Home » Articles » பகவத் கீதை படித்தபோது…..

 
பகவத் கீதை படித்தபோது…..


admin
Author:

1.) ரஜோ குணத்தில் இறப்பேன் கர்ம பற்றுடையோரிடையே பிறக்கிறான். தமோ குணத்தில் இறப்போன் மூட காப்பங்களில் தோன்றுகிறான். சமத்துவ குணம் மேலோங்கி நிற்கையில் இறப்பேன் மீண்டும் பிறப்பெடுக்க நேர்ந்தால் உத்தம ஞானிகளின் குடும்பங்களில் தோன்றுகிறான்.

2.) குணங்களைத் தவிர வேறு கர்த்தா இல்லையென்பதைக் கண்டு குணங்கள் சுழல்கின்றன என்பதை அறிந்தவன் முக்குணங்களையும் கடக்கிறான்.

3.) உயிர், சக்தி, பலம் , நோயின்மை, இன்பம் இவற்றை மிகுதிபடுத்துவன, சுவையுடையன, இளஞ்சூடானவை குறைவான காரம், உப்பு, புளி, கொண்டவை சத்துவ குணத்தைத் தரும்.

4.) மிகைபட உண்போனுக்கும். உணவற்றோனுக்கும், மிகுதியாக உறங்குவோனுக்கும், மிகுதியாக விழிப்போனுக்கும், அளவுக்குமீறி உடலால் மனதால் உழைப்போனுக்கும், உழைக்காதவனுக்கும் ஏகாந்த நிலைகிட்டாது.

5.) இத்தகைய ஏகாந்த நிலையிலே அறிவை தெளிவாக்கிக் கொள்ளல் வேண்டும்.

6,) அப்போது உயிர்கள் பிரிவுப்பட்டு நிற்பது போல தோன்றுகிறது என்றும் உண்மையில் எல்லாம் ஒன்றே, அந்த ஓன்றே பூதங்களைத் தாங்குவது அவற்றை உண்பது, பிறப்பிப்பது என்றறியலாம்.

7.) எவன் யானே கடவுள் என்பதை அறிவானோ, எவன் தானே எல்லாத்துள்ளும் உள்ளேன் என்பதை உணர்வானோ அவனே எல்லாமறிந்தோன்.

8.) அவனே எல்லாத் துயரங்களும், எல்லா அச்சங்களும், எல்லாக் கவலைகளும், எல்லா குறுகிய, தவறான ஆசைகளும் நீங்கி நிற்கும் ஜீவன் முக்தன்.

மேற்கூறியவை நாம் கீதையிலிருந்து விரும்பி தேர்ந்தெடுத்தவை. கீதை என்பது தெய்வத்தால் சொல்லப்பட்டவை என்ற நோக்கில் அதைப் படிக்கவில்லை. அதில் என்னதான் இருக்கிறது என்ற ஆர்வத்தில் சிந்தனையில் – படித்தோம்.
ஜீவன் முக்தன் வீட்டைத்துறந்து காட்டுக்குள் மறைவானா ? வாழ் நாளை மௌனத்திலேயே கழிப்பானா ? சித்து வேளைகள் செய்து, கூடுவிட்டு கூடு பாய்ந்து மக்களை ஆச்சரியப்படுத்துவனா ? இல்லை… இல்லை….

1.) இங்கு மக்கள் படும் துன்பங்களுக்கெல்லாம் அவர்களின் அறியாமையே காரணம் என்பதை உணர்வான்.

2.) இங்குள்ள அத்தனை தீமைகளும் நன்மையால் வெல்லப்படவே உள்ளன என்பதை உணர்ந்து நல்லோரோடு சேர்ந்து காரியத்தில்
இறங்குவான்.

3.) காரியம் பல செய்தபோதும் இயற்கை இந்த உடம்பால் ஏதோ செய்ய முயற்சிக்கிறது அவ்வளவுதான் எனச் செயலிலும்
செயலின்மையை உணர்வான்.

4.) சமுதாயத்தின் தீய சக்திகளின் கிளைகளை அழிப்பதில் கவனம் செலுத்தாமல் அவற்றுக்கு காரணமான வித்தினை அகற்ற
முயற்சிப்பான்.

5.) மக்களின் அவல வாழ்க்கைக்கு காரணமான அறியாமை, தன்னம்பிக்கை இன்மை, சலிப்பு, ஒன்றுபட முடியாமை, பிறர் கையை எதிர்பார்க்கும் மனோபாவம், உழைப்பில் அக்கறையின்றி விதி, ஜாதகம், நல்ல நேரம், தாயத்து, லாட்டரி டிக்கெட், இப்படி எல்லாவற்றையும் நீக்கி புதியதோர் பொதுமைச் சமுதாயத்தை உருவாக்க முயல்வான். எல்லோருக்கும் எல்லாம் என்பது இன்னும் பல காலம் பிடிக்கும். எல்லோருக்கும் எல்லா அடிப்படைத் தேவைகள் மட்டுமாவது நிறைவேற்ற தம்மால் ஆனதைச் செய்வோம் என்பான். அதைப் பெறுவத்றகு அவர்களைத் தயார்படுத்தவேண்டும் என்பான்.

தெய்வம் நீ என்று உணர் – பாரதி


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1998

மனிதாபிமானத்திற்கு ஈடு இணையில்லை
லஞ்சம் வாங்குபவர்களை ஒடுக்க அருமையான யோசனை
உலகம் உங்கள் கையில்
முயற்சி
இதோ . . . உங்கள் வாழ்நாளின் எண்ணிக்கை
பகவத் கீதை படித்தபோது…..
சிந்தனைத்துளிகள்
சிறகுகள் விரித்து. . .
குழந்தை வளர்ப்பு
நெஞ்சோடு நெஞ்சம்
இல.செ.கவின் சிந்தனை
இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்
திருப்பூரில் நடந்த 1 – 2 – 98 அன்று மனித நேய முன்னேற்ற பயிலரங்கம்
கவலையற்றிருத்தலே வீடு
முன்னேற்றப் பாதை
ஆற்று நீரை அணைகட்டி தேக்கி விட்டால்
உஷார் ! உஷார் ! உஷார் !
மனிதர்கள் வாழ்வின் அடிமைகள்
காலம் பொன் போன்றது (Time is Gold )