Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

மாதத்தின் முதல் தேதியில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இனி ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலேயே சந்திப்போம். மனித மனம் சஞ்சலங்களுக்கு ஆட்படும் போதும் தளர்ச்சியுறும்போதும் தேவை உற்சாக வார்த்தைகளே. உங்களை உற்சாகப் படுத்தி தெளிவான குறிக்கோளுடன் சாதனை புரிய நாங்கள் மேற்கொண்டுள்ள பணியில் உங்களோடு இணைத்துச் செயல்பட தயாராய் உள்ளோம்.

வாழ்க்கையில் எல்லோருமே வெற்றியாளர்களாக முடிவதில்லை. ” பொழுது விடிந்தது பொழுது சாய்கிறது ” என்று பிறர் இழுத்த இழுப்புகளுக்கெல்லாம் வாழ்க்கையை நடத்துபவர்கள் வெற்றி பெறுவதில்லை. வாழ்க்கையில் வெற்றி பெற அவரவர்களுக்கு ஒரு திட்டம் வேண்டும். உங்களுடைய முன்னேற்றம் கல்வியிலா, செல்வத்திலோ, தொழிலிலா என்று தெளிவான திட்டம் தீட்டுங்கள்.

நீங்கள் திட்டமிடவும் அதனை செயல் முறைப்படுத்தி இந்த வாழ்க்கையை உன்னத நிலைக்கு கொண்டு வர வழிகாட்டவும் நாங்கள் தயாராய் இருக்கிறோம். இதுவரை உங்கள் வாழ்க்கைத் திட்டத்தை தீட்டாதவர்கள் உடன் செயலில் இறங்குங்கள். நாளைய உலகம் உங்கள் கையில்.

வாழ்த்துக்கள்
ஆசிரியர் குழு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 1998

கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது?
அவர்களும் நீயும்
மனிதனின் துயரங்களும் வாழ்வின் அர்த்தமும்
பத்து ஆண்டுகளில் 1,00,00,000 ரூபாய் சம்பாதிப்பது எப்படி?. . .
இதோ! வெற்றிக்கு ஓர் முன் உதாரணம்
உணர்ச்சிவசப்படுவதுதான் மனித நேயம் மறையக் காரணம்
வாசகர் கடிதம்
முன்னேற்றப்பாதை – தொடர்
சிந்தனைத்துளிகள்
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனை