Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது தன்னம்பிக்கை மிகுந்த உறுதியுடன். இந்தச் சமுதாயத்தின் நலன் மீது மிகுந்த அக்கறையும், அதன் வளர்ச்சியில் நாட்டமும் கொண்ட ஒரு மாமனிதர் விதைத்த விதை இன்று விருட்சமாய் வளர்ந்து நின்று பல்வேறு மக்களின் பிரச்சினைகளைக் களைந்து, வாழ்க்கைக்கு வழிகாட்டி, கூனிக்குறுகி நின்ற பலரை மனிதர்களாக மாற்றி சாதனையாளர்களாக உருவாக்கி உள்ளது.

அவருடைய நல்லெண்ணம் அவருக்குப் பின்னும் இவ்விதழ் நடத்தப்பட வேண்டும் என்றதற்காக பல முன்னேற்றச் சிந்தனையாளர்களை உருவாக்கியுள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

நல்லெண்ணங்களைப் பயிரிடுவோம். தீய எண்ணங்களை ஒவ்வொன்றாக அடியோடு கிள்ளி எறிவோம். நமது நல்லெண்ணம் நம்மையும், நமது குடும்பத்தாரையும், நாம் சார்ந்துள்ள சமுதாயத்தையும் மேம்படுத்தட்டும். உயர்ந்த எண்ணம் நாம் உறுதியாக செயல்படவும், தளராமல் முன்னோக்கிச் செல்லவும் உதவும்.

வளமையைப் பற்றியே நினைக்கும் செல்வந்தன் மேலும் மேலும் செல்வந்தனாகிறான். வறுமையைப்பற்றியே நினைக்கும் ஏழை மேலும் ஏழையாகிறான். நமது எண்ணமே நம்மை உருவாக்குகிறது.

வெற்றியடைவதே நம் அனைவரது குறிக்கோளாகும். நமது வெற்றிப் பாதையின் ஒவ்வொரு அடியும் நம்மையும், நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்விக்க வேண்டும். நமது உறுதியான நல்லெண்ணம் மட்டுமே இதற்கு வழிவகுக்கும் என்பது திண்ணம்.

நாம் எதை அடைகிறோம், எதையெல்லாம் அடைய முடியாமல் தோல்வியடைகிறோம் என்பதற்கெல்லாம் அடிப்படைக்காரணம் நமது எண்ணங்களே நமது எண்ணத்தின் விளைவே நாம் அனுபவிப்பது, தீதும் நன்றும் பிறர்தர வாரா.

நமது நிலைக்கே நாமே காரணம். நாம் எப்படி எண்ணுகிறோமோ அப்படியாகிறோம். அறிவத் தேடுபவன் அறிவாளியாகிறான். நீங்கள் எத்த் தேடுகிறீர்கள் என்று சிந்தியுங்கள்!

நமது எண்ணம், நமது செயல் வடிவில் நமது மக்களைச் சென்றடைகிறது. நம்முடன் தொழில் செய்பவர்களைச் சென்றடைகிறது. அதன் விளைவே அவர்களது செயலாக மாறுகிறது. வாங்குபவன் விற்பவனால் பயனடைய வேண்டும் என எண்ணுகிறான். விற்பவன் விற்பவனால் பயனடைய வேண்டும் என எண்ணுகிறான். விற்பவன் வாங்குபவனால் பயனடைய வேண்டும் என எண்ணுகிறான். விளைவு உங்களுக்குத் தெரியாத்தல்ல? ஏன் விற்பவனும் வாங்குபவனும் இருவரும் பயனடைய வேண்டும் என நினைத்தால்…

அட்டா.. இந்தச் சமுதாயத்தையல்லவா அனைவரும் எதிர்பார்க்கிறோம்.

எண்ணங்களை மேம்படுத்துவோம். உயர்ந்த எண்ணங்கள் உயர்வைத் தரும். தோல்விகளை எதிர்த்துப் போராடும் மன உறுதியைத் தரும். எண்ணங்களை மேலும் தெளிவாக்குவோம். உறுதியாக்குவோம். வெற்றிடைவோம்.

வாழ்த்துகளுடன்,
ஆசிரியர் குழு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 1998

தன்னம்பிக்கை முத்துக்கள்
சிந்தனைத் துளிகள்
நூல் அறிமுகம்
கோவை தன்னம்பிக்கை இதழ் நடத்திய சுயமுன்னேப் பயிலரங்கம்
பத்திரிகைகள் பாராட்டுகின்றன
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
வாசகர் கடிதம்
உழைப்பு
ஆலோசனைப் பகுதி
கவலை "No" தன்னம்பிக்கை "Yes"
சிகரம்
நினைவில் நிற்பவை
உரிமையும் கடமையும்
இளைஞனுக்கு வாழ்வு செழிக்க வழிகாட்டி
சிந்தனைத்துளி
மனித உறவுகள்
முன்னேற்றப் பாதை
சோம்பேறி யார்?
உள்ளத்தோடு உள்ளம்