துக் கொண்டு, பத்தாயிரம் விலையுள்ள லேத் மெஷினை ஐயாயிரம் ரூபாய் முன்பணம் பெற்றுக் கொண்டு எனக்குக் கொடுத்தார். அதைத வைத்து என் தொழிற்சாலயைத் தொடங்கினேன். தொடக்கத்தில் பி.எஸ்.ஜி. நிறுவனத்திற்கு சில பொருட்களைக் கடைந்து கொடுத்தேன்.

பாரத ஸ்டேட் வங்கி:

என் தம்பி இராமச்சந்திரன் ஒரு பால் பண்ணை தொடங்க கடன் வாங்குவதாக ‘பாரத ஸ்டேட் வங்கியை’ அணுகினார். அப்போதுத என்னைப் பற்றியிஉம், ஷார்ப் டூல்ஸ் கம்பனி பற்றியும் கூறியிருக்கிறார். அவர்கள் ஷார்ப் டூல்ஸ் பற்றி மேலும் பல விபரங்களைக்கேட்டுவிட்டு, என்னைச் சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளார்கள். என் தம்பி இந்த விபரங்களை என்னிடம் கூறினார். ஆனால், நான் அதற்கு முக்கியத்துவம்கொடுக்காமல் இருந்து விட்டேன். அடுத்த நாள் காலை எனக்கு பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து திரு. முத்துக் கிருஷ்ணன் என்பவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். என்னைச் சந்திக்க விரும்புவதாக கூறினார்.

நான் நாளை வந்து பார்க்கிறேன் என்று கூறினேன். அவர் உடனே ‘ஏன் நாளை – இப்போதே புறப்பட்டு வாருங்கள்’ என்றார். அவர் பேச்சில் இருந்த ஆர்வத்தை என்னால் புறக்கணிக்க இயலாமல் ‘சரி, உடனே வருகிறேன்’ என்று கூறிப் புறப்பட்டுச் சென்றேன். என்னைப் பற்றியும், தொழிற்சாலை பற்றியும் விரிவாக விசாரித்தார்கள். அடுத்த நாள் நேரில் வந்து பார்வையிட்டனர். பின் என் கணக்குகளை பாரத ஸ்டேட் வங்கிக்கு எடுத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தனர். ‘எவ்வளவு கடன் கொடுப்பீர்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சிரித்துக்கொண்டே ‘உங்கள் வளர்ச்சிக்குத் தேவையான கடனை, தேவைப்படும் போது கொடுப்போம்’ என்று கூறினார்கள்.

அடுத்த சில தினங்களில், என் நண்பர்கள் சிலரைக் கலந்து பேசிவிட்டு என் கணக்கை பாரத ஸ்டேன் வங்கிக்கு மாற்றினேன். முன்பு ஒரு முறை என் தந்தை என்னிடம் ஸ்டேட் வங்கியைப் பற்றிக் கூறும்போது, அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பது ஒரு பெருமை. ஆனால் அந்த வங்கயில் கணக்கு தொடங்குவது என்பது மிகவும் கடினம் என்று கூறியிருந்தார்கள். ஆனால் இன்று அவர்களே நம்மை அழைக்கிறார்கள் என்பதை நினைத்து மகிழ்ந்தேன்.

நண்பரின் அறிமுகம்:

பி.எஸ்.ஜி.யில் என்னுடன் பணி செய்த பொறியாளர்களில் திரு. ஜெயச்சந்திரபாபு என்பவரும் ஒருவர். அவர். பி.எஸ்.ஜியிலிருந்து விலகி திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையத்தில் பணியில் சேர்ந்தேர். அங்கிருந்து சில உதிரிபாகங்கள் செய்வதற்காக ஒரு சில வரை படங்களை அனுப்பி, விலை விபரங்களை (Quotation) அனுப்பச் சொல்லியிருந்தார். அவைகளைப்பெற்றுக் கொண்ட நான் பதில் அனுப்பவில்லை. அடுத்த சில தினங்களில் ‘ஏன் பதில் அனுப்பவில்லை’ என்று கேட்டார். ‘சிறிய அளவில் தொழில் செய்கின்ற நான் அவ்வளவு பெரிய நிறுவனத்துடன் வியாபாரம் செய்வது சிரம்ம். ஆகவே பதில் அனுப்பவில்லை” என்று கூறினேன். திரும்ப அவர் ‘ஒரு பதில் எழுத எவ்வளவு செலவாகும்’ என்று கேட்டார். அவர் கேட்ட கேள்வி என்னைச் சிந்திக்க வைத்தது. உடனே விலை விவரங்களை அனுப்பு வைத்தேன்.

ஒரு வாரத்தில் சுமார் ஐயாயிரம் ரூபாய் மதிப்பிற்கு ஒரு ஆர்டர் வந்தது. மகிழ்ச்சியுடன் அந்த ஆர்டரை நல்ல முறையில் செய்து அனுப்பினேன். செய்த வேலையின் தரத்தையும் குறிப்பிட்ட காலத்தில் அனுப்பியதையும் பாராட்டி, தொடர்ந்து மேலும் சில ஆர்டர்களை அனுப்பினார்கள்.

ஒருமுறை நூறு தன் பிரஸ் செய்வதற்கு ஒரு விலை விபரம் கேட்டார்கள். நான் அதை செய்ய முடியும் என்று நம்பினேன். அதன் உற்பத்தி விலையை கணக்கிட்ட போது சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஆகும். என்று தெரிந்தது. பாரத ஸ்டேட் வங்கியில் என்னுடைய கடன் வரையளவு சுமார் இருபதாயிரம் ரூபாய் மட்டுமே. ஆகவே, இந்த ஆர்டரை எடுத்துச் செய்வது நம்முடைய பண வசதிக்கு மிகவும் மேற்பட்டது என்று எண்ணினேன். இந்த ஆர்டரை எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

வேண்டாம் என்று எழுதுவதற்கு பதிலாக அதிக விலை கேட்போம். அவர்களே நிராகரித்து விடுவார்கள் என்று எண்ணி, அந்த பிரஸ் செய்வதற்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கேட்டு பதில் எழுதினேன். என்னுடைய நல்ல நேரம் எனக்கு அந்த ஆர்டர் கொடுத்து விட்டார்கள். எனக்கு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இவ்வளவு பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது என்று கவலையாகவும் இருந்தது. ‘நீங்கள் ஒரு லட்சம் முன் பணம் கொடுத்தால் இந்த ஆர்டரை ஏற்றுக் கொள்கிறேன்’ என்று கடிதம் எழுதினேன். அவர்கள்நேரில் வரச் சொன்னார்கள். நேரில் போனபோது என்னைப் பற்றி சில விபர்களைக்கேட்டுத் தெரிந்து கொண்டு, ரூபாய் ஐம்பதாயிரம் முன்பணம் தருவதாக ஒத்துக் கொண்டார்கள். எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தத.உ திரும்பி கோவை வந்த நான் பாரத ஸ்டேட் வங்கியை அணுகி இந்த ஆர்டர் பற்றிய விபரங்களைக்கூறி இதை முடிக்க ஒரு லட்சம் ரூபாய் கடன் வேண்டும் என்று கேட்டேன். அப்போது பொறுப்பில் இருந்த திரு. முத்து கிருஷ்ன் என்ற அதிகாரி, என்னுடன் விபரமக விவாதித்துவிட்டு, உடனே கடன் தொகையை அனுமதிப்பதாக்க் கூறினார்கள். கூடுதலாக எந்த சொத்தையும் அடமானமாக கேட்காமல் என் திறமையின் மீதும், நாணயத்தின் மீதும் நம்பிக்கை வைத்து அவர் எடுத்த முடிவு என்னை வியப்பில் ஆழ்த்திது. அன்று தான் பாரத ஸ்டேட் வங்கிக்கு வந்ததன் பலனையும், ஒரு தொழிலின் வளர்ச்சியில் வங்கிகளின் பங்கின் முக்கியத்துவத்தையும் உணர்ந்தேன். அடுத்த மூன்று மாத்த்தில் அந்த நூறு டன் பிரஸ்ஸை வெற்றிகரமாக செய்துமுடித்துக்கொடுத்தேன். அந்த பிரஸ்ஸை கொடுக்கும் நிகழ்ச்சியை ஒரு விழாவாக ஏற்பாடு செய்திருந்தேன். என் வாழ்வின் வழிகாட்டியான திரு.ஜி.ஆர். தாமோதரன் அவர்கள் இயந்திரத்தை வினியோகித்தார்கள். பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் விழாவிற்கு தலைமை தாங்கினார்கள். விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையத்திலிருந்து பெருமாள் என்ற பொறியாளர் வந்திருது அந்த இயந்திரத்தைப் பெற்றுக் கொண்டார். அன்று இந்து ஆங்கில நாளிதழில் ஒரு விளம்பரமும் கொடுத்தேன். அந்த விளம்பரத்தைப் பார்த்த ‘சன் ஆர்க்’ என்ற வெல்டிங்ராடு செய்யும் கம்பெனி தங்களுக்கும் சில இயந்திரங்கள் செய்து தரும்படி என்னை அணுகினார்கள்.

ரூபாய் ஒரு லட்சம் லாபம் பெற்ற நான் ஒரு மோட்டார் வாகனம் வாங்க விரும்பி ரூபாய் முப்பதாயிரத்தை வங்கியிலிருந்து எடுக்க விரும்பினேன். ஆனால் வங்கி அதிகாரி முத்துக் கிருஷ்ணன் அதைத் தடுத்து அந்த ஒரு லட்சத்தையும் இயந்திரங்கள் வாங்கப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். அந்த அறிவுரையை ஏற்றுக் கொண்டு அந்த லாப்ப்பணம் முழுவதையும் பது இயந்திரங்கள் வாங்குவதில் முதலீடு செய்தேன்.

தொடரும்…


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 1998

தன்னம்பிக்கை முத்துக்கள்
சிந்தனைத் துளிகள்
நூல் அறிமுகம்
கோவை தன்னம்பிக்கை இதழ் நடத்திய சுயமுன்னேப் பயிலரங்கம்
பத்திரிகைகள் பாராட்டுகின்றன
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
வாசகர் கடிதம்
உழைப்பு
ஆலோசனைப் பகுதி
கவலை "No" தன்னம்பிக்கை "Yes"
சிகரம்
நினைவில் நிற்பவை
உரிமையும் கடமையும்
இளைஞனுக்கு வாழ்வு செழிக்க வழிகாட்டி
சிந்தனைத்துளி
மனித உறவுகள்
முன்னேற்றப் பாதை
சோம்பேறி யார்?
உள்ளத்தோடு உள்ளம்