Home » Articles » கடனைத் தீர்க்க சில வழிகள்

 
கடனைத் தீர்க்க சில வழிகள்


admin
Author:

ஒவ்வொருக்கும் ஏதோ ஒரு வகையில் தெரிந்தும் தெரியாமலும் கடன் ஏற்பட்டு விடுகிறது.

கடன் ஏற்பட்டு சில நாள் கழித்து கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்கத் தொடங்கும் போதுதான் கடன் பற்றி கவலை ஏற்படுகிறது. பின்னர் அதைப்பற்றிய மனது சிந்தனை செய்து கொண்டு இருக்கும். மற்ற செயல்கள் செய்ய சோர்வு ஏற்படும். கடனை அடைக்க ஒரு வழி ஏற்படுத்திக் கொண்டால் மனச்சோர்வு நின்று விடும்.

முதலில் கடனை கண்டு பயப்படுவதை விட வேண்டும். எப்படியும் கட்டி விட முடியும் என்ற எண்ணம் வேண்டும்.

எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு என்பதை எப்படியும் கட்டிவிட முடியும் என்ற எண்ணம் வேண்டும்.

பின்னர் நமக்கு இருக்கும் கடன் எவ்வளவு என்பதை மொத்தமாக துல்லியமாக கணக்கிடுங்கள்.

அடுத்து உங்கள் வருமானம் எவ்வளவு இதில் எவ்வளவு சிக்கனம் செய்து சேமிக்க முடியும் என்று பாருங்கள்.

தினசரி 15 மணி நேரம் உழைக்க பழகிக் கொள்ள வேண்டும் காலையில் 5.30 மணிக்கு எழுந்திருக்கவேண்டும்.

கடனை குறுகிய காலத்தில் அடைக்க நினைக்காதீர்கள். 5 வருடம் என்று நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு 60 மாதம் இருக்கிறது உங்கள் கடனை 60 மடங்காக பிரித்து ஒவ்வொரு மாதமும் வட்டியும் முதலும் சேர்த்து கட்டி விடுங்கள்.

கடன் கொடுத்தவர்களிடம் உங்கள் நிலையை விளக்கிச் சொல்லி உங்கள் பணத்தை உறுதியாக கொடுத்து விடுவேன் என்று தவனை வாங்கி கொள்ளுங்கள்.

வீட்டில் உள்ள மனைவி மக்கள் அனைவருக்கும் இருக்கும் கடனை விளக்கிச் சொல்லி சிக்கனமாக இருக்கச் சொல்லுங்கள்.

முக்கியமாக, நம்மோடு பழகிக் கொண்டு இருக்கிறவர்களின் வாழ்க்கை முறைகளையும் பக்கத்து வீட்டுக் காரரின் வாழ்க்கை முறைகளையும் பணம் இருந்தால் கடைப்பிடிக்கலாம் பணம் இல்லாதபோது அதை பின்பற்ற முயற்சி செய்யக் கூடாது.

என்ன ஆனாலும் சரி கடன் அடையும் வரை எந்தப் புதுப் பொருளும் வாங்குவதில்லை என்று உறுதி எடுக்க கொள்ள வேண்டும்.

முடிந்த வரைக்கும் உணவு விடுதிகளில் சாப்பிடுவதையும் சினிமாவையும் தவிர்க்க வேண்டும்.

எல்லாவற்றிக்கும் மேலே முக்கியமாக நமக்கு எப்படி எப்போது எந்த நிலையில் கடன் ஏற்பட்டது என்று தெரிந்து அந்த நிலையை நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். பின்னர் அந்த மாதிரி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.

நன்றாகப் பார்த்தால் சில திடீர் முடிவுகளைத் தவிர்க்க வேண்டும்.

எதையும் பணம் இருந்தால்தான் வாங்க வேண்டும் இல்லாவிட்டால் நடந்து செல்லவும் தயராக இருக்கவேண்டும்.

இப்படிக் கொஞ்ச நாட்கள் இருந்தால் அறவே கடன் இருக்காது எந்த வேலையாக இருந்தாலும் செய்ய வேண்டும். வெட்டி கௌரவம் பார்க்கக் கூடாது. நம் பழக்கம் பின்னால் நம் குழந்தைகளுக்கும் ஏற்பட்டு கடன் இல்லாமல் இருப்பார்கள்.

வாழ்க வளமுடன்


Share
 

8 Comments

  1. shanmugam says:

    வெரி குட் அட்வைசே

  2. sarah says:

    ரொம்ப நன்றி
    எனக்கு பார்ட் டைம் வேலை வேண்டும் சென்னையில் முடிந்த உதவி பண்ணுங்க

  3. kirthiga says:

    good advice but naan kanthu vatti kadan vangi avasthai padugiren adhai theerkq edhavadhu vali unda. please help pannunga

  4. srinivasan says:

    ரொம்ப நன்றி.!
    இதுபோல வேறு வழிகள் இருந்தால் mail அனுப்புகள்.
    நன்றி

  5. MAHESHKUMAR says:

    very good advice

  6. Veerapandi says:

    நன்றி

Post a Comment


 

 


January 1998

வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித் தன்மைகள்
தினமும் பல கோடி ரூபாயை செலவாக்கும் மனிதர்
தொழில் துவங்க தாய் நாடு
உயர்வுக்கு உயரம் தடையல்ல:
சிந்தனைத் துளிகள்-2
காலப்பணம்
போட்டியாளர்களுக்கே வெற்றி
'' என் பகைவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன்."
எங்கும் தமிழர் எதிலும் தமிழர்
தனிமனிதனும் சமுதாயமும்
சிந்தனைத் துளிகள் – 1
முன்னேற்றப்பாதை
சாதனையாளர்களைச் சந்தித்தபோது
ஜாதியா மதமா
சிந்தனைத் துளிகள்
கடனைத் தீர்க்க சில வழிகள்
குறளமுதம்
நாம் விரும்பியது எல்லாம் அடைய சுவாமி விவேகானந்தர் கூறும் வழி
நெஞ்சோடு நெஞ்சம்
இல.செ. க வின் சிந்தனை