Home » Articles » சிந்தனைத்துளிகள்

 
சிந்தனைத்துளிகள்


admin
Author:

அளவுக்கு மீறய செயல்முறைகளைச் சொல்லிக் கொண்டே போனால் கேட்பவர்கள் அதைச் செய்வார்களே ஒழிய புதிதாக எதையும் செய்ய மாட்டார்கள். சாதாரண ஒரு மாதிரி தொழில் புரிவோர்க்கு இது பொருந்தலாம். ஆனால் அறிவார்ந்தவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த முறை பொருந்தாது.
———————

வெற்றிகள் எல்லாம் எடுத்தவுடன் கிடைத்து விடுவதில்லை. இடைஇடையே தடைகள், மனச்சோர்வை உண்டாக்கக் கூடிய நிகழ்ச்சிகள். இன்ன பிற தொல்லைகள் எல்லாம் ஏற்படும். அதனால் தளர்ச்சி கொள்ளக் கூடாது. நமக்கு ஏற்படும் தடைகள் தான் நம்மை நின்று நிதானித்துச் சிந்திக்கச் செய்கின்றன. அடுத்த அடியை எப்படி எடுத்து வைக்க வேண்டும் என்பதற்கு அத்தகைய தடைகள்கூட நமக்குத் தேவைதான்.
சிந்தனையின் தொண்ணூறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவள் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒரு போதும் தவறு செய்வதில்லை.
-விவேகானந்தர்.
———————
சந்தர்பங்கள் எல்லோருக்கும் பொதுவாக ஒரே மாதிரியாகத் தான் வருகின்றன. ஆனால் சிலருக்குத்தான் அதில் குதிரைக் குட்டி இருப்பது தெரிகிறது. சிலர் சாணத்தைத்தான் காண்கிறார்கள்.
———————
புறத்திணிப்பு இல்லாத பணியே தவம்

விருப்பத்திற்கு மாறாக திணிக்கப்படும் விசயங்களால் கோபமும் வெறுப்பும்தான் ஏற்படுகின்றன. ஆனால் சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தாங்களாகவே மேற்கொள்ளும் விசயங்களால் தவம் செய்யும் மனப்பாங்கு ஏற்படுகிறது. தவத்தால் ஆனந்தமும் எற்படுகிறது. மக்களின் சேவைக்காக மேற்கொள்ளப்படும் தவத்தால் சிறிதளவுகூடத் துன்ப உணர்வு ஏற்படுவதில்லை.

வினோபா.
————————

துணிவு உள்ளவர்களே வெற்றி பெறத் தகுதி உடையவர்கள். அறிவோடு கூடிய துணிவுதான் நன்மை விளைவிக்கும்.
———————
சுயமாக சிந்தனை செய்யாத மனிதன் அடிமை, அவன் தனக்கு மட்டும் துரோகியல்ல, மற்றவர்களுக்கும் துரோகியாகிறான்.
இங்கர்சால்.
———————
வாழ்வில் நிகழும் ஒவ்வொரு சம்பவங்களின், அனுபவங்களின் காரண காரியத் தொடர்பை ஆராய வேண்டும். தனது வாழ்வு எவ்வித சட்டவரை முறைகளினால் இயங்குகிறது என்கிற சூட்சமத்தைப் புரிந்து கொள்ளும்போது மனிதன் புத்திசாலியான தலைவனாய் மாறுகிறான்.

டாக்டர். எம். எஸ். உதயமூர்த்தி.
———————
உடல் பலகீனமானவன் எப்படி பொறுமையாகப் பயிற்சி செய்நு
தன்னைப் பலப்படுத்திக் கொள்ள முடியமோ
அது போல பலகீனமாக எண்ணங்கள் உடைய மனிதன் சரியான
எண்ணங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம்
தன் வாழ்விற்கு வலிமை ஊட்ட முடியும்.
———————
சிந்திக்கத் தெரியாத பாமர மக்கள் தலைவர்களின் உணர்ச்சி
வசமான பேச்சில் மயங்கிப் போகிறார்கள். உண்மையை
உணரும்போது அவர்களது வாழ்க்கையில் பெரும்
பகுதியைக் கடந்து விடுகிறார்கள்.
– இல.செ.க
———————
நீங்கள் எப்படி வளர்ந்திருந்தால் நன்றாயிருக்குமோ
அப்படி உங்கள் குழந்தைகளை வளர்க்க முயலுங்கள்
– சபர்ஜன்
———————
தைரிய இதயம் படைத்த மனிதர்கள் பணி செய்து கொண்டே
போங்கள். சோர்வுற்று வீடாதீர்கள் இல்லை முடியாது என்று
சொல்வதே வேண்டாம். பணிபுரிந்து கொண்டே போங்கள்

-சுவாமி விவேகானந்தர்.
———————
பெர்ணாட்டிஷாவின் வறுமையே அவரை உலகப் புகழ் பெற்ற
எழுத்தாளர் ஆக்கியது. பகலில் வெளியில் செல்வதற்குக் கூட சரியான
உடையில்லை என்பதால் இரவு நேரங்களில் வெளியில் வந்ததாக
அவர் வாழ்க்கை வரலாறு கூறுகிறது.
———————————————————————


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 1998

கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது?
அவர்களும் நீயும்
மனிதனின் துயரங்களும் வாழ்வின் அர்த்தமும்
பத்து ஆண்டுகளில் 1,00,00,000 ரூபாய் சம்பாதிப்பது எப்படி?. . .
இதோ! வெற்றிக்கு ஓர் முன் உதாரணம்
உணர்ச்சிவசப்படுவதுதான் மனித நேயம் மறையக் காரணம்
வாசகர் கடிதம்
முன்னேற்றப்பாதை – தொடர்
சிந்தனைத்துளிகள்
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனை