Home » Articles » முன்னேற்றப்பாதை – தொடர்

 
முன்னேற்றப்பாதை – தொடர்


admin
Author:

” நேர நிர்வாகம் ”
– டாக்டர் ஜி. இராமநாதன், எம்.டி.,

10. முடிவு செய்யாமை

ஒரே நேரத்தில் இரண்டு வகையான அபிப்ராயங்கள் தோன்றும் போது அவற்றில் எதைச்செய்வது என்று குழப்பத்தால் பல்வேறு சூழ்நிலைகளில் நேரத்தை வீணாக்குகிறோம்.

தனி மனிதானாலும் – குடும்பமுள்ளவரானாலும் தொழில் துறையில் உள்ளவரானாலும் நிர்வாகத்தினரானாலும் – முடிவெடுக்கும் திறன் (Decision Making ) அவசியம் வேண்டும். அவ்வாறு எடுக்க கற்றுக் கொள்ளாத போது, மற்றவர்கள் அவரவர் விருப்பத்திற்கேற்ப முடிவெடுத்து, முடிவெடுக்காதவரை ஆட்டுவிப்பார்கள், ‘ முடிவெடுக்காமல் இருப்பதைவிட தவறான முடிவு கூட மேல் தான் (Worong decision is better than indecision ) என்பார்கள்.

ஏனெனில் தவறான முடி வெடுப்பவரை திருத்த முடியும் ஆனால் முடிவெடுக்கத் தெரியாத வரை சரிப்படுத்துவது சிரமம்.

11. மறுப்பு தெரிவிக்க இயலாமை

‘ நியாயமில்லாத ஒன்றை மறுக்க நினைக்கும்போது மற்றவர்களுக்காக ‘சரி என்று சொல்லாதீர்கள் ( Don’t say ‘Yes’ when you want to say ‘No’) என்ற பழமொழி உண்டு.

குறிக்கோள்களை நோக்கி பயணம் செய்யும்போது பல்வேறு தடைகள் குறுக்கிடுகின்றன. நண்பர்கள் = உறவினர்கள் – அதிகாரியாக மேலுள்ளவர்கள் – போன்றவர்கள் மூலம் நம்மால் மறுக்க முடியாத அளவிற்கு – சில சுமைகள் – நம்மீது திணிக்கப்படும். இது போன்ற சூழ்நிலைகள் நன்கு ஆய்ந்து தெளிந்தெடுத்த முடிவை மாற்றாமல் தொடர்ந்து செயல்படுவதுதான் வெற்றியை நல்கும். தேவையான இடத்தில் பிறருடைய வற்புறுத்தலை மறுக்க வேண்டியது அவசியமாகும். (பகைமையில்லாமல்)

12. வேலைகளை தள்ளிப்போடுதல்

பெரும்பாலும் தமக்கு புதியதான – விருப்பமில்லாத – கடினமான வேலைகளை தள்ளிப் போடுகிறோம். அது போன்ற வேலைகள் தான் முன்னேற்றத்திற்கு உதவியாக அமைகின்றன. ஆகவே தள்ளிப் போடுதலை விடுத்து அவ்வப்போதே செயலாற்றுவதே உயர்வாகும். பல காரிங்கள் ஒன்றாக வரும்போது முன்பு குறிப்பிட்டது போல் ‘ முக்கியம் – அவசரம் ‘ என்ற அடிப்படையில் தேர்ந்து செயல்பட வேண்டும்.

13. பிறரால் உண்டாகும் தாமதங்கள்

மேலதகாரிகளால் உண்டாகும். குறிக்கீடுகளை தவிர்க்க முடியாது. ஆனால் அவர்களை தகுந்த தேவைகளுடன் முன் கூட்டியே பார்த்து அவர் சம்மந்தப்பட்ட வேலைகளை முடிப்பது குறுக்கீடுகளைத் தவிர்க்கும்.

சக ஊழியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று பலர் தங்கள் ஓய்வுநேரத்தின் போது அவசியமில்லாமல் குறுக்கிடலாம் தொழில் நேரத்தில் மற்றவர்களை உபசரிக்கும் பழக்கம், இதுபோன்ற குறுக்கிடுபவர்களை ஊக்குவிக்கும். ஆகவே அவர்களை அலுவலகத்தில் தவிர்க்க வேண்டும் அவர்களை சந்திக்க தனியிடம் மற்றும் நேரம் ஒதுக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் குறுக்கிடுவதை தடுக்ககூடாது. ஆனால் தேவைக்கேற்ப சரியான உதவியாளர்களின் மூலமோ அவர்களுக்கு செய்யும் பணியினை சரிவர நடக்க ஏற்பாடு செய்தால் அவர்களின் குறுக்கீடுகள் இருக்காது.

பிறரை சந்திக்க செல்லும் போது தாமதம் ஏற்பாட்டால் அந்த நேரங்களில் சில கட்டுரைகளைப் படிக்காலம், அல்லது சில எழுத்து வேலைகளை செய்து முடிக்கலாம். அதற்குத் தயாராக செல்வது நேரத்தை பயனுள்ளதாக்கும்.

பிறரால் அதிகம் குறுக்கீடு உள்ளவர்கள் தங்களைச் சந்திப்பவர்களை 1. தடையில்லாமல் பார்க்க வேண்டியவர்கள் ( Unrestricted ) 2. குறிப்பிட்ட சமயங்களில் மட்டும் பார்க்க வேண்டியவர்கள் (Restricted) 3. பார்க்க கூடாதவர்கள் ( Avoid ) எனப்பிரித்து கையாள வேண்டும்.

14. கவலை எதிர்மறை எண்ணங்கள்

கடந்த கால வாழ்க்கை சம்பவங்களை நினைத்துக் கவலைப்படுதல், தேவையேயில்லாமல் நமக்கு நாமே பரிதாபப்பட்டு அனுதாபம் கொண்டு சோகமாகுதல், நடைமுறை சாத்தியமில்லாத பயங்கள் போன்றவற்றால் வாழ்க்கையை வீணடிப்பவர்கள் ஏராளம். பொதுவாக சோம்பல், தூக்கம், மறதி அதிகமுள்ளவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவது கடினம்.

ஆகவே ஆக்க பூர்வ சிந்தனைகளை வளர்த்து உற்சாகமாக வாழும் கலையினை பின்பற்ற வேண்டும்.

15, வேலைகளை பகிர்ந்து கொள்ளாமை

கடினமாக உழைத்து, அடி மட்டத்திலிருந்து உயர்வடைபவர்கள், அத்துறையில் எல்லா செயல் முறைகளையும் அறிந்திருப்பார்கள். அவர்களுக்கு மற்றவர்கள் செய்தால் அதில் குறை இருப்பது போல் தோன்றும் அதனால் எல்லாவற்றையும் தாமே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினால், பிறரின் உதவிகளை ஏற்காமல் தொழிலில் பிறரையும் அமர்த்தாமல் செயல்படுவார்கள், இதனால் வேலையின் சுமைகள் அதிகமாகும் : அதிக வாடிக்கையாளர்களைப் பெற முடியாமற் போகும்.

திருவள்ளுவர் கூறியதுபோல எந்த வேலையை யார்மூலம் செய்தால் விரைவில் நிறைவேறுமோ, அந்தந்த நபரை அமர்த்தி வேலையை பகிர்தல் உயர்வாகும்.

16. பொருட்களை தேடுதல்

பொருட்களை முறையாக அதற்கான இடத்தில் வைக்காமல், தினமும் காணாமல் தேடும் பழக்கத்தை பலரிடம் பார்க்கலாம். சாவி, மூக்குக் கண்ணடி, கடிகாரம், கைக்குட்டை போன்ற பொருட்களை இடம் மாறி வைத்து பிறகு தேடுவது பலருக்கு தினசரி நடவடிக்கையாகும். ஒவ்வொரு பொருளையும் அதனதன் இடத்தில் வைத்து உபயோகித்தால் சிரமங்கள் குறையும், நேரங்கள் வீணாகா.

17. சும்மாயிருத்தல்

நமது நாட்டில் பலர், எதையும் செய்யாமல் சும்மாயிருத்தலைப் பார்க்கலாம். இதனால் தமக்கும் பிறருக்கும் பயனில்லாமல் வாழ்கிறார்கள். ஒவ்வொருவரும் ஏதாவதொரு ஆக்கப் பூர்வச் செயலைச் செய்வது மிக அவசியம்.

ஒவ்வொருவருக்கும், தினசரிகால அட்டவணையை உருவாக்கி அதன்படி நேரத்தை பயன்படுத்த வேண்டும். தத்தம் அலுவல்களை முக்கயத்துவம் அடிப்படையில் ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும். தினமும் மேற்கண்ட காரணங்களால் நேரம் வீணாகிறதா என்பதை ஆராய்ந்து எதிர் காலத்தில் அதை மாற்றியமைத்தால் நேரத்தை பொன்னாக்கலாம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 1998

கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது?
அவர்களும் நீயும்
மனிதனின் துயரங்களும் வாழ்வின் அர்த்தமும்
பத்து ஆண்டுகளில் 1,00,00,000 ரூபாய் சம்பாதிப்பது எப்படி?. . .
இதோ! வெற்றிக்கு ஓர் முன் உதாரணம்
உணர்ச்சிவசப்படுவதுதான் மனித நேயம் மறையக் காரணம்
வாசகர் கடிதம்
முன்னேற்றப்பாதை – தொடர்
சிந்தனைத்துளிகள்
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனை